திருப்புகழ் 1177 புகரில் சேவல (பொதுப்பாடல்கள்)

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனன தானன தந்தன தந்தன
தனன தானன தந்தன தந்தன
தனன தானன தந்தன தந்தன – தனதான

புகரில் சேவல தந்துர சங்க்ரம
நிருதர் கோபக்ர வுஞ்சநெ டுங்கிரி
பொருத சேவக குன்றவர் பெண்கொடி – மணவாளா

புனித பூசுர ருஞ்சுர ரும்பணி
புயச பூதர என்றிரு கண்புனல்
பொழிய மீமிசை யன்புது ளும்பிய – மனனாகி

அகில பூதவு டம்புமு டம்பினில்
மருவு மாருயி ருங்கர ணங்களு
மவிழ யானுமி ழந்தஇ டந்தனி – லுணர்வாலே

அகில வாதிக ளுஞ்சம யங்களும்
அடைய ஆமென அன்றென நின்றதை
யறிவி லேனறி யும்படி யின்றருள் – புரிவாயே

மகர கேதன முந்திகழ் செந்தமிழ்
மலய மாருத மும்பல வெம்பரி
மளசி லீமுக மும்பல மஞ்சரி – வெறியாடும்

மதுக ராரம்வி குஞ்சணி யுங்கர
மதுர கார்முக மும்பொர வந்தெழு
மதன ராஜனை வெந்துவி ழும்படி – முனிபால

முகிழ்வி லோசன ரஞ்சிறு திங்களு
முதுப கீரதி யும்புனை யுஞ்சடை
முடியர் வேதமு நின்றும ணங்கமழ் – அபிராமி

முகர நூபுர பங்கய சங்கரி
கிரிகு மாரித்ரி யம்பகி தந்தருள்
முருக னேசுர குஞ்சரி ரஞ்சித – பெருமாளே.

பதம் பிரித்தது

தனன தானன தந்தன தந்தன
தனன தானன தந்தன தந்தன
தனன தானன தந்தன தந்தன – தனதான

புகரில் சேவல தந்துர சங்க்ரம
நிருதர் கோப க்ரவுஞ்சநெ டுங்கிரி
பொருத சேவக குன்றவர் பெண்கொடி – மணவாளா

புனித பூசுரருஞ் சுரரும்பணி
புயச பூதர என்று இரு கண்புனல்
பொழிய மீமிசை யன்பு துளும்பிய – மனனாகி

அகில பூதவுடம்பும் உடம்பினில்
மருவு மாருயிரும் கரணங்களும்
அவிழ யானுமிழந்த இடந்தனில் – உணர்வாலே

அகில வாதிகளுஞ்சம யங்களும்
அடைய ஆமென அன்றென நின்றதை
அறிவி லேனறி யும்படி இன்றருள் – புரிவாயே

மகர கேதன முந்திகழ் செந்தமிழ்
மலய மாருதமும் பல வெம்பரிமள
சிலீமுகமும் பல மஞ்சரி – வெறியாடும்

மதுக ராரம் விகுஞ்சணியும் கர
மதுர கார்முகமும் பொர வந்தெழு
மதன ராஜனை வெந்துவிழும்படி – முனி பால

முகிழ்விலோசனர் அஞ்சிறு திங்களு
முதுபகீரதியும் புனையுஞ்சடைமுடியர்
வேதமு நின்று மணங்கமழ் – அபிராமி

முகர நூபுர பங்கய சங்கரி
கிரிகு மாரித்ரி யம்பகி தந்தருள்
முருகனே சுர குஞ்சரி ரஞ்சித – பெருமாளே

English

pugaril sEvala thandhura sangrama
nirudhar kOpa kravuncha nedungiri
porudha sEvaka kundravar peNkodi – maNavALa

punidha bUsurarun surarum paNi
buyaja bUdhara endriru kaN punal
pozhiya mee misai anbu thuLumbiya – mananAgi

akila bUdha udambum udambinil
maruvu mAr uyirung karaNangalum
avizha yAnum izhandha idanthanil – uNarvAlE

akila vAdhigalun samayangaLum
adaiya Amena andrena nindradhai
aRivilEn aRiyumpadi indraruL – purivAyE

makara kEdhanamun thigazh senthamizh
malaya mAruthamum pala vempari
maLa sileemukamum pala manjari – veRiyAdum

madhuka rAramvi kunjaNiyun kara
madhura kArmukamum pora vandhezhu
madhana rAjanai vendhu vizhumpadi – munipAla

mugizh vilOchana ransiRu thingaLu
mudhu bageerathiyum punaiyun sadai
mudiyar vEdhamu nindru maNang kamazh – abirAmi

mukara nUpura pangaya sankari
giri kumAri thriyambaki thandharuL
muruganE sura kunjari ranjitha – perumALE.

English Easy Version

pugaril sEvala thandhura sangrama
nirudhar kOpa kravuncha nedungiri
porudha sEvaka kundravar peNkodi – maNavALa

punidha bUsurarun surarum paNi
buyaja bUdhara endru iru kaN punal
Pozhiya mee misai anbu thuLumbiya – mananAgi

akila bUdha udambum udambinil
maruvu mAr uyirum karaNangalum
Avizha yAnum izhandha idanthanil – uNarvAlE

akila vAdhigalun samayangaLum
adaiya Amena andrena nindradhai
aRivilEn aRiyumpadi indraruL – purivAyE

makara kEdhanamun thigazh senthamizh
malaya mAruthamum pala vemparimaLa
Sileemukamum pala manjari – veRiyAdum

madhuka rAramvi kunjaNiyun kara
madhura kArmukamum pora vandhezhu
madhana rAjanai vendhu vizhumpadi – muni pAla

mugizh vilOchanar ansiRu thingaLu
mudhu bageerathiyum punaiyun
sadai mudiyar vEdhamu nindru maNang kamazh – abirAmi

mukara nUpura pangaya sankari
giri kumAri thriyambaki thandharuL
muruganE sura kunjari ranjitha – perumALE