திருப்புகழ் 1190 மின்னினில் நடுக்கம் (பொதுப்பாடல்கள்)

Thiruppugal 1190 Minninilnadukkam

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தன்னதன தத்த தத்த தன்னதன தத்த தத்த
தன்னதன தத்த தத்த – தனதான

மின்னினில்ந டுக்க முற்ற நுண்ணியநு சுப்பில் முத்த
வெண்ணகையில் வட்ட மொத்து – அழகார

விம்மியிள கிக்க தித்த கொம்மைமுலை யிற்கு னித்த
வின்னுதலி லிட்ட பொட்டில் – விலைமாதர்

கன்னல்மொழி யிற்சி றக்கு மன்னநடை யிற்க றுத்த
கண்ணினிணை யிற்சி வத்த – கனிவாயிற்

கண்ணழிவு வைத்த புத்தி ஷண்முகநி னைக்க வைத்த
கன்மவச மெப்ப டிக்கு – மறவேனே

அன்னநடை யைப்ப ழித்த மஞ்ஞைமலை யிற்கு றத்தி
யம்மையட விப்பு னத்தில் – விளையாடும்

அன்னையிறு கப்பி ணித்த பன்னிருதி ருப்பு யத்தில்
அன்னியஅ ரக்க ரத்த – னையுமாளப்

பொன்னுலகி னைப்பு ரக்கு மன்னநல்வ்ர தத்தை விட்ட
புன்மையர்பு ரத்ர யத்தர் – பொடியாகப்

பொன்மலைவ ளைத்தெ ரித்த கண்ணுதலி டத்தி லுற்ற
புண்ணியவொ ருத்தி பெற்ற – பெருமாளே.

பதம் பிரித்தது

தன்னதன தத்த தத்த தன்னதன தத்த தத்த
தன்னதன தத்த தத்த – தனதான

மின்னினில் நடுக்கம் உற்ற நுண்ணிய நுசுப்பில் முத்த
வெண் நகையில் வட்டம் ஒத்து – அழகு ஆர

விம்மி இளகிக் கதித்த கொம்மை முலையில் குனித்த
வில் நுதலில் இட்ட பொட்டில் – விலைமாதர்

கன்னல் மொழியில் சிறக்கும் அன்ன நடையில் கறுத்த
கண்ணின் இணையில் சிவந்த – கனி வாயில்

கண் அழிவு வைத்த புத்தி ஷண்முக நினைக்க வைத்த
கன்ம வசம் எப்படிக்கு – மறவேனே

அன்ன நடையைப் பழித்த மஞ்ஞை மலையில் குறத்தி
அம்மை அடவிப் புனத்தில் – விளையாடும்

அன்னை இறுகப் பிணித்த பன்னிரு திருப் புயத்தில்
அன்னிய அரக்கர் அத்தனையு(ம்) – மாள

பொன்னுலகினைப் புரக்கும் மன்ன நல் வ்ரதத்தை விட்ட
புன்மையர் புர த்ரய அத்தர் – பொடியாக

பொன் மலை வளைத்து எரித்த கண் நுதல் இடத்தில் உற்ற
புண்ணிய ஒருத்தி பெற்ற – பெருமாளே.

English

minninilna dukka mutRa nuNNiyanu suppil muththa
veNNakaiyil vatta moththu – azhakAra

vimmiyiLa kikka thiththa kommaimulai yiRku niththa
vinnuthali litta pottil – vilaimAthar

kannalmozhi yiRchi Rakku mannanadai yiRka Ruththa
kaNNiniNai yiRchi vaththa – kanivAyiR

kaNNazhivu vaiththa puththi shaNmugani naikka vaiththa
kanmavasa meppa dikku – maRavEnE

annanadai yaippa zhiththa manjnjaimalai yiRku Raththi
yammaiyada vippu naththil – viLaiyAdum

annaiyiRu kappi Niththa panniruthi ruppu yaththil
anniya arakka raththa – naiyumALap

ponnulaki naippu rakku mannanalvra thaththai vitta
punmaiyarpu rathra yaththar – podiyAkap

ponmalaiva Laiththe riththa kaNNuthali daththi lutRa
puNNiyavo ruththi petRa – perumALE.

English Easy Version

minninil nadukkam utRa nuNNiya nusuppil muththa
veN nakaiyil vattam oththu – azhaku Ara

vimmi iLakik kathiththa kommai mulaiyil kuniththa
vil nuthalil itta pottil – vilai mAthar

kannal mozhiyil siRakkum anna nadaiyil kaRuththa
kaNNin iNaiyil sivantha – kani vAyil

kaN azhivu vaiththa puththi shaNmuga ninaikka vaiththa
kanma vasam eppadikku – maRavEnE

anna nadaiyaip pazhiththa manjnjai malaiyil kuRaththi
ammai adavip punaththil – viLaiyAdum

Annai iRukap piNiththa panniru thirup puyaththil
anniya arakkar aththanaiyu(m) – mALa

ponnulakinaip purakkum manna nal vrathaththai vitta
punmaiyar pura thraya aththar – podiyAka

pon malai vaLaiththu eriththa kaN nuthal idaththil utRa
puNNiya oruththi petRa – perumALE.