திருப்புகழ் 1193 முலைமேலிற் கலிங்க (பொதுப்பாடல்கள்)

Thiruppugal 1193 Mulaimelirtkalingka

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனனானத் தனந்த தந்தன
தனனானத் தனந்த தந்தன
தனனானத் தனந்த தந்தன – தனதான

முலைமேலிற் கலிங்க மொன்றிட
முதல்வானிற் பிறந்த மின்பிறை
நுதல்மேல்முத் தரும்ப புந்தியி – லிதமார

முகநேசித் திலங்க வும்பல
வினைமூசிப் புரண்ட வண்கடல்
முரணோசைக் கமைந்த வன்சர – மெனமூவா

மலர்போலச் சிவந்த செங்கணில்
மருள்கூர்கைக் கிருண்ட அஞ்சனம்
வழுவாமற் புனைந்து திண்கய – மெனநாடி

வருமாதர்க் கிரங்கி நெஞ்சமு
மயலாகிப் பரந்து நின்செயல்
மருவாமற் கலங்கும் வஞ்சக – மொழியாதோ

தொலையாநற் றவங்க ணின்றுனை
நிலையாகப் புகழ்ந்து கொண்டுள
அடியாருட் டுலங்கி நின்றருள் – துணைவேளே

துடிநேரொத் திலங்கு மென்கொடி
யிடைதோகைக் கிசைந்த வொண்டொடி
சுரர்வாழப் பிறந்த சுந்தரி – மணவாளா

மலைமாளப் பிளந்த செங்கையில்
வடிவேலைக் கொடந்த வஞ்சக
வடிவாகக் கரந்து வந்தமர் – பொருசூரன்

வலிமாளத் துரந்த வன்திறல்
முருகாமற் பொருந்து திண்புய
வடிவாமற் றநந்த மிந்திரர் – பெருமாளே.

பதம் பிரித்தது

தனனானத் தனந்த தந்தன
தனனானத் தனந்த தந்தன
தனனானத் தனந்த தந்தன – தனதான

முலை மேலில் கலிங்கம் ஒன்றிட
வானில் முதல் பிறந்த மின் பிறை
நுதல் மேல் முத்து அரும்ப புந்தியில் – இதம் ஆர

முகம் நேசித்து இலங்கவும் பல
வினை மூசிப் புரண்ட வண் கடல்
முரண் ஓசைக்கு அமைந்தவன் சரம் – என மூவா

மலர் போலச் சிவந்த செம் க(ண்)ணில்
மருள் கூர்கைக்கு இருண்ட அஞ்சனம்
வழுவாமல் புனைந்து திண் கயம் – என நாடி

வரும் மாதர்க்கு இரங்கி நெஞ்சமும்
மயலாகிப் பரந்து நின் செயல்
மருவாமல் கலங்கும் வஞ்சகம் – ஒழியாதோ

தொலையா நல் தவங்கள் நின்று உ(ன்)னை
நிலையாகப் புகழ்ந்து கொண்டு உ(ள்)ள
அடியார் உள் துலங்கி நின்று அருள் – துணை வேளே

துடி நேர் ஒத்து இலங்கு மென் கொடி
இடை தோகைக்கு இசைந்த ஒண் தொடி
சுரர் வாழப் பிறந்த சுந்தரி – மணவாளா

மலை மாளப் பிளந்த செம் கையில்
வடி வேலைக் கொ(ண்)டு அந்த வஞ்சக
வடிவாகக் கரந்து வந்து அமர் – பொரு சூரன்

வலி மாளத் துரந்த வன் திறல்
முருகா மல் பொருந்து திண் புய
வடிவா மற்று அநந்தம் இந்திரர் – பெருமாளே

English

mulaimEliR kalinga monRida
muthalvAniR piRantha minpiRai
nuthalmElmuth tharumpa punthiyi – lithamAra

mukanEsith thilanga vumpala
vinaimUsip puraNda vaNkadal
muraNOsaik kamaintha vanchara – menamUvA

malarpOlac chivantha sengaNil
maruLkUrkaik kiruNda anjanam
vazhuvAmaR punainthu thiNkaya – menanAdi

varumAthark kirangi nenjamu
mayalAkip paranthu ninseyal
maruvAmaR kalangum vanjaka – mozhiyAthO

tholaiyAnat Ravanga NinRunai
nilaiyAkap pukazhnthu koNduLa
adiyArut tulangi ninRaruL – thuNaivELE

thudinEroth thilangu menkodi
yidaithOkaik kisaintha voNdodi
surarvAzhap piRantha sunthari – maNavALA

malaimALap piLantha sengaiyil
vadivElaik kodantha vanjaka
vadivAkak karanthu vanthamar – porucUran

valimALath thurantha vanthiRal
murukAmaR porunthu thiNpuya
vadivAmat Ranantha minthirar – perumALE.

English Easy Version

mulai mElil kalingam onRida
vAnil muthal piRantha min piRai
nuthal mEl muththu arumpa punthiyil – itham Ara

mukam nEsiththu ilangavum pala
vinai mUsip puraNda vaN kadal
muraN Osaikku amainthavan saram – ena mUvA

malar pOlac chivantha sem ka(N)Nil
maruL kUrkaikku iruNda anjanam
vazhuvAmal punainthu thiN kayam – ena nAdi

varum mAtharkku irangi nenjamum
mayalAkip paranthu nin seyal
maruvAmal kalangum vanjakam – ozhiyAthO

tholaiyA nal thavangaL ninRu u(n)nai
nilaiyAkap pukazhnthu koNdu u(L)La
adiyAr uL thulangi ninRu aruL – thuNai vELE

thudi nEr oththu ilangu men kodi
idai thOkaikku isaintha oN thodi
surar vAzhap piRantha sunthari – maNavALA

malai mALap piLantha sem kaiyil
vadi vElaik ko(N)du antha vanjaka
vadivAkak karanthu vanthu amar – poru cUran

vali mALath thurantha van thiRal
murukA mal porunthu thiN puya
vadivA matRu anantham inthirar – perumALE.