திருப்புகழ் 1189 மாறுபொரு காலன் (பொதுப்பாடல்கள்)

Thiruppugal 1189 Maruporukalan

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தானதன தான தத்த தானதன தான தத்த
தானதன தான தத்த – தனதான

மாறுபொரு கால னொக்கும் வானிலெழு மாம திக்கும்
வாரிதுயி லாவ தற்கும் – வசையேசொல்

மாயமட வார்த மக்கும் ஆயர்குழ லூதி சைக்கும்
வாயுமிள வாடை யிற்கு – மதனாலே

வேறுபடு பாய லுக்கு மேயெனது பேதை யெய்த்து
வேறுபடு மேனி சற்று – மழியாதே

வேடர்குல மாதி னுக்கு வேடைகெட வேந டித்து
மேவுமிரு பாத முற்று – வரவேணும்

ஆறுமிடை வாள ரக்கர் நீறுபட வேலெ டுத்த
ஆறுமுக னேகு றத்தி – மணவாளா

ஆழியுல கேழ டக்கி வாசுகியை வாய டக்கி
ஆலுமயி லேறி நிற்கு – மிளையோனே

சீறுபட மேரு வெற்பை நீறுபட வேசி னத்த
சேவலவ நீப மொய்த்த – திரள்தோளா

சேருமட லால்மி குத்த சூரர்கொடு போய டைத்த
தேவர்சிறை மீள விட்ட – பெருமாளே.

பதம் பிரித்தது

தானதன தான தத்த தானதன தான தத்த
தானதன தான தத்த – தனதான

மாறு பொரு காலன் ஒக்கும் வானில் எழு மா மதிக்கும்
வாரி துயிலா அதற்கும் – வசையே சொல்

மாய மடவார் தமக்கும் ஆயர் குழல் ஊது இசைக்கும்
வாயும் இள வாடையிற்கும் – அதனாலே

வேறுபடி பாயலுக்குமே எனது பேதை எய்த்து
வேறு படு மேனி சற்றும் – அழியாதே

வேடர் குல மாதினுக்கும் வேடை கெடவே நடித்து
மேவும் இரு பாதம் உற்று – வரவேணும்

ஆறும் மிடை வாள் அரக்கர் நீறு பட வேல் எடுத்த
ஆறு முகனே குறத்தி – மணவாளா

ஆழி உலகு ஏழு அடக்கி வாசுகியை வாய் அடக்கி
ஆலும் மயில் ஏறி நிற்கும் – இளையோனே

சீறு பட மேரு வெற்பை நீறு படவே சினத்த
சேவலவ நீபம் மொய்த்த – திரள் தோளா

சேரும் அடலால் மிகுத்த சூரர் கொடு போய் அடைத்த
தேவர் சிறை மீள விட்ட – பெருமாளே.

English

mARuporu kAla nokkum vAnilezhu mAma thikkum
vArithuyi lAva thaRkum – vasaiyEsol

mAyamada vArtha makkum Ayarkuzha lUthi saikkum
vAyumiLa vAdai yiRku – mathanAlE

vERupadu pAya lukku mEyenathu pEthai yeyththu
vERupadu mEni satRu – mazhiyAthE

vEdarkula mAthi nukku vEdaikeda vEna diththu
mEvumiru pAtha mutRu – varavENum

ARumidai vALa rakkar neeRupada vEle duththa
ARumuka nEku Raththi – maNavALA

Azhiyula kEzha dakki vAsukiyai vAya dakki
Alumayi lERi niRku – miLaiyOnE

seeRupada mEru veRpai neeRupada vEsi naththa
sEvalava neepa moyththa – thiraLthOLA

sErumada lAlmi kuththa cUrarkodu pOya daiththa
thEvarsiRai meeLa vitta – perumALE.

English Easy Version

mARu poru kAlan okkum vAnil ezhu mA mathikkum
vAri thuyilA athaRkum – vasaiyE sol

mAya madavAr thamakkum Ayar kuzhal Uthu isaikkum
vAyum iLa vAdaiyiRkum – athanAlE

vERupadu pAyalukkumE enathu pEthai eyththu
vERu padu mEni satRum – azhiyAthE

vEdar kula mAthinukkum vEdai kedavE nadiththu
mEvum iru pAtham utRu – varavENum

ARum midai vAL arakkar neeRu pada vEl eduththa
ARu mukanE kuRaththi – maNavALA

Azhi ulaku Ezhu adakki vAsukiyai vAy adakki
Alum mayil ERi niRkum – iLaiyOnE

seeRu pada mEru veRpai neeRu padavE sinaththa
sEvalava neepam moyththa – thiraL thOLA

sErum adalAl mikuththa cUrar kodu pOy adaiththa
thEvar siRai meeLa vitta – perumALE