திருப்புகழ் 1186 மதனேவிய கணை (பொதுப்பாடல்கள்)

Thiruppugal 1186 Madhaneviyakanai

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனதானன தனதானன தனதானன தனதானன
தனதானன தனதானன – தனதான

மதனேவிய கணையாலிரு வினையால்புவி கடல்சாரமும்
வடிவாயுடல் நடமாடுக – முடியாதேன்


மனமாயையொ டிருகாழ்வினை யறமூதுடை மலம்வேரற
மகிழ்ஞானக அநுபூதியி – னருள்மேவிப்


பதமேவுமு னடியாருடன் விளையாடுக அடியேன்முனெ
பரிபூரண கிருபாகர – முடன்ஞான


பரிமேலழ குடனேறிவி ணவர்பூமழை யடிமேல்விட
பலகோடிவெண் மதிபோலவெ – வருவாயே

சதகோடிவெண் மடவார்கட லெனசாமரை யசையாமுழு
சசிசூரியர் சுடராமென – வொருகோடிச்

சடைமாமுடி முநிவோர்சர ணெனவேதியர் மறையோதுக
சதிநாடக மருள்வேணிய – னருள்பாலா

விதியானவ னிளையாளென துளமேவிய வளிநாயகி
வெகுமாலுற தனமேலணை – முருகோனே


வெளியாசையொ டடைபூவணர் மருகாமணி முதிராடக
வெயில்வீசிய அழகாதமிழ் – பெருமாளே.

பதம் பிரித்தது

தனதானன தனதானன தனதானன தனதானன
தனதானன தனதானன – தனதான

மதன் ஏவிய கணையால் இரு வினையால் புவி கடல் சாரமும்
வடிவாய் உடல் நடமாடுக – முடியாதேன்

மன மாயையோடு இரு காழ் வினை அற மூதுடை மலம் வேர் அற
மகிழ் ஞானக அநுபூதியின் – அருள் மேவி

பதம் மேவும் உன் அடியாருடன் விளையாடுக அடியேன் மு(ன்)னெ
பரிபூரண கிருபாகரம் – உடன் ஞானப்பரி

மேல் அழகுடன் ஏறி வி(ண்)ணவர் பூ மழை அடி மேல் விட
பல கோடி வெண் மதி போலவெ – வருவாயே

சத கோடி வெண் மடவார் கடல் என சாமரை அசையா முழு
சசி சூரியர் சுடராம் என – ஒரு கோடி

சடை மா முடி முநிவோர் சரண் என வேதியர் மறை ஓதுக
சதி நாடகம் அருள் வேணியன் – அருள் பாலா

விதி ஆனவன் இளையாள் எனது உ(ள்)ளம் மேவிய வ(ள்)ள நாயகி
வெகு மால் உற தனம் மேல் அணை – முருகோனே

வெளி ஆசையோடு அடை பூவணர் மருகா மணி முதிர் ஆடகம்
வெயில் வீசிய அழகா தமிழ் – பெருமாளே.

English

madhanEviya kaNaiyAl iruvinaiyAl buvi kadal sAramum
vadivAy udal natamAduga – mudiyAdhEn

mana mAyaiyod irukAzh vinai aRa mUdhudai malam vEraRa
magizh nyAnaga anubUthiyin – aruLmEvip

padhamEvumun adiyArudan viLaiyAduga adiyEn mune
paripUraNa kirupAkaram – udan nyAna

parimEl azhagudanERi viNavar pU mazhai adimElvida
palakOdi veN madhi pOlave – varuvAyE

sathakOdi veNmadavAr kadalena sAmarai asaiyA muzhu
sasi sUriyar sudarAmena – orukOdi

sadaimA mudi munivOr saraNena vEdhiyar maRai Odhuga
jathi nAtakam aruL vENiyan – aruLbAlA

vidhiyAnavan iLaiyAL enadhuLa mEviya vaLi nAyaki
vegumAl uRa thanamEl aNai – murugOnE

veLi Asaiyod adai pUvaNar marugA maNi mudhir Adaga
veyil veesiya azhagA thamizh – perumALE.

English Easy Version

madhanEviya kaNaiyAl iruvinaiyAl buvi kadal sAramum
vadivAy udal natamAduga – mudiyAdhEn

mana mAyaiyod irukAzh vinai aRa mUdhudai malam vEraRa
magizh nyAnaga anubUthiyin – aruLmEvi

padhamEvumun adiyArudan viLaiyAduga adiyEn mune
paripUraNa kirupAkaram – udan nyAna parimEl

azhagudanERi viNavar pU mazhai adimElvida
palakOdi veN madhi pOlave – varuvAyE

sathakOdi veNmadavAr kadalena sAmarai asaiyA muzhu
sasi sUriyar sudarAmena – orukOdi

sadaimA mudi munivOr saraNena vEdhiyar maRai Odhuga
jathi nAtakam aruL vENiyan – aruLbAlA

vidhiyAnavan iLaiyAL enadhuLa mEviya vaLi nAyaki
vegumAl uRa thanamEl aNai – murugOnE

veLi Asaiyod adai pUvaNar marugA maNi mudhir Adaga
veyil veesiya azhagA thamizh – perumALE