திருப்புகழ் 1194 முனை அழிந்தது (பொதுப்பாடல்கள்)

Thiruppugal 1194 Munaiazhindhadhu

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனன தந்தன தாத்தன தந்தன
தனன தந்தன தாத்தன தந்தன
தனன தந்தன தாத்தன தந்தன – தனதான

முனைய ழிந்தது மேட்டிகு லைந்தது
வயது சென்றது வாய்ப்ப லுதிர்ந்தது
முதுகு வெஞ்சிலை காட்டிவ ளைந்தது – ப்ரபையான

முகமி ழிந்தது நோக்குமி ருண்டது
இருமல் வந்தது தூக்கமொ ழிந்தது
மொழித ளர்ந்தது நாக்குவி ழுந்தது – அறிவேபோய்

நினைவ யர்ந்தது நீட்டல் முடங்கலு
மவச மும்பல ஏக்கமு முந்தின
நெறிம றந்தது மூப்பு முதிர்ந்தது – பலநோயும்

நிலுவை கொண்டது பாய்க்கிடை கண்டது
சலம லங்களி னாற்றமெ ழுந்தது
நிமிஷ மிங்கினி யாச்சுதென் முன்பினி – தருள்வாயே

இனைய இந்திர னேற்றமு மண்டர்கள்
தலமு மங்கிட வோட்டியி ருஞ்சிறை
யிடுமி டும்புள ராக்கதர் தங்களில் – வெகுகோடி

எதிர்பொ ரும்படி போர்க்குளெ திர்ந்தவர்
தசைசி ரங்களு நாற்றிசை சிந்திட
இடிமு ழங்கிய வேற்படை யொன்றனை – யெறிவோனே

தினைவ னங்கிளி காத்தச வுந்தரி
அருகு சென்றடி போற்றிம ணஞ்செய்து
செகம றிந்திட வாழ்க்கைபு ரிந்திடு – மிளையோனே

திரிபு ரம்பொடி யாக்கிய சங்கரர்
குமர கந்தப ராக்ரம செந்தமிழ்
தெளிவு கொண்டடி யார்க்குவி ளம்பிய – பெருமாளே.

பதம் பிரித்தது

தனன தந்தன தாத்தன தந்தன
தனன தந்தன தாத்தன தந்தன
தனன தந்தன தாத்தன தந்தன – தனதான

முனை யழிந்தது மேட்டி குலைந்தது
வயது சென்றது வாய்ப்ப லுதிர்ந்தது
முதுகு வெஞ்சிலை காட்டி வளைந்தது – ப்ரபையான

முகம் இழிந்தது நோக்கும் இருண்டது
இருமல் வந்தது தூக்கமொ ழிந்தது
மொழித ளர்ந்தது நாக்குவி ழுந்தது – அறிவேபோய்

நினைவ யர்ந்தது நீட்டல் முடங்கலும்
அவசமும்பல ஏக்கமும் உந்தின
நெறிமறந்தது மூப்பு முதிர்ந்தது – பலநோயும்

நிலுவை கொண்டது பாய்க்கிடை கண்டது
சலமலங்களின் நாற்றமெழுந்தது
நிமிஷ மிங்கினி யாச்சுது என் முன்பு இனிது – அருள்வாயே

இனைய இந்திர னேற்றமும் அண்டர்கள்
தலமு மங்கிட வோட்(டி) இருஞ்சிறையிடும்
இடும்புள ராக்கதர் தங்களில் – வெகுகோடி

எதிர்பொரும்படி போர்க்குள் எதிர்ந்தவர்
தசைசிரங்களு நாற்றிசை சிந்திட
இடிமுழங்கிய வேற்படையொன்றனை – எறிவோனே

தினைவனங்கிளி காத்த சவுந்தரி
அருகு சென்றடி போற்றிமணஞ்செய்து
செகமறிந்திட வாழ்க்கை புரிந்திடும் – இளையோனே

திரிபுரம்பொடி யாக்கிய சங்கரர்
குமர கந்தபராக்ரம செந்தமிழ்
தெளிவு கொண்டு அடியார்க்கு விளம்பிய – பெருமாளே

English

munai azhindhadhu mEtti kulaindhadhu
vayadhu sendradhu vAyppal udhirndhadhu
mudhugu venjchilai kAtti vaLaindhadhu – prabaiyAna

mukam izhindhadhu nOkkum iruNdadhu
irumal vandhadhu thUkkam ozhindhadhu
mozhi thaLarndhadhu nAkku vizhundhadhu – aRivEpOy

ninai vayarndhadhu neettal mudangalum
avasamum pala Ekkamu mundhina
neRi maRandhadhu mUppu mudhirndhadhu – palanOyum

niluvai koNdadhu pAykkidai kaNdadhu
jala malangaLi nAtram ezhundhadhu
nimisham ingini yAchchudhen munbinidh – aruLvAyE

inaiya indhiran Etramum aNdargaL
thalamu mangida Ottiyirun siRai
idum idumbuLa rAkkadhar thangaLil – vegukOdi

edhir porumpadi pOrkkuL edhirndhavar
dhasai sirangaLu nAtrisai chinthida
idi muzhangiya vERpadai ondranai – eRivOnE

thinaivanang kiLi kAththa savundhari
arugu sendradi pOtri maNanj seydhu
jegam aRindhida vAzhkkai purindhidum – iLaiyOnE

thiripuram podi Akkiya sankarar
kumara kandha parAkrama senthamizh
theLivu koNd adiyArkku viLambiya – perumALE.

English Easy Version

munai azhindhadhu mEtti kulaindhadhu
vayadhu sendradhu vAyppal udhirndhadhu
mudhugu venjchilai kAtti vaLaindhadhu – prabaiyAna

mukam izhindhadhu nOkkum iruNdadhu
irumal vandhadhu thUkkam ozhindhadhu
mozhi thaLarndhadhu nAkku vizhundhadhu – aRivEpOy

ninai vayarndhadhu neettal mudangalum
avasamum pala Ekkamu mundhina
neRi maRandhadhu mUppu mudhirndhadhu – palanOyum

niluvai koNdadhu pAykkidai kaNdadhu
jala malangaLi nAtram ezhundhadhu
nimisham ingini yAchchudhen munbu inidh – aruLvAyE

inaiya indhiran Etramum aNdargaL
thalamu mangida Ottiyirun siRai idum
idumbuLa rAkkadhar thangaLil – vegukOdi

edhir porumpadi pOrkkuL edhirndhavar
dhasai sirangaLu nAtrisai chinthida idi
muzhangiya vERpadai ondranai – eRivOnE

thinaivanang kiLi kAththa savundhari
arugu sendradi pOtri maNanj seydhu
jegam aRindhida vAzhkkai purindhidum – iLaiyOnE

thiripuram podi Akkiya sankarar
Kumara kandha parAkrama senthamizh
theLivu koNd adiyArkku viLambiya – perumALE