திருப்புகழ் 1176 பால்மொழி படித்து (பொதுப்பாடல்கள்)

Thiruppugal 1176 Palmozhipadiththu

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தானன தனத்தத் தாத்த தானன தனத்தத் தாத்த
தானன தனத்தத் தாத்த – தனதான

பால்மொழி படித்துக் காட்டி ஆடையை நெகிழ்த்துக் காட்டி
பாயலி லிருத்திக் காட்டி – யநுராகம்

பாகிதழ் கொடுத்துக் காட்டி நூல்களை விரித்துக் காட்டி
பார்வைகள் புரட்டிக் காட்டி – யுறவாகி

மேல்நக மழுத்திக் காட்டி தோதக விதத்தைக் காட்டி
மேல்விழு நலத்தைக் காட்டு – மடவார்பால்

மேவிடு மயக்கைத் தீர்த்து சீர்பத நினைப்பைக் கூட்டு
மேன்மையை யெனக்குக் காட்டி – யருள்வாயே

காலனை யுதைத்துக் காட்டி யாவியை வதைத்துக் காட்டி
காரணம் விளைத்துக் காட்டி – யொருகாலங்

கானினில் நடித்துக் காட்டி யாலமு மிடற்றிற் காட்டி
காமனை யெரித்துக் காட்டி – தருபாலா

மாலுற நிறத்தைக் காட்டி வேடுவர் புனத்திற் காட்டில்
வாலிப மிளைத்துக் காட்டி – அயர்வாகி

மான்மகள் தனத்தைச் சூட்டி ஏனென அழைத்துக் கேட்டு
வாழ்வுறு சமத்தைக் காட்டு – பெருமாளே.

பதம் பிரித்தது

தானன தனத்தத் தாத்த தானன தனத்தத் தாத்த
தானன தனத்தத் தாத்த – தனதான

பால் மொழி படித்துக் காட்டி ஆடையை நெகிழ்த்துக் காட்டி
பாயலில் இருத்திக் காட்டி – அநுராகம்

பாகு இதழ் கொடுத்துக் காட்டி நூல்களை விரித்துக் காட்டி
பார்வைகள் புரட்டிக் காட்டி – உறவாகி

மேல் நகம் அழுத்திக் காட்டி தோதக விதத்தைக் காட்டி
மேல் விழு(ம்) நலத்தைக் காட்டு(ம்) – மடவார் பால்

மேவிடு(ம்) மயக்கைத் தீர்த்து சீர் பத நினைப்பைக் கூட்டு(ம்)
மேன்மையை எனக்குக் காட்டி – அருள்வாயே

காலனை உதைத்துக் காட்டி ஆவியை வதைத்துக் காட்டி
காரணம் விளைத்துக் காட்டி – ஒரு காலம்

கானினில் நடித்துக் காட்டி ஆலமும் மிடற்றில் காட்டி
காமனை எரித்துக் காட்டி – தரு பாலா

மால் உற நிறத்தைக் காட்டி வேடுவர் புனத்தில் காட்டில்
வாலிபம் இளைத்துக் காட்டி – அயர்வு ஆகி

மான் மகள் தனத்தைச் சூட்டி ஏன் என அழைத்துக் கேட்டு
வாழ்வு உறு சமத்தைக் காட்டு(ம்) – பெருமாளே.

English

pAlmozhi padiththuk kAtti Adaiyai nekizhththuk kAtti
pAyali liruththik kAtti – yanurAkam

pAkithazh koduththuk kAtti nUlkaLai viriththuk kAtti
pArvaikaL purattik kAtti – yuRavAki

mElnaka mazhuththik kAtti thOthaka vithaththaik kAtti
mElvizhu nalaththaik kAttu – madavArpAl

mEvidu mayakkaith theerththu seerpatha ninaippaik kUttu
mEnmaiyai yenakkuk kAtti – yaruLvAyE

kAlanai yuthaiththuk kAtti yAviyai vathaiththuk kAtti
kAraNam viLaiththuk kAtti – yorukAlam

kAninil nadiththuk kAtti yAlamu midatRiR kAtti
kAmanai yeriththuk kAtti – tharupAlA

mAluRa niRaththaik kAtti vEduvar punaththiR kAttil
vAlipa miLaiththukkAtti – ayarvAki

mAnmakaL thanaththaic cUtti Enena azhaiththuk kEttu
vAzhvuRu samaththaik kAttu – perumALE.

English Easy Version

pAl mozhi padiththuk kAtti Adaiyai nekizhththuk kAtti
pAyalil iruththik kAtti – anurAkam

pAku ithazh koduththuk kAtti nUlkaLai viriththuk kAtti
pArvaikaL purattik kAtti – uRavAki

mEl nakam azhuththik kAtti thOthaka vithaththaik kAtti
mEl vizhu(m) nalaththaik kAttu(m) – madavAr pAl

mEvidu(m) mayakkaith theerththu seer patha ninaippaik kUttu(m)
mEnmaiyai enakkuk kAtti – aruLvAyE

kAlanai uthaiththuk kAtti Aviyai vathaiththuk kAtti
kAraNam viLaiththuk kAtti – oru kAlam

kAninil nadiththuk kAtti Alamum midatRil kAtti
kAmanai eriththuk kAtti – tharu pAlA

mAl uRa niRaththaik kAtti vEduvar punaththil kAttil
vAlipam iLaiththuk kAtti – ayarvu Aki

mAn makaL thanaththais cUtti En ena azhaiththuk kEttu
vAzhvu uRu samaththaik kAttu(m) – perumALE