திருப்புகழ் 1183 பொருத கயல்விழி (பொதுப்பாடல்கள்)

Thiruppugal 1183 Porudhakayalvizhi

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனன தனதன தனத்தத் தாத்தன
தனன தனதன தனத்தத் தாத்தன
தனன தனதன தனத்தத் தாத்தன – தனதான

பொருத கயல்விழி புரட்டிக் காட்டுவர்
புளக தனவட மசைத்துக் காட்டுவர்
புயலி னளகமும் விரித்துக் காட்டுவர் – பொதுமாதர்

புனித விதழ்மது நகைத்துக் காட்டுவர்
பொலிவி னிடைதுகில் குலைத்துக் காட்டுவர்
புதிய பரிபுர நடித்துக் காட்டுவ – ரிளைஞோரை

உருக அணைதனி லணைத்துக் காட்டுவர்
உடைமை யடையவெ பறித்துத் தாழ்க்கவெ
உததி யமுதென நிகழ்த்திக் கேட்பவர் – பொடிமாயம்

உதர மெரிதர மருத்திட் டாட்டிகள்
உயிரி னிலைகளை விரித்துச் சேர்ப்பவர்
உறவு கலவியை விடுத்திட் டாட்கொள – நினையாதோ

மருது பொடிபட வுதைத்திட் டாய்ச்செரி
மகளி ருறிகளை யுடைத்துப் போட்டவர்
மறுக வொருகயி றடித்திட் டார்ப்புற – அழுதூறும்

வளரு நெடுமுகி லெதிர்த்துக் காட்டென
அசட னிரணிய னுரத்தைப் பேர்த்தவன்
மழையி னிரைமலை யெடுத்துக் காத்தவன் – மருகோனே

விருது பலபல பிடித்துச் சூர்க்கிளை
விகட தடமுடி பறித்துத் தோட்களை
விழவு முறியவு மடித்துத் தாக்கிய – அயில்வீரா

வெகுதி சலதியை யெரித்துத் தூட்பட
வினைசெ யசுரர்கள் பதிக்குட் பாய்ச்சிய
விபுத மலரடி விரித்துப் போற்றினர் – பெருமாளே.

பதம் பிரித்தது

தனன தனதன தனத்தத் தாத்தன
தனன தனதன தனத்தத் தாத்தன
தனன தனதன தனத்தத் தாத்தன – தனதான

பொருத கயல் விழி புரட்டிக் காட்டுவர்
புளக தன வடம் அசைத்துக் காட்டுவர்
புயலின் அளகமும் விரித்துக் காட்டுவர் – பொதுமாதர்

புனித இதழ் மது நகைத்துக் காட்டுவர்
பொலிவின் இடை துகில் குலைத்துக் காட்டுவர்
புதிய பரிபுரம் நடித்துக் காட்டுவர் – இளைஞோரை

உருக அணை தனில் அணைத்துக் காட்டுவர்
உடைமை அடையவே பறித்துத் தாழ்க்கவே
உததி அமுது என நிகழ்த்திக் கேட்பவர் – பொடி மாயம்

உதரம் எரி தர மருந்திட்டு ஆட்டிகள்
உயிரின் நிலைகளை விரித்துச் சேர்ப்பவர்
உறவு கலவியை விடுத்திட்டு ஆட் கொள – நினையாதோ

மருது பொடிபட உதைத்திட்டு ஆய்ச் சேரி
மகளிர் உறிகளை உடைத்துப் போட்டவர்
மறுக ஒரு கயிறு அடித்திட்டு ஆர்ப்புற – அழுது ஊறும்

வளரு(ம்) நெடு முகில் எதிர்த்துக் காட்டு என
அசடன் இரணியன் உரத்தைப் பேர்த்தவன்
மழையில் நிரை மலை எடுத்துக் காத்தவன் – மருகோனே

விருது பல பல பிடித்துச் சூர் கிளை
விகட தட முடி பறித்துத் தோள்களை
விழவும் முறியவும் அடித்துத் தாக்கிய – அயில் வீரா

வெகு தீ சலதியை எரித்துத் தூள் பட
வினை செய் அசுரர்கள் பதிக்கு உள் பாய்ச்சிய
விபுத மலர் அடி விரித்துப் போற்றினர் – பெருமாளே.

English

porutha kayalvizhi purattik kAttuvar
puLaka thanavada masaiththuk kAttuvar
puyali naLakamum viriththuk kAttuvar – pothumAthar

punitha vithazhmathu nakaiththuk kAttuvar
polivi nidaithukil kulaiththuk kAttuvar
puthiya paripura nadiththuk kAttuva – riLainjOrai

uruka aNaithani laNaiththuk kAttuvar
udaimai yadaiyave paRiththuth thAzhkkave
uthathi yamuthena nikazhththik kEtpavar – podimAyam

uthara merithara maruththit tAttikaL
uyiri nilaikaLai viriththuc chErppavar
uRavu kalaviyai viduththit tAtkoLa – ninaiyAthO

maruthu podipada vuthaiththit tAyccheri
makaLi ruRikaLai yudaiththup pOttavar
maRuka vorukayi Radiththit tArppuRa – azhuthURum

vaLaru nedumuki lethirththuk kAttena
asada niraNiya nuraththaip pErththavan
mazhaiyi niraimalai yeduththuk kAththavan – marukOnE

viruthu palapala pidiththuc cUrkkiLai
vikada thadamudi paRiththuth thOtkaLai
vizhavu muRiyavu madiththuth thAkkiya – ayilveerA

vekuthi salathiyai yeriththuth thUtpada
vinaise yasurarkaL pathikkut pAycchiya
viputha malaradi viriththup pOtRinar – perumALE.

English Easy Version

porutha kayal vizhi purattik kAttuvar
puLaka thana vadam asaiththuk kAttuvar
puyalin aLakamum viriththuk kAttuvar – pothumAthar

punitha ithazh mathu nakaiththuk kAttuvar
polivin idai thukil kulaiththuk kAttuvar
puthiya paripuram nadiththuk kAttuvar – iLainjOrai

uruka aNai thanil aNaiththuk kAttuvar
udaimai adaiyavE paRiththuth thAzhkkavE
uthathi amuthu ena nikazhththik kEtpavar – podi mAyam

utharam eri thara marunthittu AttikaL
uyirin nilaikaLai viriththuc chErppavar
uRavu kalaviyai viduththittu At koLa – ninaiyAthO

maruthu podipada uthaiththittu Ayc chEri
makaLir uRikaLai udaiththup pOttavar
maRuka oru kayiRu adiththittu ArppuRa – azhuthu URum

vaLaru(m) nedu mukil ethirththuk kAttu ena
asadan iraNiyan uraththaip pErththavan
mazhaiyil nirai malai eduththuk kAththavan – marukOnE

viruthu pala pala pidiththuc cUr kiLai
vikada thada mudi paRiththuth thOLkaLai
vizhavum muRiyavum adiththuth thAkkiya – ayil veerA

veku thee salathiyai eriththuth thUL pada
vinai sey asurarkaL pathikku uL pAycchiya
viputha malar adi viriththup pOtRinar – perumALE