திருப்புகழ் 1191 முத்தம் உலாவு (பொதுப்பாடல்கள்)

Thiruppugal 1191 Muththamulavu

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தத்தன தான தனத்தன தத்தன தான தனத்தன
தத்தன தான தனத்தன – தனதான

முத்தமு லாவு தனத்தியர் சித்தச னாணை செலுத்திகள்
முத்தமி டாம னுருக்கிக – ளிளைஞோர்பால்

முட்டவு லாவி மருட்டிகள் நெட்டிலை வேலின் விழிச்சியர்
முப்பது கோடி மனத்திய – ரநுராகத்

தத்தைக ளாசை விதத்தியர் கற்புர தோளின் மினுக்கிகள்
தப்புறு மாற கமெத்திக – ளளவேநான்

தட்டழி யாது திருப்புகழ் கற்கவு மோத வுமுத்தமிழ்
தத்துவ ஞான மெனக்கருள் – புரிவாயே

மத்தக யானை யுரித்தவர் பெற்றகு மார இலட்சுமி
மைத்துன னாகி யவிக்ரமன் – மருகோனே

வற்றிட வாரி திமுற்றிய வெற்றிகொள் சூரர் பதைப்புற
வற்புறு வேலை விடுத்தரு – ளிளையோனே

சித்திர மான குறத்தியை யுற்றொரு போது புனத்திடை
சிக்கென வேத ழுவிப்புணர் – மணவாளா

செச்சையு லாவு பதத்தின மெய்த்தவர் வாழ்வு பெறத்தரு
சித்தவி சாக வியற்சுரர் – பெருமாளே.

பதம் பிரித்தது

தத்தன தான தனத்தன தத்தன தான தனத்தன
தத்தன தான தனத்தன – தனதான

முத்தம் உலாவு தனத்தியர் சித்தசன் ஆணை செலுத்திகள்
முத்தம் இடா மன உருக்கிகள் – இளைஞோர் பால்

முட்ட உலாவி மருட்டிகள் நெட்டு இலை வேலின் விழிச்சியர்
முப்பது கோடி மனத்தியர் – அநுராகத்

தத்தைகள் ஆசை விதத்தியர் கற்புர தோளின் மினுக்கிகள்
தப்புறும் ஆறு அகம் எத்திகள் – அளவே நான்

தட்டு அழியாது திருப்புகழ் கற்கவும் ஓதவும் முத்தமிழ்
தத்துவ ஞானம் எனக்கு – அருள் புரிவாயே

மத்தக யானை உரித்தவர் பெற்ற குமார இலட்சுமி
மைத்துனனாகிய விக்ரமன் – மருகோனே

வற்றிட வாரிதி முற்றிய வெற்றி கொள் சூரர் பதைப்பு உற
வற்பு உறு வேலை விடுத்து அருள் – இளையோனே

சித்திரமான குறத்தியை உற்று ஒரு போது புனத்து இடை
சிக்கெனவே தழுவிப் புணர் – மணவாளா

செச்சை உலாவு பதத்தின மெய்த் தவர் வாழ்வு பெறத் தரு
சித்த விசாக இயல் சுரர் – பெருமாளே

English

muththamu lAvu thanaththiyar siththasa nANai seluththikaL
muththami dAma nurukkika – LiLainjOrpAl

muttavu lAvi maruttikaL nettilai vElin vizhicchiyar
muppathu kOdi manaththiya – ranurAkath

thaththaika LAsai vithaththiyar kaRpura thOLin minukkikaL
thappuRu mARa kameththika – LaLavEnAn

thattazhi yAthu thiruppukazh kaRkavu mOtha vumuththamizh
thaththuva njAna menakkaruL – purivAyE


maththaka yAnai yuriththavar petRaku mAra ilatchumi
maiththuna nAki yavikraman – marukOnE

vatRida vAri thimutRiya vetRikoL cUrar pathaippuRa
vaRpuRu vElai viduththaru – LiLaiyOnE

siththira mAna kuRaththiyai yutRoru pOthu punaththidai
sikkena vEtha zhuvippuNar – maNavALA

secchaiyu lAvu pathaththina meyththavar vAzhvu peRaththaru
siththavi sAka viyaRcurar – perumALE.

English Easy Version

muththam ulAvu thanaththiyar siththasan ANai seluththikaL
muththam idA mana urukkikaL – iLainjOr pAl

mutta ulAvi maruttikaL nettu ilai vElin vizhicchiyar
muppathu kOdi manaththiyar – anurAkath

thaththaikaL Asai vithaththiyar kaRpura thOLin minukkikaL
thappuRum ARu akam eththikaL – aLavE nAn

thattu azhiyAthu thiruppukazh kaRkavum Othavum muththamizh
thaththuva njAnam enakku – aruL purivAyE

maththaka yAnai uriththavar petRa kumAra ilatchumi
maiththunanAkiya vikraman – marukOnE

vatRida vArithi mutRiya vetRi koL cUrar pathaippu uRa
vaRpu uRu vElai viduththu aruL – iLaiyOnE

siththiramAna kuRaththiyai utRu oru pOthu punaththu idai
sikkenavE thazhuvip puNar – maNavALA

secchai ulAvu pathaththina meyth thavar vAzhvu peRath tharu
siththa visAka iyal surar – perumALE