திருப்புகழ் 1200 வாடையில் மதனை (பொதுப்பாடல்கள்)

Thiruppugal 1200 Vadaiyilmadhanai

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தானன தனன தனத்தத்த
தானன தனன தனத்தத்த
தானன தனன தனத்தத்த – தனதான

வாடையில் மதனை யழைத்துற்று
வாள்வளை கலக லெனக்கற்றை
வார்குழல் சரிய முடித்திட்டு – துகிலாரும்

மால்கொள நெகிழ வுடுத்திட்டு
நூபுர மிணைய டியைப்பற்றி
வாய்விட நுதல்மி சைபொட்டிட்டு – வருமாய

நாடக மகளிர் நடிப்புற்ற
தோதக வலையி லகப்பட்டு
ஞாலமு முழுது மிகப்பித்த – னெனுமாறு

நாணமு மரபு மொழுக்கற்று
நீதியு மறிவு மறக்கெட்டு
நாயடி மையும டிமைப்பட்டு – விடலாமோ

ஆடிய மயிலி னையொப்புற்று
பீலியு மிலையு முடுத்திட்டு
ஆரினு மழகு மிகப்பெற்று – யவனாளும்

ஆகிய விதண்மி சையுற்றிட்டு
மானின மருள விழித்திட்டு
ஆயுத கவணொ ருகைச்சுற்றி – விளையாடும்

வேடுவர் சிறுமி யொருத்திக்கு
யான்வழி யடிமை யெனச்செப்பி
வீறுள அடியி ணையைப்பற்றி – பலகாலும்

வேதமு மமர ருமெய்ச்சக்ர
வாளமு மறிய விலைப்பட்டு
மேருவில் மிகவு மெழுத்திட்ட – பெருமாளே.

பதம் பிரித்தது

தானன தனன தனத்தத்த
தானன தனன தனத்தத்த
தானன தனன தனத்தத்த – தனதான

வாடையில் மதனை அழைத்து உற்று
வாள் வளை கலகல் எனக் கற்றை
வார் குழல் சரிய முடித்திட்டு – துகில் ஆரும்

மால் கொ(ள்)ள நெகிழ உடுத்திட்டு
நூபுரம் இணை அடியைப் பற்றி
வாய் விட நுதல் மிசை பொட்டிட்டு – வரு(ம்) மாய

நாடக மகளிர் நடிப்புற்ற
தோதக வலையில் அகப்பட்டு
ஞாலமும் முழுது மிக பித்தன் – எனுமாறு

நாணமும் மரபும் ஒழுக்கு அற்று
நீதியும் அறிவும் அறக் கெட்டு
நாய் அடிமையும் அடிமைப்பட்டு – விடலாமோ

ஆடிய மயிலினை ஒப்புற்று
பீலியும் இலையும் உடுத்திட்டு
ஆரினும் அழகு மிகப் பெற்று – யவனாளும்

ஆகிய இதண் மிசை உற்றிட்டு
மான் இன(ம்) மருள விழித்திட்டு
ஆயுத கவண் ஒரு கைச் சுற்றி – விளையாடும்

வேடுவர் சிறுமி ஒருத்திக்கு
யான் வழி அடிமை எனச் செப்பி
வீறு உ(ள்)ள அடி இணையைப் பற்றி – பல காலும்

வேதமும் அமரரும் மெய்ச் சக்ர
வாளமும் அறிய விலைப் பட்டு
மேருவில் மிகவும் எழுத்திட்ட – பெருமாளே.

English

vAdaiyil mathanai yazhaiththutRu
vALvaLai kalaka lenakkatRai
vArkuzhal sariya mudiththittu – thukilArum

mAlkoLa nekizha vuduththittu
nUpura miNaiya diyaippatRi
vAyvida nuthalmi saipottittu – varumAya

nAdaka makaLir nadipputRa
thOthaka valaiyi lakappattu
njAlamu muzhuthu mikappiththa – nenumARu

nANamu marapu mozhukkatRu
neethiyu maRivu maRakkettu
nAyadi maiyuma dimaippattu – vidalAmO

Adiya mayili naiyopputRu
peeliyu milaiyu muduththittu
Arinu mazhaku mikappetRu – yavanALum

Akiya vithaNmi saiyutRittu
mAnina maruLa vizhiththittu
Ayutha kavaNo rukaicchutRi – viLaiyAdum

vEduvar siRumi yoruththikku
yAnvazhi yadimai yenaccheppi
veeRuLa adiyi NaiyaippatRi – palakAlum

vEthamu mamara rumeycchakra
vALamu maRiya vilaippattu
mEruvil mikavu mezhuththitta – perumALE.

English Easy Version

vAdaiyil mathanai azhaiththu utRu
vAL vaLai kalakal enak katRai
vAr kuzhal sariya mudiththittu – thukil Arum

mAl ko(L)La nekizha uduththittu
nUpuram iNai adiyaip patRi
vAy vida nuthal misai pottittu varu(m) – mAya

nAdaka makaLir nadipputRa
thOthaka valaiyil akappattu
njAlamum muzhuthu mika piththan – enumARu

nANamum marapum ozhukku atRu
neethiyum aRivum aRak kettu
nAy adimaiyum adimaip pattu – vidalAmO

Adiya mayilinai opputRu
peeliyum ilaiyum uduththittu
Arinum azhaku mikap petRu – yavanALum

Akiya ithaN misai utRittu
mAn ina(m) maruLa vizhiththittu
Ayutha kavaN oru kaic chutRi – viLaiyAdum

vEduvar siRumi oruththikku
yAn vazhi adimai enac cheppi
veeRu u(L)La adi iNaiyaip patRi – pala kAlum

vEthamum amararum meyc chakravALamum
aRiya vilaip pattu
mEruvil mikavum ezhuththitta – perumALE