திருப்புகழ் 1206 அயில் விலோசனம் (பொதுப்பாடல்கள்)

Thiruppugal 1206 Ayilvilosanam

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனன தானனம் தனன தானனம்
தனன தானனம் – தனதான

அயில்வி லோசனங் குவிய வாசகம்
பதற ஆனனங் – குறுவேர்வுற்

றளக பாரமுங் குலைய மேல்விழுந்
ததர பானமுண் – டியல்மாதர்

சயில பாரகுங் குமப யோதரந்
தழுவு மாதரந் – தமியேனால்

தவிரொ ணாதுநின் கருணை கூர்தருந்
தருண பாதமுந் – தரவேணும்

கயிலை யாளியுங் குலிச பாணியுங்
கமல யோனியும் – புயகேசன்

கணப ணாமுகங் கிழிய மோதுவெங்
கருட வாகனந் – தனிலேறும்

புயலி லேகரும் பரவ வானிலும்
புணரி மீதினுங் – கிரிமீதும்

பொருநி சாசரன் தனது மார்பினும்
புதைய வேல்விடும் – பெருமாளே.

பதம் பிரித்தது

தனன தானனம் தனன தானனம்
தனன தானனம் – தனதான

அயில் விலோசனம் குவிய வாசகம்
பதற ஆனனம் – குறு வேர்வுற

அளக பாரமும் குலைய மேல் விழுந்து
அதர பானம் உண்டு – இயல் மாதர்

சயில பார(ம்) குங்கும பயோதரம்
தழுவும் ஆதரம் – தமியேனால்

தவிர ஒணாது நின் கருணை கூர் தரும்
தருண பாதமும் – தரவேணும்

கயிலை யாளியும் குலிச பாணியும்
கமல யோனியும் – புயகேசன்

கண பணா முகம் கிழிய மோது வெம்
கருட வாகனம் – தனில் ஏறும்

புயல் இலேகரும் பரவ வானிலும்
புணரி மீதினும் – கிரி மீதும்

பொரு நிசாசரன் தனது மார்பினும்
புதைய வேல் விடும் – பெருமாளே.

English

ayilvi lOchanang kuviya vAsakam
pathaRa Ananang – kuRuvErvut

RaLaka pAramung kulaiya mElvizhun
thathara pAnamuN – diyalmAthar

sayila pArakung kumapa yOtharan
thazhuvu mAtharan – thamiyEnAl

thaviro NAthunin karuNai kUrtharun
tharuNa pAthamun – tharavENum

kayilai yALiyung kulisa pANiyung
kamala yOniyum – puyakEsan

kaNapa NAmukang kizhiya mOthuveng
karuda vAkanan – thanilERum

puyali lEkarum parava vAnilum
puNari meethinung – kirimeethum

poruni sAsaran thanathu mArpinum
puthaiya vElvidum – perumALE.

English Easy Version

ayil vilOchanam kuviya vAsakam
pathaRa Ananam – kuRu vErvuRa

aLaka pAramum kulaiya mEl vizhunthu
athara pAnam uNdu – iyal mAthar

sayila pAra(m) kungkuma payOtharam
thazhuvum Atharam – thamiyEnAl

thavira oNAthu nin karuNai kUr tharum
tharuNa pAthamum – tharavENum

kayilai yALiyum kulisa pANiyum
kamala yOniyum – puyakEsan

kaNa paNA mukam kizhiya mOthu vem
karuda vAkanam – thanil ERum

puyal ilEkarum parava vAnilum
puNari meethinum – kiri meethum

poru nisAsaran thanathu mArpinum
puthaiya vEl vidum – perumALE.,