திருப்புகழ் 1208 அரும்பினால் தனி (பொதுப்பாடல்கள்)

Thiruppugal 1208 Arumbinalthani

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனந்த தாத்தனத் தனந்த தாத்தனத்
தனந்த தாத்தனத் – தனதான

அரும்பி னாற்றனிக் கரும்பி னாற்றொடுத்
தடர்ந்து மேற்றெறித் – தமராடும்

அநங்க னார்க்கிளைத் தயர்ந்த ணாப்பியெத்
தரம்பை மார்க்கடைக் – கலமாகிக்

குரும்பை போற்பணைத் தரும்பு றாக்கொதித்
தெழுந்து கூற்றெனக் – கொலைசூழுங்

குயங்கள் வேட்டறத் தியங்கு தூர்த்தனைக்
குணங்க ளாக்கிநற் – கழல்சேராய்

பொருந்தி டார்ப்புரத் திலங்கை தீப்படக்
குரங்கி னாற்படைத் – தொருதேரிற்

புகுந்து நூற்றுவர்க் கொழிந்து பார்த்தனுக்
கிரங்கி யாற்புறத் – தலைமேவிப்

பெருங்கு றோட்டைவிட் டுறங்கு காற்றெனப்
பிறங்க வேத்தியக் – குறுமாசூர்

பிறங்க லார்ப்பெழச் சலங்கள் கூப்பிடப்
பிளந்த வேற்கரப் – பெருமாளே.

பதம் பிரித்தது

தனந்த தாத்தனத் தனந்த தாத்தனத்
தனந்த தாத்தனத் – தனதான

அரும்பினால் தனிக் கரும்பினால் தொடுத்து
அடர்ந்து மேல் தெறிந்து – அமராடும்

அநங்கனார்க்கு இளைத்து அயர்ந்து அணாப்பி எத்து
அரம்பைமார்க்கு – அடைக்கலமாகி

குரும்பை போல் பணைத்து அரும்பு உறாக் கொதித்து
எழுந்து கூற்று எனக் – கொலை சூழும்

குயங்கள் வேட்டு அறத் தியங்கு தூர்த்தனைக்
குணங்கள் ஆக்கி நற் – கழல் சேராய்

பொருந்திடார்ப் புரத்து இலங்கை தீப் படக்
குரங்கினால் படைத்து – ஒரு தேரில்

புகுந்து நூற்றுவர்க்கு ஒழிந்து பார்த்தனுக்கு
இரங்கி ஆல் புறத்து – அலைமேவிப்

பெரும் குறோட்டை விட்டு உறங்கு காற்று எனப்
பிறங்கவே தியக்குறும் – மா சூர்

பிறங்கல் ஆர்ப்பு எழச் சலங்கள் கூப்பிடப்
பிளந்த வேல் கரப் – பெருமாளே.

English

arumpi nAtRanik karumpi nAtRoduth
thadarnthu mEtReRith – thamarAdum

ananga nArkkiLaith thayarntha NAppiyeth
tharampai mArkkadaik – kalamAkik

kurumpai pORpaNaith tharumpu RAkkothith
thezhunthu kUtRenak – kolaisUzhum

kuyangaL vEttaRath thiyangu thUrththanaik
kuNanga LAkkinaR – kazhalsErAy

porunthi dArppurath thilangai theeppadak
kurangi nARpadaith – thoruthEriR

pukunthu nUtRuvark kozhinthu pArththanuk
kirangi yARpuRath – thalaimEvip

perumku ROttaivit tuRangu kAtRenap
piRanga vEththiyak – kuRumAcUr

piRanga lArppezhac chalangaL kUppidap
piLantha vERkarap – perumALE.

English Easy Version

arumpinAl thanik karumpinAl thoduththu
adarnthu mEl theRinthu – amarAdum

ananganArkku iLaiththu ayarnthu aNAppi eththu
arampaimArkku adaikkalam – Aki

kurumpai pOl paNaiththu arumpu uRAk kothiththu
ezhunthu kUtRu enak – kolai sUzhum

kuyangaL vEttu aRath thiyangu thUrththanaik
kuNangaL Akki naR – kazhal sErAy

porunthidArp puraththu ilangai theep padak
kuranginAl padaiththu – oru thEril

pukunthu nUtRuvarkku ozhinthu pArththanukku
irangi Al puRaththu – alaimEvip

perum kuROttai vittu uRangu kAtRu enap
piRangavE thiyakkuRum – mA cUr

piRangal Arppu ezhac chalangaL kUppidap
piLantha vEl karap – perumALE