Thiruppugal 1202 Veloththuvendri
மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
– மயூரகிரிநாதனுக்கு அரோகரா –
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –
பாடல்
தானத்த தந்த தந்த தானத்த தந்த தந்த
தானத்த தந்த தந்த – தனதான
வேலொத்து வென்றி யங்கை வேளுக்கு வெஞ்ச ரங்க
ளாமிக்க கண்க ளென்று – மிருதோளை
வேயொக்கு மென்று கொங்கை மேல்வெற்ப தென்று கொண்டை
மேகத்தை வென்ற தென்று – மெழில்மாதர்
கோலத்தை விஞ்ச வெஞ்சொல் கோடித்து வஞ்ச நெஞ்சர்
கூடத்தில் நின்று நின்று – குறியாதே
கோதற்ற நின்ப தங்கள் நேர்பற்றி யின்ப மன்பு
கூர்கைக்கு வந்து சிந்தை – குறுகாதோ
ஞாலத்தை யன்ற ளந்து வேலைக்கு ளுந்து யின்று
நாடத்தி முன்பு வந்த – திருமாலும்
நாடத்த டஞ்சி லம்பை மாவைப்பி ளந்த டர்ந்து
நாகத்த லங்கு லுங்க – விடும்வேலா
ஆலித்தெ ழுந்த டர்ந்த ஆலத்தை யுண்ட கண்ட
ராகத்தில் மங்கை பங்கர் – நடமாடும்
ஆதிக்கு மைந்த னென்று நீதிக்குள் நின்ற அன்பர்
ஆபத்தி லஞ்ச லென்ற – பெருமாளே.
பதம் பிரித்தது
தானத்த தந்த தந்த தானத்த தந்த தந்த
தானத்த தந்த தந்த – தனதான
வேல் ஒத்து வென்றி அங்கை வேளுக்கு வெம் சரங்களாம்
மிக்க கண்கள் என்றும் – இரு தோளை
வேய் ஒக்கும் என்று கொங்கை மேல் வெற்புஅது என்று கொண்டை
மேகத்தை வென்றது என்றும் – எழில் மாதர்
கோலத்தை விஞ்ச வெம் சொல் கோடித்து வஞ்ச நெஞ்சர்
கூடத்தில் நின்று நின்று – குறியாதே
கோது அற்ற நின் பதங்கள் நேர் பற்றி இன்பம் அன்பு
கூர்கைக்கு வந்து சிந்தை – குறுகாதோ
ஞாலத்தை அன்று அளந்து வேலைக்கு(ள்)ளும் துயின்று
நாடு அத்தி முன்பு வந்த – திருமாலும்
நாடத் தடம் சிலம்பை மாவைப் பிளந்து அடர்ந்து
நாகத் தலம் குலுங்க – விடும் வேலா
ஆலித்து எழுந்து அடர்ந்த ஆலத்தை உண்ட
கண்டர் ஆகத்தில் மங்கை பங்கர் – நடமாடும்
ஆதிக்கு மைந்தன் என்று நீதிக்குள் நின்ற அன்பர்
ஆபத்தில் அஞ்சல் என்ற – பெருமாளே.
English
vEloththu venRi yangai vELukku venja ranga
LAmikka kaNka LenRu – miruthOLai
vEyokku menRu kongai mElveRpa thenRu koNdai
mEkaththai venRa thenRu – mezhilmAthar
kOlaththai vinja venjol kOdiththu vanja nenjar
kUdaththil ninRu ninRu – kuRiyAthE
kOthatRa ninpa thangaL nErpatRi yinpa manpu
kUrkaikku vanthu sinthai – kuRukAthO
njAlaththai yanRa Lanthu vElaikku Lunthu yinRu
nAdaththi munpu vantha – thirumAlum
nAdaththa danji lampai mAvaippi Lantha darnthu
nAkaththa lamku lunga – vidumvElA
Aliththe zhuntha darntha Alaththai yuNda kaNda
rAkaththil mangai pangar – nadamAdum
Athikku maintha nenRu neethikkuL ninRa anpar
Apaththi lanja lenRa – perumALE.
English Easy Version
vEl oththu venRi angai vELukku vem sarangaLAm
mikka kaNkaL enRum – iru thOLai
vEy okkum enRu kongai mEl veRpuathu enRu koNdai
mEkaththai venRathu enRum – ezhil mAthar
kOlaththai vinja vem sol kOdiththu vanja nenjar
kUdaththil ninRu ninRu – kuRiyAthE
kOthu atRa nin pathangaL nEr patRi inpam anpu
kUrkaikku vanthu sinthai – kuRukAthO
njAlaththai anRu aLanthu vElaikku(L)Lum thuyinRu
nAdu aththi munpu vantha – thirumAlum
nAdath thadam silampai mAvaip piLanthu adarnthu
nAkath thalam kulunga – vidum vElA
Aliththu ezhunthu adarntha Alaththai uNda kaNdar
Akaththil mangai pangar – nadamAdum
Athikku mainthan enRu neethikkuL ninRa anpar
Apaththil anjal enRa – perumALE.,