திருப்புகழ் 1185 மதன தனு நிகர் (பொதுப்பாடல்கள்)

Thiruppugal 1185 Madhanadhanunigar

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனன தனதன தனத்தா தன
தனன தனதன தனத்தா தன
தனன தனதன தனத்தா தன – தனதான

மதன தனுநிக ரிடைக்கே மன
முருக வருபிடி நடைக்கே யிரு
வனச பரிபுர மலர்க்கே மது – கரம்வாழும்

வகுள ம்ருகமத மழைக்கே மணி
மகர மணிவன குழைக்கே மட
மகளிர் முகுளித முலைக்கே கட – லமுதூறும்

அதர மதுரித மொழிக்கே குழை
யளவு மளவிய விழிக்கே தள
வனைய தொருசிறு நகைக்கே பனி – மதிபோலும்

அழகு திகழ்தரு நுதற்கே யந
வரத மவயவ மனைத்தூ டினு
மவச முறுமயல் தவிர்த்தாள் வது – மொருநாளே

உததி புதைபட அடைத்தா தவன்
நிகரி லிரதமும் விடுக்கா நகர்
ஒருநொ டியில்வெயி லெழச்சா நகி – துயர்தீர

உபய வொருபது வரைத்தோள் களு
நிசிச ரர்கள்பதி தசக்ரீ வமு
முருள ஒருகணை தெரித்தா னும – வுனஞான

திதமி லவுணர்த மிருப்பா கிய
புரமு மெரியெழ முதற்பூ தர
திலத குலகிரி வளைத்தா னும – கிழவானோர்

திருவ நகர்குடி புகச்சீ கர
மகர சலமுறை யிடச்சூ ரொடு
சிகர கிரிபொடி படச்சா டிய – பெருமாளே.

பதம் பிரித்தது

தனன தனதன தனத்தா தன
தனன தனதன தனத்தா தன
தனன தனதன தனத்தா தன – தனதான

மதன தனு நிகர் இடைக்கே மனம்
உருக வரு பிடி நடைக்கே இரு
வனச பரிபுர மலர்க்கே மதுகரம் – வாழும்

வகுள ம்ருகமத மழைக்கே மணி
மகரம் அணி அ(ன்)ன குழைக்கே மட
மகளிர் முகுளித முலைக்கே கடல் – அமுது ஊறும்

அதரம் மதுர இத மொழிக்கே குழை
அளவும் அளவிய விழிக்கே தளவு
அனையது ஒரு சிறு நகைக்கே பனி – மதி போலும்

அழகு திகழ் தரு நுதற்கே அந
வரதம் அவயவம் அனைத்தூடினும்
அவசம் உறும் மயல் தவிர்த்து ஆள்வதும் – ஒரு நாளே

உததி புதைபட அடைத்து ஆதவன்
நிகர் இல் இரதமும் விடுக்கா நகர்
ஒரு நொடியில் வெயில் எழச் சாநகி – துயர் தீர

உபய ஒரு பது வரைத் தோள்களு(ம்)
நிசிசரர்கள் பதி தச க்ரீவமும்
உருள ஒரு கணை தெரித்தானு(ம்) – மவுன ஞான

திதம் இல் அவுணர் தம் இருப்பாகிய
புரமும் எரி எழ முதல் பூதர
திலத(ம்) குலகிரி வளைத்தானும் – மகிழ வானோர்

திருவ நகர் குடி புக சீகர(ம்)
மகர(ம்) சலம் முறை இடச் சூரொடு
சிகர கிரி பொடிபடச் சாடிய – பெருமாளே.

English

mathana thanunika ridaikkE mana
muruka varupidi nadaikkE yiru
vanasa paripura malarkkE mathu – karamvAzhum

vakuLa mrukamatha mazhaikkE maNi
makara maNivana kuzhaikkE mada
makaLir mukuLitha mulaikkE kada – lamuthURum

athara mathuritha mozhikkE kuzhai
yaLavu maLaviya vizhikkE thaLa
vanaiya thorusiRu nakaikkE pani – mathipOlum

azhaku thikazhtharu nuthaRkE yana
varatha mavayava manaiththU dinu
mavasa muRumayal thavirththAL vathu – morunALE

uthathi puthaipada adaiththA thavan
nikari lirathamum vidukkA nakar
oruno diyilveyi lezhacchA naki – thuyartheera

upaya vorupathu varaiththOL kaLu
nisisa rarkaLpathi thasakree vamu
muruLa orukaNai theriththA numa – vunanjAna

thithami lavuNartha miruppA kiya
puramu meriyezha muthaRpU thara
thilatha kulakiri vaLaiththA numa – kizhavAnOr

thiruva nakarkudi pukacchee kara
makara chalamuRai yidaccU rodu
sikara kiripodi padacchA diya – perumALE.

English Easy Version

mathana thanu nikar idaikkE manam
uruka varu pidi nadaikkE iru
vanasa paripura malarkkE mathukaram – vAzhum

vakuLa mrukamatha mazhaikkE maNi
makaram aNi a(n)na kuzhaikkE mada
makaLir mukuLitha mulaikkE kadal – amuthu URum

atharam mathura itha mozhikkE kuzhai
aLavum aLaviya vizhikkE thaLavu
anaiyathu oru siRu nakaikkE pani – mathi pOlum

azhaku thikazh tharu nuthaRkE
anavaratham avayavam anaiththUdinum
avasam uRum mayal thavirththu ALvathum – oru nALE

uthathi puthaipada adaiththu Athavan
nikar il irathamum vidukkA nakar
oru nodiyil veyil ezhac chAnaki – thuyar theera

upaya oru pathu varaith thOLkaLu(m)
nisisararkaL pathi thasa kreevamum
uruLa oru kaNai theriththAnu(m) – mavuna njAna

thitham il avuNar tham iruppAkiya
puramum eri ezha muthal pUthara
thilatha(m) kulakiri vaLaiththAnum – makizha vAnOr

thiruva nakar kudi puka seekara(m)
makara(m) salam muRai idac cUrodu
sikara kiri podipadas sAdiya – perumALE