திருப்புகழ் 1188 மாண்டார் எலும்பு (பொதுப்பாடல்கள்)

Thiruppugal 1188 Mandarelumbu

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தாந்தான தந்தன தந்தன
தாந்தான தந்தன தந்தன
தாந்தான தந்தன தந்தன – தனதான

மாண்டாரெ லும்பணி யுஞ்சடை
யாண்டாரி றைஞ்ச மொழிந்ததை
வான்பூத லம்பவ னங்கனல் – புனலான

வான்பூத முங்கர ணங்களு
நான்போயொ டுங்கஅ டங்கலு
மாய்ந்தால்வி ளங்கும தொன்றினை – யருளாயேல்

வேண்டாமை யொன்றைய டைந்துள
மீண்டாறி நின்சர ணங்களில்
வீழந்தாவல் கொண்டுரு கன்பினை – யுடையேனாய்

வேந்தாக டம்புபு னைந்தருள்
சேந்தாச ரண்சர ணென்பது
வீண்போம தொன்றல என்பதை – யுணராதோ

ஆண்டார்த லங்கள ளந்திட
நீண்டார்மு குந்தர்த டந்தனில்
ஆண்டாவி துஞ்சிய தென்றுமு – தலைவாயுற்

றாங்கோர்சி லம்புபு லம்பிட
ஞான்றூது துங்கச லஞ்சலம்
ஆம்பூமு ழங்கிய டங்கும – ளவில்நேசம்

பூண்டாழி கொண்டுவ னங்களி
லேய்ந்தாள வென்றுவெ றுந்தனி
போந்தோல மென்றுத வும்புயல் – மருகோனே

பூம்பாளை யெங்கும ணங்கமழ்
தேங்காவில் நின்றதொர் குன்றவர்
பூந்தோகை கொங்கைவி ரும்பிய – பெருமாளே.

பதம் பிரித்தது

தாந்தான தந்தன தந்தன
தாந்தான தந்தன தந்தன
தாந்தான தந்தன தந்தன – தனதான

மாண்டார் எலும்பு அணியும் சடை
ஆண்டார் இறைஞ்ச மொழிந்ததை
வான் பூதலம் பவனம் கனல் – புனல் ஆன

வான் பூதமும் கரணங்களும்
நான் போய் ஒடுங்க அடங்கலும்
மாய்ந்தால் விளங்கும் அது ஒன்றினை – அருளாயேல்

வேண்டாமை ஒன்றை அடைந்து உ(ள்)ளம்
மீண்டு ஆறி நின் சரணங்களில்
வீழ்ந்து ஆவல் கொண்டு உருக அன்பினை – உடையேனாய்

வேந்தா கடம்பு புனைந்து அருள்
சேந்தா சரண் சரண் என்பது
வீண் போம் அது ஒன்று அ(ல்)ல என்பதை – உணராதோ

ஆண்டார் தலங்கள் அளந்திட
நீண்டார் முகுந்தர் தடம் தனில்
ஆண்டு ஆவி துஞ்சியது என்று – முதலை வாய் உற்று

ஆங்கு ஓர் சிலம்பு புலம்பிட
ஞான்று ஊது துங்க சலஞ்சலம்
ஆம் பூ முழங்கி அடங்கும் – அளவில் நேசம்

பூண்டு ஆழி கொண்டு வனங்களில்
ஏய்ந்து ஆள வென்று வெறும் தனி
போந்து ஓலம் என்று உதவும் புயல் – மருகோனே

பூம்பாளை எங்கும் மணம் கமழ்
தேம் காவில் நின்றது ஓர் குன்றவர்
பூம் தோகை கொங்கை விரும்பிய – பெருமாளே.

English

mANdAr elumbaNiyun sadai
yANdAr iRainja mozhindhadhai
vAn bUthalam pavanang kanal – punalAna

vAn bUthamun karaNangaLu
nAn pOyodunga adangalu
mAyndhAl viLanguma dhondrinai – aruLAyEl

vENdAmai ondrai adaindhuLa
meeNd ARi nin charaNangaLil
veezhndh Aval koNdurug anbinai – udaiyEnAy

vEndhA kadambu punaindh aruL
sEndhA charaN saraN enbadhu
veeN pOma dhondrala enbadhai – uNarAdhO

ANdAr thalangaL aLandhida
neeNdAr mukundhar thadan thanil
ANdAvi thunjiya dhendru mudhalai – vAyutr

AngOr silambu pulambida
nyAndr Udhu thunga calan calam
Am pU muzhangi adangum – aLavilnEsam

pUNdAzhi koNdu vanangaLil
EyndhALa vendru veRun thani
pOndh Olamendr udhavum puyal – marugOnE

pUm pALai engu maNam kamazh
thEn kAvil nindradhOr kundravar
pUn thOgai kongai virumbiya – perumALE.

English Easy Version

mANdAr elumbaNiyun sadai
yANdAr iRainja mozhindhadhai
vAn bUthalam pavanang kanal – punalAna vAn

bUthamun karaNangaLu
nAn pOyodunga adangalu
mAyndhAl viLanguma dhondrinai – aruLAyEl

vENdAmai ondrai adaindhuLa
meeNd ARi nin charaNangaLil
veezhndh Aval koNdurug anbinai – udaiyEnAy

vEndhA kadambu punaindh aruL
sEndhA charaN saraN enbadhu
veeN pOma dhondrala enbadhai – uNarAdhO

ANdAr thalangaL aLandhida
neeNdAr mukundhar thadan thanil
ANdAvi thunjiya dhendru – mudhalai vAyutr

AngOr silambu pulambida
nyAndr Udhu thunga calan calam
Am pU muzhangi adangum – aLavil nEsam

pUNdAzhi koNdu vanangaLil
Eyndhu ALa vendru veRun thani
pOndh Olamendr udhavum puyal – marugOnE

pUm pALai engu maNam kamazh
thEn kAvilnindradhOr kundravar
pUn thOgai kongai virumbiya – perumALE