திருப்புகழ் 1197 வடிகட்டிய தேன் என (பொதுப்பாடல்கள்)

Thiruppugal 1197 Vadikattiyathenena

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனனத்தன தானன தானன
தனனத்தன தானன தானன
தனனத்தன தானன தானன – தனதான

வடிகட்டிய தேனென வாயினி
லுறுதுப்பன வூறலை யார்தர
வரைவிற்றிக ழூடலி லேதரு – மடவார்பால்

அடிபட்டலை பாவநிர் மூடனை
முகடித்தொழி லாமுன நீயுன
தடிமைத்தொழி லாகஎ நாளினி – லருள்வாயோ

பொடிபட்டிட ராவணன் மாமுடி
சிதறச்சிலை வாளிக ளேகொடு
பொருகைக்கள மேவிய மாயவன் – மருகோனே

கொடுமைத்தொழி லாகிய கானவர்
மகிமைக்கொள வேயவர் வாழ்சிறு
குடிலிற்குற மானொடு மேவிய – பெருமாளே.

பதம் பிரித்தது

தனனத்தன தானன தானன
தனனத்தன தானன தானன
தனனத்தன தானன தானன – தனதான

வடி கட்டிய தேன் என வாயினில்
உறு துப்பு அ(ன்)ன ஊறலை ஆர்தர
வரைவில் திகழ் ஊடலிலே தரு – மடவார் பால்

அடி பட்டு அலை பாவ நிர் மூடனை
முகடித் தொழில் ஆம் முன் நீ உனது
அடிமைத் தொழிலாக எ(ந்)நாளினில் – அருள்வாயோ

பொடி பட்டிட ராவணன் மா முடிசிதறச்
சிலை வாளிகளே கொ(ண்)டு
பொருகைக் கள(ம்) மேவிய மாயவன் – மருகோனே

கொடுமைத் தொழில் ஆகிய கானவர்
மகிமைக் கொளவே அவர் வாழ் சிறு
குடிலில் குறமானொடு மேவிய – பெருமாளே

English

vadikattiya thEnena vAyini
luRuthuppana vURalai yArthara
varaivitRika zhUdali lEtharu – madavArpAl

adipattalai pAvanir mUdanai
mukadiththozhi lAmuna neeyuna
thadimaiththozhi lAkae nALini – laruLvAyO

podipattida rAvaNan mAmudi
sithaRacchilai vALika LEkodu
porukaikkaLa mEviya mAyavan – marukOnE

kodumaiththozhi lAkiya kAnavar
makimaikkoLa vEyavar vAzhsiRu
kudiliRkuRa mAnodu mEviya – perumALE.

English Easy Version

vadi kattiya thEn ena vAyinil
uRu thuppu a(n)na URalai Arthara
varaivil thikazh UdalilE tharu – madavAr pAl

adi pattu alai pAva nir mUdanai
mukadith thozhil Am mun nee unathu
adimaith thozhilAka e(n) nALinil – aruLvAyO

podi pattida rAvaNan mA mudisithaRas
silai vALikaLE ko(N)du
porukaik kaLa(m) mEviya mAyavan – marukOnE

kodumaith thozhil Akiya kAnavar
makimaik koLavE avar vAzh siRu
kudilil kuRamAnodu mEviya – perumALE.,