திருப்புகழ் 1205 அப்படி ஏழும் ஏழும் (பொதுப்பாடல்கள்)

Thiruppugal 1205 Appadiezhumezhum

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தத்தன தான தானன தத்தன தான தானன
தத்தன தான தானன – தனதான

அப்படி யேழு மேழும்வ குத்துவ ழாது போதினி
னக்ரம்வி யோம கோளகை – மிசைவாழும்

அக்ஷர தேவி கோவின்வி திப்படி மாறி மாறிய
னைத்துரு வாய காயம – தடைவேகொண்

டிப்படி யோனி வாய்தொறு முற்பவி யாவி ழாவுல
கிற்றடு மாறி யேதிரி – தருகாலம்

எத்தனை யூழி காலமெ னத்தெரி யாது வாழியி
னிப்பிற வாது நீயருள் – புரிவாயே

கற்பக வேழ மேய்வன பச்சிள ஏனல் மீதுறை
கற்புடை மாது தோய்தரு – மபிராம

கற்புர தூளி லேபன மற்புய பாக சாதன
கற்பக லோக தாரண – கிரிசால

விப்ரச மூக வேதன பச்சிம பூமி காவல
வெட்சியு நீப மாலையு – மணிவோனே

மெத்திய ஆழி சேறெழ வெற்பொடு சூர னீறெழ
விக்ரம வேலை யேவிய – பெருமாளே.

பதம் பிரித்தது

தத்தன தான தானன தத்தன தான தானன
தத்தன தான தானன – தனதான

அப்படி ஏழும் ஏழும் வகுத்து வழாது போதினின்
அக்ரம வியோம கோளகை – மிசை வாழும்

அக்ஷர தேவி கோவின் விதிப்படி மாறி மாறி
அனைத்து உரு ஆய காயம் – அது அடைவே கொண்டு

இப்படி யோனி வாய் தொறும் உற்பவியா விழா உலகில்
தடுமாறியே திரிதரு – காலம்

எத்தனை ஊழி காலம் எனத் தெரியாது
வாழி இனிப் பிறவாது நீ அருள் – புரிவாயே

கற்பகம் வேழம் ஏய்வன பச்சிள ஏனல் மீது உறை
கற்புடை மாது தோய் தரும் – அபிராம

கற்புர தூளி லேபன மல் புய பாக சாதன
கற்பகலோக தாரண – கிரி சால

விப்ர சமூக வேதன பச்சிம பூமி காவல
வெட்சியு(ம்) நீப மாலையும் – அணிவோனே

மெத்திய ஆழி சேறு எழ வெற்பொடு சூரன் நீறு எழ
விக்ரம வேலை ஏவிய – பெருமாளே.

English

appadi yEzhu mEzhumva kuththuva zhAthu pOthini
nagramvi yOma kOLakai – misaivAzhuum

akshara thEvi kOvinvi thippadi mARi mARiya
naiththuru vAya kAyama – thadaivEkoN

dippadi yOni vAythoRu muRpavi yAvi zhAvula
kitRadu mARi yEthiri – tharukAlam

eththanai yUzhi kAlame naththeri yAthu vAzhiyi
nippiRa vAthu neeyaruL – purivAyE

kaRpaka vEzha mEyvana pacchiLa Enal meethuRai
kaRpudai mAthu thOytharu – mapirAma

kaRpura thULi lEpana maRpuya pAka sAthana
kaRpaka lOka thAraNa – girisAla

viprasa mUka vEthana pacchima bUmi kAvala
vetchiyu neepa mAlaiyu – maNivOnE

meththiya Azhi sERezha veRpodu cUra neeRezha
vikrama vElai yEviya – perumALE.

English Easy Version

appadi Ezhum Ezhum vakuththu vazhAthu pOthinin
Agrama viyOma kOLakai – misai vAzhum

akshara thEvi kOvin vithippadi mARi mARi
anaiththu uru Aya kAyam athu – adaivE koNdu

ippadi yOni vAy thoRum uRpaviyA vizhA ulakil
thadumARiyE thiri – tharu kAlam

eththanai Uzhi kAlam enath theriyAthu vAzhi
inip piRavAthu nee aruL – purivAyE

kaRpakam vEzham Eyvana pacchiLa Enal meethu uRai
kaRpudai mAthu thOy tharum – apirAma

kaRpura thULi lEpana mal puya pAka sAthana
kaRpakalOka thAraNa – giri sAla

vipra samUka vEthana pacchima bUmi kAvala
vetchiyu(m) neepa mAlaiyum – aNivOnE

meththiya Azhi sERu ezha veRpodu cUran neeRu ezha
vikrama vElai Eviya – perumALE