திருப்புகழ் 1198 வட்ட முலைக்கச்சு (பொதுப்பாடல்கள்)

Thiruppugal 1198 Vattamulaikkachchu

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தத்த தனத்தத் தனத்த தத்தன
தத்த தனத்தத் தனத்த தத்தன
தத்த தனத்தத் தனத்த தத்தன – தனதான

வட்ட முலைக்கச் சவிழ்த்து வைத்துள
முத்து வடத்தைக் கழுத்தி லிட்டிரு
மைக்கு வளைக்கட் குறிப்ப ழுத்திய – பொதுமாதர்

மட்ட மளிக்குட் டிருத்தி முத்தணி
மெத்தை தனக்குட் செருக்கி வெற்றிலை
வைத்த பழுப்பச் சிலைச்சு ருட்கடி – யிதழ்கோதிக்

கட்டி யணைத்திட் டெடுத்து டுத்திடு
பட்டை யவிழ்த்துக் கருத்தி தத்தொடு
கற்ற கலைச்சொற் களிற்ப யிற்றுள – முயல்போதுங்

கைக்கு ளிசைத்துப் பிடித்த கட்கமும்
வெட்சி மலர்ப்பொற் பதத்தி ரட்சணை
கட்டு மணிச்சித் திரத்தி றத்தையு – மறவேனே

கொட்ட மிகுத்திட் டரக்கர் பட்டணம்
இட்டு நெருப்புக் கொளுத்தி யத்தலை
கொட்டை பரப்பச் செருக்க ளத்திடை – யசுரோரைக்

குத்தி முறித்துக் குடிப்ப ரத்தமும்
வெட்டி யழித்துக் கனக்க ளிப்பொடு
கொக்க ரியிட்டுத் தெரித்த டுப்பன – வொருகோடிப்

பட்ட பிணத்தைப் பிடித்தி ழுப்பன
சச்ச ரிகொட்டிட் டடுக்கெ டுப்பன
பற்கள் விரித்துச் சிரித்தி ருப்பன – வெகுபூதம்

பட்சி பறக்கத் திசைக்குள் மத்தளம்
வெற்றி முழக்கிக் கொடிப்பி டித்தயில்
பட்ட றவிட்டுத் துரத்தி வெட்டிய – பெருமாளே.

பதம் பிரித்தது

தத்த தனத்தத் தனத்த தத்தன
தத்த தனத்தத் தனத்த தத்தன
தத்த தனத்தத் தனத்த தத்தன – தனதான

வட்ட முலைக் கச்சு அவிழ்த்து வைத்துள
முத்து வடத்தைக் கழுத்தில் இட்டு இரு
மைக் குவளைக் கண் குறிப்பு அழுத்திய – பொது மாதர்

மட்டு அமளிக்குள் திருத்தி முத்து அணி
மெத்தை தனக்குள் செருக்கி வெற்றிலை
வைத்த பழுப் பச்சிலைச் சுருள் கடி – இதழ் கோதி

கட்டி அணைத்திட்டு எடுத்து உடுத்திடு
பட்டை அவிழ்த்துக் கருத்து இதத்தோடு
கற்ற கலைச் சொற்களில் பயிற்று உள(ம்) – முயல் போதும்

கைக்குள் இசைத்துப் பிடித்த கட்கமும்
வெட்சி மலர்ப் பொன் பதத்து இரட்சணை
கட்டு மணிச் சித்திரத் திறத்தையு(ம்) – மறவேனே

கொட்ட(ம்) மிகுத்திட்ட அரக்கர் பட்டணம்
இட்டு நெருப்புக் கொளுத்தி அத் தலை
கொட்டை பரப்பச் செருக் களத்து இடை – அசுரோரைக்

குத்தி முறித்துக் குடிப்ப ரத்தமும்
வெட்டி அழித்து கனக் களிப்பொடு
கொக்கரி இட்டுத் தெரித்து அடுப்பன – ஒரு கோடிப்

பட்ட பிணத்தைப் பிடித்து இழுப்பன
சச்சரி கொட்டிட்டு அடுக்கு எடுப்பன
பற்கள் விரித்துச் சிரித்து இருப்பன – வெகு பூதம்

பட்சி பறக்கத் திசைக்குள் மத்தளம்
வெற்றி முழக்கிக் கொடிப் பிடித்து அயில்
பட்டு அற விட்டுத் துரத்தி வெட்டிய – பெருமாளே.

English

vatta mulaikkac chavizhththu vaiththuLa
muththu vadaththaik kazhuththi littiru
maikku vaLaikkat kuRippa zhuththiya – pothumAthar

matta maLikkut tiruththi muththaNi
meththai thanakkut cherukki vetRilai
vaiththa pazhuppac chilaicchu rutkadi – yithazhkOthik

katti yaNaiththit teduththu duththidu
pattai yavizhththuk karuththi thaththodu
katRa kalaicchoR kaLiRpa yitRuLa – muyalpOthung

kaikku Lisaiththup pidiththa katkamum
vetchi malarppoR pathaththi ratchaNai
kattu maNicchith thiraththi Raththaiyu – maRavEnE

kotta mikuththit tarakkar pattaNam
ittu neruppuk koLuththi yaththalai
kottai parappac cherukka Laththidai – yasurOraik

kuththi muRiththuk kudippa raththamum
vetti yazhiththuk kanakka Lippodu
kokka riyittuth theriththa duppana – vorukOdip

patta piNaththaip pidiththi zhuppana
saccha rikottit tadukke duppana
paRkaL viriththuc chiriththi ruppana – vekupUtham

patchi paRakkath thisaikkuL maththaLam
vetRi muzhakkik kodippi diththayil
patta Ravittuth thuraththi vettiya – perumALE.

English Easy Version

vatta mulaik kacchu avizhththu vaiththuLa
muththu vadaththaik kazhuththil ittu iru
maik kuvaLaik kaN kuRippu azhuththiya – pothu mAthar

mattu amaLikkuL thiruththi muththu aNi
meththai thanakkuL serukki vetRilai
vaiththa pazhup pacchilaic churuL kadi – ithazh kOthi

katti aNaiththittu eduththu uduththidu
pattai avizhththuk karuththu ithaththOdu
katRa kalaic choRkaLil payitRu uLa(m) – muyal pOthum

kaikkuL isaiththup pidiththa katkamum
vetchi malarp pon pathaththu iratchaNai
kattu maNic chiththirath thiRaththaiyu(m) – maRavEnE

kotta(m) mikuththitta arakkar pattaNam
ittu neruppuk koLuththi ath thalai
kottai parappac cheruk kaLaththu idai – asurOraik

kuththi muRiththuk kudippa raththamum
vetti azhiththu kanak kaLippodu
kokkari ittuth theriththu aduppana – oru kOdip

patta piNaththaip pidiththu izhuppana
sacchari kottittu adukku eduppana
paRkaL viriththuc chiriththu iruppana – veku pUtham

patchi paRakkath thisaikkuL maththaLam
vetRi muzhakkik kodip pidiththu ayil
pattu aRa vittuth thuraththi vettiya – perumALE.