திருப்புகழ் 1184 மங்காதிங் காக்கு (பொதுப்பாடல்கள்)

Thiruppugal 1184 Mangkadhingkakku

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தந்தானந் தாத்தந் தனதன
தந்தானந் தாத்தந் தனதன
தந்தானந் தாத்தந் தனதன – தனதான

மங்காதிங் காக்குஞ் சிறுவரு
முண்டேயிங் காற்றுந் துணைவியும்
வம்பாருந் தேக்குண் டிடவறி – தெணும்வாதை

வந்தேபொன் தேட்டங் கொடுமன
நொந்தேயிங் காட்டம் பெரிதெழ
வண்போதன் தீட்டுந் தொடரது – படியேமன்

சங்காரம் போர்ச்சங் கையிலுடல்
வெங்கானம் போய்த்தங் குயிர்கொள
சந்தேகந் தீர்க்குந் தனுவுட – னணுகாமுன்

சந்தாரஞ் சாத்தும் புயவியல்
கந்தாஎன் றேத்தும் படியென
சந்தாபந் தீர்த்தென் றடியிணை – தருவாயே

கங்காளன் பார்த்தன் கையிலடி
யுண்டேதிண் டாட்டங் கொளுநெடு
கன்சாபஞ் சார்த்துங் கரதல – னெருதேறி

கந்தாவஞ் சேர்த்தண் புதுமல
ரம்பான்வெந் தார்ப்பொன் றிடவிழி
கண்டான்வெங் காட்டங் கனலுற – நடமாடி

அங்காலங் கோத்தெண் டிசைபுவி
மங்காதுண் டாற்கொன் றதிபதி
அந்தாபந் தீர்த்தம் பொருளினை – யருள்வோனே

அன்பாலந் தாட்கும் பிடுமவர்
தம்பாவந் தீர்த்தம் புவியிடை
அஞ்சாநெஞ் சாக்கந் தரவல – பெருமாளே.

பதம் பிரித்தது

தந்தானந் தாத்தந் தனதன
தந்தானந் தாத்தந் தனதன
தந்தானந் தாத்தந் தனதன – தனதான

மங்காது இங்கு ஆக்கும் சிறுவரும்
உண்டே இங்கு ஆற்றும் துணைவியும்
வம்ப(பா)ரும் தேக்கு உண்டிட வறிது – எ(ண்)ணும் வாதை

வந்தே பொன் தேட்டம் கொடு மன(ம்)
நொந்தே இங்கு ஆட்டம் பெரிது எழ
வண் போதன் தீட்டும் தொடர் அது – படி ஏமன்

சங்காரம் போர்ச் சங்கையில் உடல்
வெம் கானம் போய்த் தங்கு உயிர் கொள்ள
சந்தேகம் தீர்க்கும் தனு உடன் – அணுகா முன்

சந்து ஆரம் சாத்தும் புய இயல்
கந்தா என்று ஏத்தும் படி என
சந்தாபம் தீர்த்து என்று அடியிணை – தருவாயே

கங்காளன் பார்த்தன் கையில் அடி
உண்டே திண்டாட்டம் கொ(ள்)ளும் நெடு
கல் சாபம் சார்த்தும் கரதலன் – எருது ஏறி

கந்த ஆவம் சேர்த் தண் புது மலர்
அம்பால் வெந்து ஆர்ப்பு ஒன்றிட விழி
கண்டான் வெம் காட்டு அங்கு அனல் உற – நடமாடி

அங்கு ஆலம் கோத்து எண் திசை புவி
மங்காது உண்டாற்கு ஒன்று அதிபதி
அம் தாபம் தீர்த்து அம் பொருளினை – அருள்வோனே

அன்பால் அம் தாள் கும்பிடும் அவர்
தம் பாவம் தீர்த்து அம் புவி இடை
அஞ்சா நெஞ்சு ஆக்கம் தர வல்ல – பெருமாளே.

English

mangAthing kAkkunj chiRuvaru
muNdEying kAtRun thuNaiviyum
vampArun thEkkuN didavaRi – theNumvAthai

vanthEpon thEttang kodumana
nonthEying kAttam perithezha
vaNpOthan theettun thodarathu – padiyEman

sangAram pOrcchang kaiyiludal
vengAnam pOyththang kuyirkoLa
santhEkan theerkkun thanuvuda – naNukAmun

santhAranj chAththum puyaviyal
kanthAen REththum padiyena
santhApan theerththen RadiyiNai – tharuvAyE

kangALan pArththan kaiyiladi
yuNdEthiN dAttang koLunedu
kanchApanj chArththung karathala – neruthERi

kanthAvanj chErththaN puthumala
rampAnven thArppon Ridavizhi
kaNdAnveng kAttang kanaluRa – nadamAdi

angAlang kOththeN disaipuvi
mangAthuN dARkon Rathipathi
anthApan theerththam poruLinai – yaruLvOnE

anpAlan thAtkum pidumavar
thampAvan theerththam puviyidai
anjAnen jAkkan tharavala – perumALE.

English Easy Version

mangAthu ingu Akkum chiRuvarum
uNdE ingu AtRum thuNaiviyum
vampa(a)rum thEkku uNdida vaRithu – e(N)Num vAthai

vanthE pon thEttam kodu mana(m)
nonthE ingu Attam perithu ezha
vaN pOthan theettum thodar athu – padi Eman

sangAram pOrc changaiyil udal
vem kAnam pOyth thangu uyir koLLa
santhEkam theerkkum thanu udan – aNukA mun

santhu Aram sAththum puya iyal
kanthA enRu Eththum padi ena
santhApam theerththu enRu adiyiNai – tharuvAyE

kangALan pArththan kaiyil adi
uNdE thiNdAttam ko(L)Lum nedu
kal chApam chArththum karathalan – eruthu ERi

kantha Avam chErth thaN puthu malar
ampAl venthu Arppu onRida vizhi
kaNdAn vem kAttu angu anal uRa – nadamAdi

angu Alam kOththu eN thisai puvi
mangAthu uNdARku onRu athipathi
am thApam theerththu am poruLinai – aruLvOnE

anpAl am thAL kumpidum avar
tham pAvam theerththu am puvi idai
anjA nenju Akkam thara valla – perumALE.