திருப்புகழ் 1187 மாடமதிட் சுற்று (பொதுப்பாடல்கள்)

Thiruppugal 1187 Madamadhitsutru

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தானதனத் தத்த தத்த தத்தன
தானதனத் தத்த தத்த தத்தன
தானதனத் தத்த தத்த தத்தன – தனதான

மாடமதிட் சுற்று மொக்க வைத்திட
வீடுகனக் கத்த னத்தி லச்சுறு
மாலிபமொத் துப்ர புத்த னத்தினி – லடைவாக

மாதர்பெருக் கத்த ருக்க மற்றவர்
சூழவிருக் கத்த ரிக்க இப்படி
வாழ்க்கையில்மத் தப்ர மத்த சித்திகொள் – கடைநாளிற்

பாடையினிற் கட்டி விட்டு நட்டவர்
கூடஅரற் றிப்பு டைத்து றுப்புள
பாவையெடுத் துத்த ழற்கி ரைப்பட – விடலாய

பாடுதொலைத் துக்க ழிக்க அக்ருபை
தேடுமெனைத் தற்பு ரக்க வுற்றிரு
பாதுகையைப் பற்றி நிற்க வைத்தெனை – யருளாதோ

ஆடகவெற் பைப்பெ ருத்த மத்தென
நாகவடத் தைப்பி ணித்து ரத்தம
ரார்கள்பிடித் துத்தி ரித்தி டப்புகை – யனலாக

ஆழிகொதித் துக்க தற்றி விட்டிமை
யோர்களொளிக் கக்க ளித்த உக்கிர
ஆலவிடத் தைத்த ரித்த அற்புதர் – குமரேசா

வேடர்சிறுக் கிக்கி லச்சை யற்றெழு
பாரும்வெறுத் துச்சி ரிப்ப நட்பொடு
வேளையெனப் புக்கு நிற்கும் வித்தக – இளையோனே

வேகமிகுத் துக்க திக்கும் விக்ரம
சூரர்சிரத் தைத்து ணித்த டக்குதல்
வீரமெனத் தத்து வத்து மெச்சிய – பெருமாளே.

பதம் பிரித்தது

தானதனத் தத்த தத்த தத்தன
தானதனத் தத்த தத்த தத்தன
தானதனத் தத்த தத்த தத்தன – தனதான

மாடம் மதிள் சுற்றும் ஒக்க வைத்திட
வீடு கனக்கத் தனத்தில் அச்சுறும்
மால் இபம் ஒத்து ப்ரபுத் தனத்தினில் – அடைவாக

மாதர் பெருக்கத் தருக்கம் அற்றவர்
சூழ இருக்கத் தரிக்க இப்படி
வாழ்கையில் மத்தப் ப்ரமத்த சித்தி கொள் – கடை நாளில்

பாடையினில் கட்டி விட்டு நட்டவர்
கூட அரற்றிப் புடைத்து உறுப்பு(ள்)ள
பாவை எடுத்துத் தழற்கு இரைப்பட – விடல் ஆய

பாடு தொலைத்துக் கழிக்க அக்ருபை
தேடும் எனைத் தன் புரக்க உற்ற இரு
பாதுகையைப் பற்றி நிற்க வைத்து எனை – அருளாதோ

ஆடக வெற்பைப் பெருத்த மத்து என
நாக வடத்தைப் பிணித்து உரத்து அமரார்கள்
பிடித்துத் திரித்திட புகை – அனலாக

ஆழி கொதித்துக் கதற்றி விட்டு இமை
யோர்கள் ஒளிக்கக் களித்த உக்கிர
ஆல விடத்தைத் தரித்த அற்புதர் – குமரேசா

வேட(ர்) சிறுக்கிக்கு லச்சை அற்று எழு
பாரும் வெறுத்துச் சிரிப்ப நட்பொடு
வேளை எனப் புக்கு நிற்கும் வித்தக – இளையோனே

வேகம் மிகுத்துக் கதிக்கும் விக்ரம
சூரர் சிரத்தைத் துணித்து அடக்குதல்
வீரம் எனத் தத்துவத்து மெச்சிய – பெருமாளே.

English

mAdamathit chutRu mokka vaiththida
veedukanak kaththa naththi lacchuRu
mAlipamoth thupra puththa naththini – ladaivAka

mAtharperuk kaththa rukka matRavar
cUzhaviruk kaththa rikka ippadi
vAzhkkaiyilmath thapra maththa siththikoL – kadainALiR

pAdaiyiniR katti vittu nattavar
kUdaarat Rippu daiththu RuppuLa
pAvaiyeduth thuththa zhaRki raippada – vidalAya

pAdutholaith thukka zhikka akrupai
thEdumenaith thaRpu rakka vutRiru
pAthukaiyaip patRi niRka vaiththenai – yaruLAthO

AdakaveR paippe ruththa maththena
nAkavadath thaippi Niththu raththama
rArkaLpidith thuththi riththi dappukai – yanalAka

Azhikothith thukka thatRi vittimai
yOrkaLoLik kakka Liththa ukkira
Alavidath thaiththa riththa aRputhar – kumarEsA

vEdarsiRuk kikki lacchai yatRezhu
pArumveRuth thucchi rippa natpodu
vELaiyenap pukku niRkum viththaka – iLaiyOnE

vEkamikuth thukka thikkum vikrama
cUrarsirath thaiththu Niththa dakkuthal
veeramenath thaththu vaththu mecchiya – perumALE.

English Easy Version

mAdam mathiL sutRum okka vaiththida
veedu kanakkath thanaththil acchuRum
mAl ipam oththu praputh thanaththinil – adaivAka

mAthar perukkath tharukkam atRavar
cUzha irukkath tharikka ippadi
vAzhkaiyil maththap pramaththa siththi koL – kadai nALil

pAdaiyinil katti vittu nattavar
kUda aratRip pudaiththu uRuppu(L)La
pAvai eduththuth thazhaRku iraippada – vidal Aya

pAdu tholaiththuk kazhikka akrupai
thEdum enaith than purakka utRa iru
pAthukaiyaip patRi niRka vaiththu enai – aruLAthO

Adaka veRpaip peruththa maththu ena
nAka vadaththaip piNiththu uraththu amarArkaL
pidiththuth thiriththida pukai – analAka

Azhi kothiththuk kathatRi vittu imaiyOrkaL
oLikkak kaLiththa ukkira
Ala vidaththaith thariththa aRputhar – kumarEsA

vEda(r) siRukkikku lacchai atRu ezhu
pArum veRuththuc chirippa natpodu
vELai enap pukku niRkum viththaka – iLaiyOnE

vEkam mikuththuk kathikkum vikrama .
cUrar siraththaith thuNiththu adakkuthal
veeram enath thaththuvaththu mecchiya – perumALE