திருப்புகழ் 1196 மோது மறலி (பொதுப்பாடல்கள்)

Thiruppugal 1196 Modhumarali

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தான தனதனன தான தாத்தன
தான தனதனன தான தாத்தன
தான தனதனன தான தாத்தன – தனதான

மோது மறலியொரு கோடி வேற்படை
கூடி முடுகியெம தாவி பாழ்த்திட
மோக முடையவெகு மாதர் கூட்டமு – மயலாரும்

மூளு மளவில்விசை மேல்வி ழாப்பரி
தாப முடனும்விழி நீர்கொ ளாக்கொடு
மோக வினையில்நெடு நாளின் மூத்தவ – ரிளையோர்கள்

ஏது கருமமிவர் சாவெ னாச்சிலர்
கூடி நடவுமிடு காடெ னாக்கடி
தேழு நரகினிடை வீழ்மெ னாப்பொறி – யறுபாவி

ஏழு புவனமிகு வான நாட்டவர்
சூழு முநிவர்கிளை தாமு மேத்திட
ஈச னருள்குமர வேத மார்த்தெழ – வருவாயே

சூது பொருதரும னாடு தோற்றிரு
வாறு வருஷம்வன வாச மேற்றியல்
தோகை யுடனுமெவி ராட ராச்சிய – முறைநாளிற்

சூறை நிரைகொடவ ரேக மீட்டெதி
ராளு முரிமைதரு மாறு கேட்டொரு
தூது செலஅடுவ லாண்மை தாக்குவ – னெனமீள

வாது சமர்திருத ரான ராட்டிர
ராஜ குமரர்துரி யோத னாற்பிறர்
நிருபரொடு சேனை தூட்பட – வரிசாப

வாகை விஜயனடல் வாசி பூட்டிய
தேரை முடுகுநெடு மால்ப ராக்ரம
மாயன் மருகஅமர் நாடர் பார்த்திப – பெருமாளே.

பதம் பிரித்தது

தான தனதனன தான தாத்தன
தான தனதனன தான தாத்தன
தான தனதனன தான தாத்தன – தனதான

மோது மறலி ஒரு கோடி வேல் படை
கூடி முடுகி எமது ஆவி பாழ்த்திட
மோகம் உடைய வெகு மாதர் கூட்டமும் – அயலாரும்

மூளும் அளவில் விசை மேல் விழா
பரிதாபமுடனும் விழி நீர் கொளா கொடு
மோக வினையில் நெடு நாளின் மூத்தவர் – இளையோர்கள்

ஏது கருமம் இவர் சாவு என சிலர்
கூடி நடவும் இடு காடு எனா கடிது
ஏழு நரகின் இடை வீழ்ம் எனா பொறியறு – பாவி (எனா)

ஏழு புவனம் மிகு வான நாட்டவர்
சூழும் முநிவர் கிளை தாமும் ஏத்திட
ஈசன் அருள் குமர வேதம் ஆர்த்து எழ – வருவாயே

சூது பொரு தருமன் நாடு தோற்று இரு
ஆறு வருஷம் வனவாசம் ஏற்று இயல்
தோகை உடனுமெ விராடராச்சியம் – உறை நாளில்

சூறை நிரை கொடு அவர் ஏக மீட்டு எதிர்
ஆளும் உரிமை தருமாறு கேட்டு ஒருதூது
செல அடு வல் ஆண்மை தாக்குவன் – என மீள

வாது சமர் திருதரானராட்டிர
ராஜ குமரர் துரியோதனால்
பிறர் மாள மாள நிருபரொடு சேனை தூட்பட – வரி சாப

வாகை விஜயன் அடல் வாசி பூட்டிய
தேரை முடுகு நெடு மால் பராக்ரம
மாயன் மருக அமர் நாடர் பார்த்திப – பெருமாளே.

English

mOdhu maRali oru kOdi vERpadai
kUdi mudugi emadhAvi pAzhth thida
mOham udaiya vegu mAdhar kUttamum – ayalArum

mULum aLavil visai mEl vizhAp pari
dhApa mudanum vizhi neer koLAk kodu
mOha vinaiyil nedu nALin mUththavar – iLaiyOrgaL

Edhu karumam ivar sA enAch silar
kUdi nadavum idugAdenAk kadidh
Ezhu narakinidai veezh menAp poRi – aRupAvi

Ezhu buvanamigu vAna nAttavar
sUzhu munivarkiLai thAmum Eththida
eesan aruL kumara vEdha mArththezha – varuvAyE

sUdhu poru dharuma nAdu thOtriru
ARu varusham vana vAsam Ettriyal
thOgai udanume virAta rAjjiyam – uRainALiR

sURai niraikod avarEga meet edhi
rALum urimai tharumARu kEttoru
dhUthu sela aduval ANmai thAkkuvan – enameeLa

vAdhu samar dhirudharAna rAttira
rAja kumarar dhuriyOdhanAR piRar
mALa niruparodu sEnai thUL pada – varichApa

vAgai vijayan adal vAsi pUttiya
thErai mudugu nedumAl parAkrama
mAyan maruga amar nAdar pArthiba – perumALE.

English Easy Version

mOdhu maRali oru kOdi vERpadai
kUdi mudugi emadhAvi pAzhth thida
mOham udaiya vegu mAdhar kUttamum – ayalArum

mULum aLavil visai mEl vizhA
paridhApa mudanum vizhi neer koLAk kodu
mOha vinaiyil nedu nALin mUththavar – iLaiyOrgaL

Edhu karumam ivar sA enA silar
kUdi nadavum idugAdenA kadidh
Ezhu narakinidai veezh menAp poRi – aRupAvi

Ezhu buvanamigu vAna nAttavar
sUzhu munivarkiLai thAmum Eththida
eesan aruL kumara vEdha mArththezha – varuvAyE

sUdhu poru dharuma nAdu thOtriru
ARu varusham vana vAsam Ettru iyal
thOgai udanume virAta rAjjiyam – uRainALil

sURai niraikod avarEga meetu edhi
ALum urimai tharumARu kEttu oru dhUthu
sela aduval ANmai thAkkuvan – enameeLa

vAdhu samar dhirudharAna rAttira
rAja kumarar dhuriyOdhanAR
piRar mALa niruparodu sEnai thUL pada – varichApa

vAgai vijayan adal vAsi pUttiya
thErai mudugu nedumAl parAkrama
mAyan maruga amar nAdar pArthiba – perumALE.