திருப்புகழ் 1207 அருக்கி மெத்ததோள் (பொதுப்பாடல்கள்)

Thiruppugal 1207 Arukkimeththathol

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனத்த தத்தனா தனத்த தத்தனா
தனத்த தத்தனா – தனதான

அருக்கி மெத்ததோள் திருத்தி யுற்றுமார்
பசைத்து வக்குமா – லிளைஞோரை

அழைத்து மிக்ககா சிழைத்து மெத்தைமீ
தணைத்து மெத்தமா – லதுகூர

உருக்கி யுட்கொள்மா தருக்கு ளெய்த்துநா
வுலற்றி யுட்குநா – ணுடன்மேவி

உழைக்கு மத்தைநீ யொழித்து முத்திபா
லுறக்கு ணத்ததா – ளருள்வாயே

சுருக்க முற்றமால் தனக்கு மெட்டிடா
தொருத்தர் மிக்கமா – நடமாடுஞ்

சுகத்தி லத்தர்தா மிகுத்த பத்திகூர்
சுரக்க வித்தைதா – னருள்வோனே

பெருக்க வெற்றிகூர் திருக்கை கொற்றவேல்
பிடித்து குற்றமா – ரொருசூரன்

பெலத்தை முட்டிமார் தொளைத்து நட்டுளோர்
பிழைக்க விட்டவோர் – பெருமாளே.

பதம் பிரித்தது

தனத்த தத்தனா தனத்த தத்தனா
தனத்த தத்தனா – தனதான

அருக்கி மெத்த தோள் திருத்தி உற்று மார்பு
அசைத்து உவக்கும் மால் – இளைஞோரை

அழைத்து மிக்க காசு இழைத்து மெத்தை மீது
அணைத்து மெத்த – மால் அது கூர

உருக்கி உட்கொள் மாதருக்கு உள் எய்த்து நா
உலற்றி உட்கு – நாணுடன் மேவி

உழைக்கும் அத்தை நீ ஒழித்து முத்தி பால்
உற அக்குணத்த தாள் – அருள்வாயே

சுருக்கம் உற்ற மால் தனக்கும் எட்டிடாது
ஒருத்தர் மிக்க மா – நடமாடும்

சுகத்தில் அத்தர் தாம் மிகுந்த பத்தி கூர்
சுரக்க வித்தை தான் – அருள்வோனே

பெருக்க வெற்றி கூர் திருக் கை கொற்ற வேல்
பிடித்து குற்றம் ஆர் – ஒரு சூரன்

பெலத்தை முட்டி மார் தொளைத்து நட்டு உ(ள்)ளோர்
பிழைக்க விட்ட ஓர் – பெருமாளே.

English

arukki meththathOL thiruththi yutRumAr
pasaiththu vakkumA – liLainjOrai

azhaiththu mikkakA sizhaiththu meththaimee
thaNaiththu meththamA – lathukUra

urukki yutkoLmA tharukku LeyththunA
vulatRi yutkunA – NudanmEvi

uzhaikku maththainee yozhiththu muththipA
luRakku NaththathA – LaruLvAyE

surukka mutRamAl thanakku mettidA
thoruththar mikkamA – nadamAdum

sukaththi laththarthA mikuththa paththikUr
surakka viththaithA – naruLvOnE

perukka vetRikUr thirukkai kotRavEl
pidiththu kutRamA – rorucUran

pelaththai muttimAr thoLaiththu nattuLOr
pizhaikka vittavOr – perumALE.

English Easy Version

arukki meththa thOL thiruththi utRu mArpu
Asaiththu uvakkum mAl – iLainjOrai

azhaiththu mikka kAsu izhaiththu meththai
meethu aNaiththu meththa mAl – athu kUra

urukki utkoL mAtharukku uL eyththu nA
ulatRi utku – nANudan mEvi

uzhaikkum aththai nee ozhiththu muththi pAl
uRa akkuNaththa thAL – aruLvAyE

surukkam utRa mAl thanakkum ettidAthu
oruththar mikka mA – nadamAdum

sukaththil aththar thAm mikuntha paththi kUr
surakka viththai thAn – aruLvOnE

perukka vetRi kUr thiruk kai kotRa vEl
pidiththu kutRam Ar – oru cUran

pelaththai mutti mAr thoLaiththu nattu u(L) LOr
pizhaikka vitta Or – perumALE,