திருப்புகழ் 118 இரு செப்பென (பழநி)

Thirupugal 118 Iruseppena

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனனத் தனனத் தனனத் தனனத்
தனனத் தனனத் – தனதான

இருசெப் பெனவெற் பெனவட் டமுமொத்
திளகிப் புளகித் – திடுமாதர்

இடையைச் சுமையைப் பெறுதற் குறவுற்
றிறுகக் குறுகிக் – குழல்சோரத்

தருமெய்ச் சுவையுற் றிதழைப் பருகித்
தழுவிக் கடிசுற் – றணைமீதே

சருவிச் சருவிக் குனகித் தனகித்
தவமற் றுழலக் – கடவேனோ

அரிபுத் திரசித் தஜனுக் கருமைக்
குரியத் திருமைத் – துனவேளே

அடல்குக் குடநற் கொடிபெற் றெதிருற்
றசுரக் கிளையைப் – பொருவோனே

பரிவுற் றரனுக் கருணற் பொருளைப்
பயனுற் றறியப் – பகர்வோனே

பவனப் புவனச் செறிவுற் றுயர்மெய்ப்
பழநிக் குமரப் – பெருமாளே.

பதம் பிரித்தது

தனனத் தனனத் தனனத் தனனத்
தனனத் தனனத் – தனதான

இரு செப்பு என வெற்பு என வட்டமும் ஒத்து
இளகிப் புளகித்திடு(ம்) – மாதர்

இடையைச் சுமையைப் பெறுதற்கு உறவு
உற்று இறுகக் குறுகிக் – குழல் சோரத்

தரு மெய்ச் சுவை உற்று இதழைப் பருகித்
தழுவிக் கடி சுற்று – அணை மீதே

சருவிச் சருவிக் குனகித் தனகித்
தவம் அற்று உழலக் – கடவேனோ

அரி புத்திர சித்தஜனுக்கு அருமைக்கு
உரியத் திரு மைத்துன – வேளே

அடல் குக்குட நல் கொடி பெற்று எதிர்
உற்ற அசுரக் கிளையைப் – பொருவோனே

பரிவு உற்று அரனுக்கு அருள் நல் பொருளைப்
பயன் உற்று அறியப் – பகர்வோனே

பவனப் புவனச் செறிவு உற்று உயர் மெய்ப்
பழநிக் குமரப் – பெருமாளே.

English

iruchep penaveR penavat tamumoth
thiLakip puLakith – thidumAthar

idaiyaic chumaiyaip peRuthaR kuRavut
RiRukak kuRukik – kuzhalsOrath

tharumeyc chuvaiyut Rithazhaip parukith
thazhuvik kadichut – RaNaimeethE

saruvic charuvik kunakith thanakith
thavamat Ruzhalak – kadavEnO

ariputh thirasith thajanuk karumaik
kuriyath thirumaith – thunavELE

adalkuk kudanaR kodipet Rethirut
Rasurak kiLaiyaip – poruvOnE

parivut Raranuk karuNaR poruLaip
payanut RaRiyap – pakarvOnE

pavanap puvanac cheRivut Ruyarmeyp
pazhanik kumarap – perumALE.

English Easy Version

iru cheppu ena veRpu ena vattamum oththu
iLakip puLakiththidu(m) – mAthar

idaiyaic chumaiyaip peRuthaRku uRavu
utRu iRukak kuRukik – kuzhal sOrath

tharu meyc chuvai utRu ithazhaip parukith
thazhuvik kadi chutRu – aNai meethE

saruvic charuvik kunakith thanakith
thavam atRu uzhalak – kadavEnO

ari puththira siththajanukku arumaikku
uriyath thiru maiththuna – vELE

adal kukkuda nal kodi petRu ethir utRa
asurak kiLaiyaip – poruvOnE

parivu utRu aranukku aruL nal poruLaip
payan utRu aRiyap – pakarvOnE

pavanap puvanac cheRivu utRu uyar meyp
pazhanik kumarap – perumALE.