Thiruppugal 1204 Adiilvidappinam
மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
– மயூரகிரிநாதனுக்கு அரோகரா –
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –
பாடல்
தனதன தாத்தன தனதன தாத்தன
தனதன தாத்தன – தனதான
அடியில்வி டாப்பிண மடையவி டாச்சிறி
தழியுமுன் வீட்டுமு – னுயர்பாடை
அழகொடு கூட்டுமி னழையுமின் வார்ப்பறை
யழுகையை மாற்றுமி – னொதியாமுன்
எடுமினி யாக்கையை யெனஇடு காட்டெரி
யிடைகொடு போய்த்தமர் – சுடுநாளில்
எயினர்கு லோத்தமை யுடன்மயில் மேற்கடி
தெனதுயிர் காத்திட – வரவேணும்
மடுவிடை போய்ப்பரு முதலையின் வாய்ப்படு
மதகரி கூப்பிட – வளையூதி
மழைமுகில் போற்கக பதிமிசை தோற்றிய
மகிபதி போற்றிடு – மருகோனே
படர்சடை யாத்திகர் பரிவுற ராட்சதர்
பரவையி லார்ப்பெழ – விடும்வேலாற்
படமுனி யாப்பணி தமனிய நாட்டவர்
பதிகுடி யேற்றிய – பெருமாளே.
பதம் பிரித்தது
தனதன தாத்தன தனதன தாத்தன
தனதன தாத்தன – தனதான
அடி இல் விடாப் பிணம் அடைய விடாச் சிறிது
அழியு முன் வீட்டு முன் – உயர் பாடை
அழகொடு கூட்டுமின் அழையுமின் வார்ப்பறை
அழுகையை மாற்றுமி(ன்) – நொதியா முன்
எடுமின் யாக்கையை என இடு காட்டு எரி
இடை கொ(ண்)டு போய்த் தமர் – சுடுநாளில்
எயினர் குல உத்தமை உடன் மயில் மேல் கடிது
எனது உயிர் காத்திட – வரவேணும்
மடு இடை போய்ப் பரு முதலையின் வாய்ப்படு
மத கரி கூப்பிட – வளை ஊதி
மழை முகில் போல் கக பதி மிசை தோற்றிய
மகிபதி போற்றிடு – மருகோனே
படர் சடை ஆத்திகர் பரி உற ராட்சதர்
பரவையில் ஆர்ப்பு எழ – விடும் வேலால்
பட முனியா பணி தமனிய நாட்டவர்
பதி குடி ஏற்றிய – பெருமாளே.
English
adiyilvi dAppiNa madaiyavi dAcchiRi
thazhiyumun veettumu – nuyarpAdai
azhakodu kUttumi nazhaiyumin vAarppaRai
yazhukaiyai mAtRumi – nothiyAmun
edumini yAkkaiyai yenaidu kAtteri
yidaikodu pOyththamar – sudunALil
eyinarku lOththamai yudanmayil mERkadi
thenathuyiar kAththida – varavENum
maduvidai pOypparu muthalaiyin vAyppadu
mathakari kUppida – vaLaiyUthi
mazhaimukil pORkaka pathimisai thOtRiya
makipathi pOtRidu – marukOnE
padarsadai yAththikar parivuRa rAtchathar
paravaiyi lAarppezha – vidumvElAR
padamuni yAppaNi thamaniya nAttavar
pathikudi yEtRiya – perumALE.
English Easy Version
adi il vidAp piNam adaiya vidAc chiRithu
azhiyu mun veettu mun – uyar pAdai
azhakodu kUttumin azhaiyumin vArppaRai
azhukaiyai mAtRumi(n) – nothiyA mun
edumin yAkkaiyai ena idu kAttu eri idai
ko(N)du pOyth thamar – sudunALil
eyinar kula uththamai udan mayil mEl kadithu
enathu uyir kAththida – varavENum
madu idai pOyp paru muthalaiyin vAyppadu
matha kari kUppida – vaLai Uthi
mazhai mukil pOl kaka pathi misai thOtRiya
makipathi pOtRidu – marukOnE
padar sadai Aththikar pari uRa rAtchathar
paravaiyil Arppu ezha vidum – vElAl
pada muniyA paNi thamaniya nAttavar
pathi kudi EtRiya – perumALE,