திருப்புகழ் 1182 பொங்கும் கொடிய (பொதுப்பாடல்கள்)

Thiruppugal 1182 Pongkumkodiya

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தந்தந் தனன தாத்தன தந்தந் தனன தாத்தன
தந்தந் தனன தாத்தன – தனதான

பொங்குங் கொடிய கூற்றனு நஞ்சும் பொதுவில் நோக்கிய
பொங்கும் புதிய நேத்திர – வலைவீசிப்

பொன்கண் டிளகு கூத்திகள் புன்கண் கலவி வேட்டுயிர்
புண்கொண் டுருகி யாட்படு – மயல்தீரக்

கொங்கின் புசக கோத்திரி பங்கங் களையு மாய்க்குடி
கொங்கின் குவளை பூக்கிற – கிரிசோண

குன்றங் கதிரை பூப்பர முன்துன் றமரர் போற்றிய
குன்றம் பிறவும் வாழ்த்துவ – தொருநாளே

எங்கும் பகர மாய்க்கெடி விஞ்சும் பகழி வீக்கிய
வெஞ்சண் டதனு வேட்டுவர் – சரணார

விந்தம் பணிய வாய்த்தரு ளந்தண் புவன நோற்பவை
மென்குங் குமகு யாத்திரி – பிரியாதே

எங்குங் கலுழி யார்த்தெழ எங்குஞ் சுருதி கூப்பிட
எங்குங் குருவி யோச்சிய – திருமானை

என்றென் றவச மாய்த்தொழு தென்றும் புதிய கூட்டமொ
டென்றும் பொழுது போக்கிய – பெருமாளே.

பதம் பிரித்தது

தந்தந் தனன தாத்தன தந்தந் தனன தாத்தன
தந்தந் தனன தாத்தன – தனதான

பொங்கும் கொடிய கூற்றனும் நஞ்சும் பொதுவில் நோக்கிய
பொங்கும் புதிய நேத்திர – வலை வீசி

பொன்கண்டு இளகு கூத்திகள் புன்கண் கலவி வேட்டு
உயிர் புண் கொண்டு உருகி ஆட்படும் – மயல் தீர

கொங்கின் புசக கோத்திரி பங்கம் களையும் ஆய்க்குடி
கொங்கின் குவளை பூக்கிற – கிரி சோண

குன்றம் கதிரை பூப் பரம் முன் துன்று அமரர் போற்றிய
குன்றம் பிறவும் வாழ்த்துவது – ஒரு நாளே

எங்கும் பகரமாயக் கெடி விஞ்சும் பகழி வீக்கிய
வெம் சண்ட தனு வேட்டுவர் – சரண் ஆர

விந்தம் பணிய வாய்த்து அருள் அம் தண் புவன(ம்) நோற்பவை
மென் குங்கும குயாத்திரி – பிரியாதே

எங்கும் கலுழி ஆர்த்து எழ எங்கும் சுருதி கூப்பிட
எங்கும் குருவி ஓச்சிய – திரு மானை

என்றென்றும் அவசமாயத் தொழுது என்றும் புதிய கூட்டமொடு
என்றும் பொழுது போக்கிய – பெருமாளே.

English

pongum kodiya kUtRanu nanjum pothuvil nOkkiya
pongum puthiya nEththira – valaiveesip

ponkaN diLaku kUththikaL punkaN kalavi vEttuyir
puNkoN duruki yAtpadu – mayaltheerak

kongin pusaka kOththiri pangam kaLaiyu mAykkudi
kongin kuvaLai pUkkiRa – girisONa

kundRam kathirai pUppara munthun Ramarar pOtRiya
kundRam piRavum vAzhththuva – thorunALE

engum pakara mAykkedi vinjum pakazhi veekkiya
venjaN dathanu vEttuvar – saraNAra

vintham paNiya vAyththaru LanthaN puvana nORpavai
menkun gumaku yAththiri – piriyAthE

engung kaluzhi yArththezha engum suruthi kUppida
engung kuruvi yOcchiya – thirumAnai

enRen Ravasa mAyththozhu thenRum puthiya kUttamo
denRum pozhuthu pOkkiya – perumALE.

English Easy Version

pongum kodiya kUtRanum nanjum pothuvil nOkkiya
pongkum puthiya nEththira – valai veesi

ponkaNdu iLaku kUththikaL punkaN kalavi vEttu
uyir puN koNdu uruki Atpadum – mayal theera

kongin pusaka kOththiri pangam kaLaiyum Aykkudi
kongin kuvaLai pUkkiRa – giri sONa

kundRam kathirai pUp param mun thunRu amarar pOtRiya
kundRam piRavum vAzhththuvathu – oru nALE

engum pakaramAyk kedi vinjum pakazhi veekkiya
vem saNda thanu vEttuvar – saraN Ara

vintham paNiya vAyththu aruL am thaN puvana(m) nORpavai
men kunguma kuyAththiri – piriyAthE

engum kaluzhi Arththu ezha engum suruthi kUppida
engkum kuruvi Occhiya – thiru mAnai

enRenRum avasamAyath thozhuthu enRum puthiya kUttamodu
enRum pozhuthu pOkkiya – perumALE.