திருப்புகழ் 1201 விரை சொரியும் (பொதுப்பாடல்கள்)

Thiruppugal 1201 Viraisoriyum

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனதனன தனதனன தனன தாத்ததன
தனதனன தனதனன தனன தாத்ததன
தனதனன தனதனன தனன தாத்ததன – தனதான

விரைசொரியு ம்ருகமதமு மலரும் வாய்த்திலகு
விரிகுழலு மவிழநறு மெழுகு கோட்டுமுலை
மிசையில்வரு பகலொளியை வெருவ வோட்டுமணி – வகையாரம்

விடுதொடைகள் நகநுதியி லறவும் வாய்த்தொளிர
விழிசெருக மொழிபதற அமுது தேக்கியகை
விதறிவளை கலகலென அழகு மேற்பொழிய – அலர்மேவும்

இருசரண பரிபுரசு ருதிக ளார்க்கவச
மிலகுகடல் கரைபுரள இனிமை கூட்டியுள
மிதம்விளைய இருவரெனு மளவு காட்டரிய – அநுராகத்


திடைமுழுகி யெனதுமன தழியு நாட்களினு
மிருசரண இயலும்வினை யெறியும் வேற்கரமு
மெழுதரிய திருமுகமு மருளு மேத்தும்வகை – தரவேணும்

அரிபிரம ரடிவருட வுததி கோத்தலற
அடல்வடவை யனலுமிழ அலகை கூட்டமிட
அணிநிணமு மலைபெருக அறையும் வாச்சியமு – மகலாது


அடல்கழுகு கொடிகெருட னிடைவி டாக்கணமு
மறுகுறளு மெறிகுருதி நதியின் மேற்பரவ
அருணரண முகவயிர வர்களு மார்ப்பரவ – மிடநாளும்

பரவுநிசி சரர்முடிகள் படியின் மேற்குவிய
பவுரிகொடு திரியவரை பலவும் வேர்ப்பறிய
பகர்வரிய ககனமுக டிடிய வேட்டைவரு – மயில்வீரா


படருநெறி சடையுடைய இறைவர் கேட்குரிய
பழயமறை தருமவுன வழியை யார்க்குமொரு
பரமகுரு பரனெனவு மறிவு காட்டவல – பெருமாளே.

பதம் பிரித்தது

தனதனன தனதனன தனன தாத்ததன
தனதனன தனதனன தனன தாத்ததன
தனதனன தனதனன தனன தாத்ததன – தனதான

விரை சொரியு(ம்) ம்ருகமதமு(ம்) மலரும் வாய்த்து இலகு
விரி குழலும் அவிழ நறு மெழுகு கோட்டு முலை
மிசையில் வரு பகல் ஒளியை வெருவ ஓட்டும் மணி – வகை ஆரம்

விடு தொடைகள் நக நுதியில் அறவும் வாய்த்து ஒளிர
விழி செருக மொழி பதற அமுது தேக்கிய கை
விதறி வளை கல கல் என அழகு மேல் பொழிய – அலர் மேவும்

இரு சரண பரிபுர சுருதிகள் ஆர்க்க அவசம்
இலகு கடல் கரை புரள இனிமை கூட்டி உள்ளம்
இதம் விளைய இருவர் எனும் அளவு காட்ட அரிய – அநுராகத்து

இடை முழுகி எனது மனது அழியு(ம்) நாட்களினும்
இரு சரண இயலும் வினை எறியும் வேல் கரமும்
எழுத அரிய திரு முகமும் அருளும் ஏத்தும் வகை – தர வேணும்

அரி பிரமர் அடி வருட உததி கோத்து அலற
அடல் வடவை அனல் உமிழ அலகை கூட்டம் இட
அணி நிணமும் மலை பெருக அறையும் வாச்சியமும் – அகலாது

அடல் கழுகு கொடி கெருடன் இடை விடாக் கணமும்
மறு குறளும் எறி குருதி நதியின் மேல் பரவ
அருண ரண முக வயிரவர்களும் ஆர்ப்பு அரவம் – இட நாளும்

பரவு நிசிசரர் முடிகள் படியின் மேல் குவிய
பவுரி கொ(ண்)டு திரிய வரை பலவும் வேர்ப் பறிய
பகர்வரிய ககன(ம்) முகடு இடிய வேட்டை வரு(ம்) – மயில் வீரா

படரு(ம்) நெறி சடை உடைய இறைவர் கேட்க உரிய
பழய மறை தரு(ம்) மவுன வழியை யார்க்கும் ஒரு
பரம குரு பரன் எனவும் அறிவு காட்ட வ(ல்)ல – பெருமாளே.

English

viraisoriyu mrukamathamu malarum vAyththilaku
virikuzhalu mavizhanaRu mezhuku kOttumulai
misaiyilvaru pakaloLiyai veruva vOttumaNi – vakaiyAram

viduthodaikaL nakanuthiyi laRavum vAyththoLira
vizhiseruka mozhipathaRa amuthu thEkkiyakai
vithaRivaLai kalakalena azhaku mERpozhiya – alarmEvum

irusaraNa paripurasu ruthika LArkkavasa
milakukadal karaipuraLa inimai kUttiyuLa
mithamviLaiya iruvarenu maLavu kAttariya – anurAkath

thidaimuzhuki yenathumana thazhiyu nAtkaLinu
mirusaraNa iyalumvinai yeRiyum vERkaramu
mezhuthariya thirumukamu maruLu mEththumvakai – tharavENum

aripirama radivaruda vuthathi kOththalaRa
adalvadavai yanalumizha alakai kUttamida
aNiniNamu malaiperuka aRaiyum vAcchiyamu – makalAthu


adalkazhuku kodikeruda nidaivi dAkkaNamu
maRukuRaLu meRikuruthi nathiyin mERparava
aruNaraNa mukavayira varkaLu mArpparava – midanALum

paravunisi sararmudikaL padiyin mERkuviya
pavurikodu thiriyavarai palavum vErppaRiya
pakarvariya kakanamuka didiya vEttaivaru – mayilveerA


padaruneRi sadaiyudaiya iRaivar kEtkuriya
pazhayamaRai tharumavuna vazhiyai yArkkumoru
paramakuru paranenavu maRivu kAttavala – perumALE.

English Easy Version

virai soriyu(m) mrukamathamu(m) malarum vAyththu ilaku
viri kuzhalum avizha naRu mezhuku kOttu mulai
misaiyil varu pakal oLiyai veruva Ottum maNi – vakai Aram

vidu thodaikaL naka nuthiyil aRavum vAyththu oLira
vizhi seruka mozhi pathaRa amuthu thEkkiya kai
vithaRi vaLai kala kal ena azhaku mEl pozhiya – alar mEvum

iru saraNa paripura suruthikaL Arkka avasam
ilaku kadal karai puraLa inimai kUtti uLLam
itham viLaiya iruvar enum aLavu kAtta ariya – anurAkaththu

idai muzhuki enathu manathu azhiyu(m) nAtkaLinum
iru saraNa iyalum vinai eRiyum vEl karamum
ezhutha ariya thiru mukamum aruLum Eththum vakai – thara vENum

ari piramar adi varuda uthathi kOththu alaRa
adal vadavai anal umizha alakai kUttam ida
aNi niNamum malai peruka aRaiyum vAcchiyamum – akalAthu

adal kazhuku kodi kerudan idai vidAk kaNamum
maRu kuRaLum eRi kuruthi nathiyin mEl parava
aruNa raNa muka vayiravarkaLum Arppu aravam – ida nALum

paravu nisisarar mudikaL padiyin mEl kuviya
pavuri ko(N)du thiriya varai palavum vErp paRiya
pakarvariya kakana(m) mukadu idiya vEttai varu(m) – mayil veerA

padaru(m) neRi sadai udaiya iRaivar kEtka uriya
pazhaya maRai tharu(m) mavuna vazhiyai yArkkum oru
parama kuru paran enavum aRivu kAtta va(l)la – perumALE