திருப்புகழ் 1175 பாணிக்கு உட்படாது (பொதுப்பாடல்கள்)

Thiruppugal 1175 Panikkuutpadadhu

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தானத்தத் தனான தானன தானத்தத் தனான தானன
தானத்தத் தனான தானன – தந்ததான

பாணிக்குட் படாது சாதகர் காணச்சற் றொணாது வாதிகள்
பாஷிக்கத் தகாது பாதக – பஞ்சபூத


பாசத்திற்படாது வேறொரு பாயத்திற் புகாது பாவனை
பாவிக்கப் பெறாது வாதனை – நெஞ்சமான

ஏணிக்கெட் டொணாது மீதுயர் சேணுக்குச் சமான நூல்வழி
யேறிபபற் றொணாது நாடினர் – தங்களாலும்


ஏதுச்செப் பொணாத தோர்பொருள் சேரத்துக் கமாம கோததி
யேறச்செச் சைநாறு தாளைவ – ணங்குவேனோ

ஆணிப்பொற் ப்ரதாப மேருவை வேலிட்டுக் கடாவி வாசவன்
ஆபத்தைக் கெடாநி சாசரர் – தம்ப்ரகாசம்


ஆழிச்சத் ரசாயை நீழலி லாதித்தப் ப்ரகாச நேர்தர
ஆழிச்சக் ரவாள மாள்தரும் – எம்பிரானே

மாணிக்க ப்ரவாள நீலம தாணிப்பொற் கிராதைநூபுர
வாசப்பத் மபாத சேகர – சம்புவேதா

வாசிக்கப் படாத வாசகம் ஈசர்க்குச் சுவாமி யாய்முதல்
வாசிப்பித் ததேசி காசுரர் – தம்பிரானே.

பதம் பிரித்தது

தானத்தத் தனான தானன தானத்தத் தனான தானன
தானத்தத் தனான தானன – தந்ததான

பாணிக்கு உட்படாது சாதகர் காணச் சற்று ஒணாது வாதிகள்
பாஷிக்கத் தகாது பாதக – பஞ்ச பூதப்

பாசத்தில் படாது வேறு ஒரு உபாயத்தில் புகாது பாவனை
பாவிக்கப் பெறாது வாதனை – நெஞ்சமான

ஏணிக்கு எட்டொணாது மீது உயர் சேணுக்குச் சமான நூல்வழி
ஏறிப் பற்ற ஒணாது நாடினர் – தங்களாலும்

ஏதுச் செப்ப ஒணாதது ஓர் பொருள் சேரத் துக்கமாம் மகா உததி
ஏறச் செச்சை நாறு தாளை – வணங்குவேனோ

ஆணிப் பொன் ப்ரதாப மேருவை வேல் இட்டுக் கடாவி வாசவன்
ஆபத்தைக் கெடா நிசாசரர் – தம் ப்ரகாசம்

ஆழிச் சத்ர சாயை நீழலில் ஆதித்த ப்ரகாச நேர் தர
ஆழிச் சக்ரவாளம் ஆள் தரும் – எம்பிரானே

மாணிக்க ப்ரவாள நீலம் மதாணி பொன் கிராதை நூபுர
வாசப் பத்ம பாத சேகர – சம்பு வேதா

வாசிக்கப் படாத வாசகம் ஈசர்க்குச் சுவாமியாய் முதல்
வாசிப்பித்த தேசிகா சுரர் – தம்பிரானே.

English

pANik utpadAdhu sAdhakar kANa satroNAdhu vAdhigaL
bAshikkath thagAdhu pAthaka – panchabUtha

pAsaththil padAdhu vERor ubAyaththil pugAdhu bAvanai
bAvikkap peRAdhu vAdhanai – nenjamAna

ENik kettoNAdhu meedhuyar sENukku samAna nUl vazhi
yERip patroNAdhu nAdinar – thangaLAlum

Edhuc ceppoNAdha dhOrporuL sEra dhukkamA mahOdhadhi
yERa chechchai nARu thALai va – NanguvEnO

ANip poRprathApa mEruvai vElittuk kadAvi vAsavan
Abaththaik kedA nisAcharar – thamprakAsam

Azhi chathra sAyai neezhalil Adhiththa prakAsa nErthara
Azhich chakravALa mALtharum – embirAnE

mANikka pravALa neela madhANip pOR kirAdhai nUpura
vAsa padhma pAdha sEkara – sambuvEdhA

vAsikkap padAdha vAsakam eesarkku suvAmiyAy mudhal
vAsippiththa dhEsikA surar – thambirAnE.

English Easy Version

pANik utpadAdhu sAdhakar kANa satroNAdhu vAdhigaL
bAshikkath thagAdhu pAthaka – panchabUtha

pAsaththil padAdhu vERor ubAyaththil pugAdhu bAvanai
bAvikkap peRAdhu vAdhanai – nenjamAna

ENik kettoNAdhu meedhuyar sENukku samAna nUl vazhi
yERip patroNAdhu nAdinar – thangaLAlum

Edhuc ceppoNAdhadhu OrporuL sEra dhukkamA mahOdhadhi
yERa chechchai nARu thALai – vaNanguvEnO

ANip poRprathApa mEruvai vElittuk kadAvi vAsavan
Abaththaik kedA nisAcharar – thamprakAsam

Azhi chathra sAyai neezhalil Adhiththa prakAsa nErthara
Azhich chakravALa mALtharum – embirAnE

mANikka pravALa neela madhANi pOR kirAdhai nUpura
vAsa padhma pAdha sEkara – sambuvEdhA

vAsikkap padAdha vAsakam eesarkku suvAmiyAy mudhal vAsippiththa dhEsikA surar – thambirAnE