திருப்புகழ் 1192 முருகு லாவிய மைப்பா (பொதுப்பாடல்கள்)

Thiruppugal 1192 Murugulaviyamaippa

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனன தானன தத்தான தானன
தனன தானன தத்தான தானன
தனன தானன தத்தான தானன – தனதான

முருகு லாவிய மைப்பாவு வார்குழல்
முளரி வாய்நெகிழ் வித்தார வேல்விழி
முடுகு வோர்குலை வித்தான கோடெனு – முலையாலே

முறைமை சேர்கெட மைத்தார்வு வார்கடல்
முடுகு வோரென எய்த்தோடி யாகமு
மொழியும் வேறிடு பித்தேறி னாரெனு – முயல்வேகொண்

டுருகு வார்சில சிற்றாம னோலய
முயிரு மாகமு மொத்தாசை யோடுள
முருகி தீமெழு கிட்டான தோவென – வுரையாநண்

புலக வாவொழி வித்தார்ம னோலய
முணர்வு நீடிய பொற்பாத சேவடி
யுலவு நீயெனை வைத்தாள வேயருள் – தருவாயே

குருகு லாவிய நற்றாழி சூழ்நகர்
குமர னேமுனை வெற்பார்ப ராபரை
குழக பூசுரர் மெய்க்காணும் வீரர்தம் – வடிவேலா

குறவர் சீர்மக ளைத்தேடி வாடிய
குழையு நீள்கர வைத்தோடி யேயவர்
குடியி லேமயி லைக்கோடு சோதிய – வுரவோனே

மருகு மாமது ரைக்கூடல் மால்வரை
வளைவு ளாகிய நக்கீர ரோதிய
வளகை சேர்தமி ழுக்காக நீடிய – கரவோனே

மதிய மேவிய சுற்றாத வேணியர்
மகிழ நீநொடி யற்றான போதினில்
மயிலை நீடுல கைச்சூழ வேவிய – பெருமாளே.

பதம் பிரித்தது

தனன தானன தத்தான தானன
தனன தானன தத்தான தானன
தனன தானன தத்தான தானன – தனதான

முருகு உலாவிய மைப் பாவு(ம்) வார் குழல்
முளரி வாய் நெகிழ் வித்தார வேல் விழி
முடுகுவோர் குலை வித்தான கோடு எனு(ம்) – முலையாலே

முறைமை சேர் கெட மைத்து ஆர்வு வார் கடல்
முடுகுவோர் என எய்த்து ஓடி ஆகமும்
மொழியும் வேறிடு பித்து ஏறினார் எனும் – முயல்வே கொண்டு

உருகுவார் சில சிற்றா(ர்) மனோலயம்
உயிரும் ஆகமும் ஒத்து ஆசையோடு உ(ள்)ளம்
உருகி தீ மெழுகு இட்டானதோ என – உரையா நண்பு

உலக அவா ஒழிவித்தார் மனோலயம்
உணர்வு நீடிய பொன் பாத சேவடி
உலவு நீ எ(ன்)னை வைத்து ஆளவே – அருள் தருவாயே

குருகு உலாவிய நல் தாழி சூழ் நகர்
குமரனே முனை வெற்பு ஆர் பராபரை
குழக பூசுரர் மெய்க் காணும் வீரர் தம் – வடிவேலா

குறவர் சீர் மகளைத் தேடி வாடிய
குழையும் நீள் கர வைத்து ஓடியே அவர்
குடியிலே மயிலைக் கோடு சோதிய – உரவோனே

மருகு மா மதுரைக் கூடல் மால் வரை
வளைவுள் ஆகிய நக்கீரர் ஓதிய
வளகை சேர் தமிழுக்காக நீடிய – கரவோனே

மதிய(ம்) மேவிய சுற்றாத வேணியர்
மகிழ நீ நொடியற்றான போதினில்
மயிலை நீடு உலகைச் சூழ – ஏவிய பெருமாளே.

English

muruku lAviya maippAvu vArkuzhal
muLari vAynekizh viththAra vElvizhi
muduku vOrkulai viththAna kOdenu – mulaiyAlE

muRaimai sErkeda maiththArvu vArkadal
muduku vOrena eyththOdi yAkamu
mozhiyum vERidu piththERi nArenu – muyalvEkoN

duruku vArsila sitRAma nOlaya
muyiru mAkamu moththAsai yOduLa
muruki theemezhu kittAna thOvena – vuraiyAnaN

pulaka vAvozhi viththArma nOlaya
muNarvu neediya poRpAtha sEvadi
yulavu neeyenai vaiththALa vEyaruL – tharuvAyE

kuruku lAviya natRAzhi cUzhnakar
kumara nEmunai veRpArpa rAparai
kuzhaka pUsurar meykkANum veerartham – vadivElA

kuRavar seermaka LaiththEdi vAdiya
kuzhaiyu neeLkara vaiththOdi yEyavar
kudiyi lEmayi laikkOdu sOthiya – vuravOnE

maruku mAmathu raikkUdal mAlvarai
vaLaivu LAkiya nakkeera rOthiya
vaLakai sErthami zhukkAka neediya – karavOnE

mathiya mEviya sutRAtha vENiyar
makizha neenodi yatRAna pOthinil
mayilai needula kaiccUzha vEviya – perumALE.

English Easy Version

muruku ulAviya maip pAvu(m) vAr kuzhal
muLari vAy nekizh viththAra vEl vizhi
mudukuvOr kulai viththAna kOdu enu(m) – mulaiyAlE

muRaimai sEr keda maiththu Arvu vAr kadal
mudukuvOr ena eyththu Odi Akamum
mozhiyum vERidu piththu ERinAr enum – muyalvE koNdu

urukuvAr sila sitRA(r) manOlayam
uyirum Akamum oththu AsaiyOdu u(L)Lam
uruki thee mezhuku ittAnathO ena – uraiyA naNpu

ulaka avA ozhiviththAr manOlayam
uNarvu neediya pon pAtha sEvadi
ulavu nee e(n)nai vaiththu ALavE aruL – tharuvAyE

kuruku ulAviya nal thAzhi cUzh nakar
kumaranE munai veRpu Ar parAparai
kuzhaka pUsurar meyk kANum veerar tham – vadivElA

kuRavar seer makaLaith thEdi vAdiya
kuzhaiyum neeL kara vaiththu OdiyE avar
kudiyilE mayilaik kOdu sOthiya – uravOnE

maruku mA mathuraik kUdal mAl varai
vaLaivuL Akiya nakkeerar Othiya
vaLakai sEr thamizhukkAka neediya – karavOnE

mathiya(m) mEviya sutRAtha vENiyar
makizha nee nodiyatRAna pOthinil
mayilai needu ulakais cUzha Eviya – perumALE.,