திருப்புகழ் 1180 பூசல்தரும் கயலும் (பொதுப்பாடல்கள்)

Thiruppugal 1180 Pusaltharumkayalum

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தானன தந்தன தந்த தந்தன
தானன தந்தன தந்த தந்தன
தானன தந்தன தந்த தந்தன – தனதான

பூசல்த ருங்கய லும்பொ ருந்திய
வாசந றுங்குழ லுந்து லங்கிய
பூரண கும்பமெ னுந்த னங்களு – மடமாதர்

போகம டங்கலை யும்பு ணர்ந்தநு
ராகம்வி ளைந்துவ ரும்பெ ரும்பிழை
போயக லும்படி யொன்றை யன்புற – நினையாதே

ஆசையெ னும்படி யுந்த னங்களு
மோகைந டந்திட வுந்தி னங்களும்
ஆருட னும்பகை கொண்டு நின்றுற – நடமாடி

ஆடிய பம்பர முன்சு ழன்றெதி
ரோடிவி ழும்படி கண்ட தொன்றுற
ஆவிய கன்றுவி டும்ப யங்கெட – அருள்வாயே

வாசவ னன்புவி ளங்க நின்றசு
ரேசர்கு லங்கள டங்க லுங்கெட
வானவர் நின்றுதி யங்கு கின்றதொர் – குறைதீர

வாரிய திர்ந்துப யந்து நின்றிட
மேருஅ டங்கஇ டிந்து சென்றிட
வாகைபு னைந்தொரு வென்றி கொண்டரு – ளிளையோனே

வீசிய தென்றலொ டந்தி யும்பகை
யாகமு யங்கஅ நங்க னும்பொர
வேடையெ னும்படி சிந்தை நொந்திட – அடைவாக

வேடர்செ ழும்புன வஞ்சி யஞ்சன
வேலினு ளங்கள்க லங்கி யின்புற
வேளையெ னும்படி சென்றி றைஞ்சிய – பெருமாளே.

பதம் பிரித்தது

தானன தந்தன தந்த தந்தன
தானன தந்தன தந்த தந்தன
தானன தந்தன தந்த தந்தன – தனதான

பூசல் தரும் கயலும் பொருந்திய
வாச நறும் குழலும் துலங்கிய
பூரண கும்பம் எனும் தனங்களும் – மட மாதர்

போகம் அடங்கலையும் புணர்ந்து
அநுராகம் விளைந்து வரும் பெரும் பிழை
போய் அகலும்படி ஒன்றை அன்புற – நினையாதே

ஆசை எனும்படியும் தனங்களும்
ஓகை நடந்திடவும் தினங்களும்
ஆருடனும் பகை கொண்டு நின்று உற – நடமாடி

ஆடிய பம்பர(ம்) முன் சுழன்று எதிர்
ஓடி விழும்படி கண்டது ஒன்று உற
ஆவி அகன்று விடும் பயம் கெட – அருள்வாயே

வாசவன் அன்பு விளங்க நின்ற அசுரேசர்
குலங்கள் அடங்கலும் கெட
வானவர் நின்று தியங்குகின்றது ஒர் – குறை தீர

வாரி அதிர்ந்து பயந்து நின்றிட
மேரு அடங்க இடிந்து சென்றிட
வாகை புனைந்து ஒரு வென்றி கொண்டு அருள் – இளையோனே

வீசிய தென்றலொடு அந்தியும் பகையாக
முயங்க அநங்கனும் பொர
வேடை எனும்படி சிந்தை நொந்திட – அடைவாக

வேடர் செழும் புன வஞ்சி அஞ்சன
வேலின் உ(ள்)ளங்கள் கலங்கி இன்புற
வேளை எனும்படி சென்று இறைஞ்சிய – பெருமாளே

English

pUsaltha rumkaya lumpo runthiya
vAsana Rumkuzha lunthu langiya
pUraNa kumpame nuntha nangaLu – madamAthar

pOkama dangalai yumpu Narnthanu
rAkamvi Lainthuva rumpe rumpizhai
pOyaka lumpadi yonRai yanpuRa – ninaiyAthE

Asaiye numpadi yuntha nangaLu
mOkaina danthida vunthi nangaLum
Aruda numpakai koNdu ninRuRa – nadamAdi

Adiya pampara munsu zhanRethi
rOdivi zhumpadi kaNda thonRuRa
Aviya kanRuvi dumpa yangeda – aruLvAyE

vAsava nanpuvi Langa ninRasu
rEsarku langaLa danga lumkeda
vAnavar ninRuthi yangu kinRathor – kuRaitheera

vAriya thirnthupa yanthu ninRida
mErua dangai dinthu senRida
vAkaipu nainthoru venRi koNdaru – LiLaiyOnE

veesiya thenRalo danthi yumpakai
yAkamu yangA nanga numpora
vEdaiye numpadi sinthai nonthida – adaivAka

vEdarse zhumpuna vanji yanjana
vElinu LangaLka langi yinpuRa
vELaiye numpadi senRi Rainjiya – perumALE.

English Easy Version

pUsal tharum kayalum porunthiya
vAsa naRum kuzhalum thulangiya
pUraNa kumpam enum thanangaLum – mada mAthar

pOkam adangalaiyum puNarnthu
anurAkam viLainthu varum perum pizhai
pOy akalumpadi onRai anpuRa – ninaiyAthE

Asai enumpadiyum thanangaLum
Okai nadanthidavum thinangaLum
Arudanum pakai koNdu ninRu uRa – nadamAdi

Adiya pampara(m) mun suzhanRu ethir
Odi vizhumpadi kaNdathu onRu uRa
Avi akanRu vidum payam keda – aruLvAyE

vAsavan anpu viLanga ninRa asurEsar
kulangaL adangalum keda
vAnavar ninRu thiyangukinRathu or – kuRai theera

vAri athirnthu payanthu ninRida
mEru adanga idinthu senRida
vAkai punainthu oru venRi koNdu aruL – iLaiyOnE

veesiya thenRalodu anthiyum pakaiyAka
muyanga ananganum pora
vEdai enumpadi sinthai nonthida – adaivAka

vEdar sezhum puna vanji anjana
vElin u(L)LangaL kalangi inpuRa
vELai enumpadi senRu iRainjiya – perumALE.