திருப்புகழ் 1178 புருவத்தை நெறித்து (பொதுப்பாடல்கள்)

Thiruppugal 1178 Puruvaththaineriththu

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனனத்த தனத்த தனத்தன
தனனத்த தனத்த தனத்தன
தனனத்த தனத்த தனத்தன – தனதான

புருவத்தை நெறித்து விழிக்கயல்
பயிலிட்டு வெருட்டி மதித்திரு
புதுவட்டை மினுக்கி யளிக்குல – மிசைபாடும்

புயல்சற்று விரித்து நிரைத்தொளி
வளையிட்ட கரத்தை யசைத்தகில்
புனைமெத்தை படுத்த பளிக்கறை – தனிலேறிச்

சரசத்தை விளைத்து முலைக்கிரி
புளகிக்க அணைத்து நகக்குறி
தனைவைத்து முகத்தை முகத்துட – னுறமேவித்

தணிவித்தி ரதத்த தரத்துமி
ழமுதத்தை யளித்து வுருக்கிகள்
தருபித்தை யகற்றி யுனைத்தொழ – முயல்வேனோ

பரதத்தை யடக்கி நடிப்பவர்
த்ரிபுரத்தை யெரிக்க நகைப்பவர்
பரவைக்குள் விடத்தை மிடற்றிடு – பவர்தேர்கப்

பரையுற்ற கரத்தர் மிகப்பகி
ரதியுற்ற சிரத்தர் நிறத்துயர்
பரவத்தர் பொருப்பி லிருப்பவ – ருமையாளர்

சுரர்சுத்தர் மனத்துறை வித்தகர்
பணிபத்தர் பவத்தை யறுப்பவர்
சுடலைப்பொ டியைப்ப ரிசிப்பவர் – விடையேறுந்

துணையொத்த பதத்த ரெதிர்த்திடு
மதனைக்க டிமுத்தர் கருத்தமர்
தொலைவற்ற க்ருபைக்கு ளுதித்தருள் – பெருமாளே.

பதம் பிரித்தது

தனனத்த தனத்த தனத்தன
தனனத்த தனத்த தனத்தன
தனனத்த தனத்த தனத்தன – தனதான

புருவத்தை நெறித்து விழி கயல்
பயிலிட்டு வெருட்டி மதித்த இரு
புது வட்டை மினுக்கி அளிக் குலம் – இசை பாடும்

புயல் சற்று விரித்து நிரைத்து ஒளி
வளை இட்ட கரத்தை அசைத்து அகில்
புனை மெத்தை படுத்த பளிக்கு அறை – தனில் ஏறிச்

சரசத்தை விளைத்து முலைக் கிரி
புளகிக்க அணைத்து நகக் குறி
தனை வைத்து முகத்தை முகத்துடன் – உற மேவித்

தணிவித்து இரதத்து அதரத்து உமிழ்
அமுதத்தை அளித்து உருக்கிகள்
தரு(ம்) பித்தை அகற்றி உனைத் தொழ – முயல்வேனோ

பரதத்தை அடக்கி நடிப்பவர்
த்ரி புரத்தை எரிக்க நகைப்பவர்
பரவைக்குள் விடத்தை மிடற்று இடு – பவர் தேர்

கப்பரை உற்ற கரத்தர் மிகப் பகிரதி
உற்ற சிரத்தர் நிறத்து உயர்
பரவு அத்தர் பொருப்பில் இருப்பவர் – உமை ஆளர்

சுரர் சுத்தர் மனத்து உறை வித்தகர்
பணி பத்தர் பவத்தை அறுப்பவர்
சுடலைப் பொடியைப் பரிசிப்பவர் – விடை ஏறும்

துணை ஒத்த பதத்தர் எதிர்த்திடு(ம்)
மதனைக் கடி முத்தர் கருத்து அமர்
தொலைவு அற்ற கிருபைக்குள் உதித்து அருள் – பெருமாளே

English

puruvaththai neRiththu vizhikkayal
payilittu verutti mathiththiru
puthuvattai minukki yaLikkula – misaipAdum

puyalsatRu viriththu niraiththoLi
vaLaiyitta karaththai yasaiththakil
punaimeththai paduththa paLikkaRai – thanilERi

sarasaththai viLaiththu mulaikkiri
puLakikka aNaiththu nakakkuRi
thanaivaiththu mukaththai mukaththuda – nuRamEvith

thaNiviththi rathaththa tharaththumi
zhamuthaththai yaLiththu vurukkikaL
tharupiththai yakatRi yunaiththozha – muyalvEnO

parathaththai yadakki nadippavar
thripuraththai yerikka nakaippavar
paravaikkuL vidaththai midatRidu – pavarthErkap

paraiyutRa karaththar mikappaki
rathiyutRa siraththar niRaththuyar
paravaththar poruppi liruppava – rumaiyALar

surarsuththar manaththuRai viththakar
paNipaththar pavaththai yaRuppavar
sudalaippo diyaippa risippavar – vidaiyERun

thuNaiyoththa pathaththa rethirththidu
mathanaikka dimuththar karuththamar
tholaivatRa krupaikku LuthiththaruL – perumALE.

English Easy Version

puruvaththai neRiththu vizhi kayal
payilittu verutti mathiththa iru
puthu vattai minukki aLik kulam – isai pAdum

puyal satRu viriththu niraiththu oLi
vaLai itta karaththai asaiththu akil
punai meththai paduththa paLikku aRai – thanil ERi

sarasaththai viLaiththu mulaik kiri
puLakikka aNaiththu nakak kuRi
thanai vaiththu mukaththai mukaththudan – uRa mEvith

thaNiviththu irathaththu atharaththu umizh
amuthaththai aLiththu urukkikaL
tharu(m) piththai akatRi unaith thozha – muyalvEnO

parathaththai adakki nadippavar
thri puraththai erikka nakaippavar
paravaikkuL vidaththai midatRu – idupavar thEr

kapparai utRa karaththar mikap pakirathi
utRa siraththar niRaththu uyar
paravu aththar poruppil iruppavar – umai ALar

surar suththar manaththu uRai viththakar
paNi paththar pavaththai aRuppavar
sudalaip podiyaip parisippavar – vidai ERum

thuNai oththa pathaththar ethirththidu(m)
mathanaik kadi muththar karuththu amar
tholaivu atRa kirupaikkuL uthiththu aruL – perumALE