திருப்புகழ் 1209 அலமலமிப் புலால் (பொதுப்பாடல்கள்)

Thiruppugal 1209 Alamalamippulal

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனதன தத்தனாத் தனதன தத்தனாத்
தனதன தத்தனாத் – தனதான

அலமல மிப்புலாற் புலையுடல் கட்டனேற்
கறுமுக நித்தர்போற் – றியநாதா

அறிவிலி யிட்டுணாப் பொறியிலி சித்தமாய்த்
தணிதரு முத்திவீட் – டணுகாதே

பலபல புத்தியாய்க் கலவியி லெய்த்திடாப்
பரிவொடு தத்தைமார்க் – கிதமாடும்

பகடிது டுக்கன்வாய்க் கறையனெ னத்தராப்
படியில்ம னித்தர்தூற் – றிடலாமோ

குலகிரி பொற்றலாய்க் குரைகடல் வற்றலாய்க்
கொடியஅ ரக்கரார்ப் – பெழவேதக்

குயவனை நெற்றியேற் றவனெதிர் குட்டினாற்
குடுமியை நெட்டைபோக் – கியவீரா

கலைதலை கெட்டபாய்ச் சமணரை நட்டகூர்க்
கழுநிரை முட்டஏற் – றியதாளக்

கவிதையும் வெற்றிவேற் கரமுடன் வற்றிடாக்
கருணையு மொப்பிலாப் – பெருமாளே.

பதம் பிரித்தது

தனதன தத்தனாத் தனதன தத்தனாத்
தனதன தத்தனாத் – தனதான

அலம் அலம் இப் புலால் புலை உடல் கட்டனேற்கு
அறுமுக நித்தர் போற்றிய – நாதா

அறிவிலி இட்டு உணாப் பொறியிலி சித்தம் மாய்த்து
அணி தரு முத்தி வீட்டு – அணுகாதே

பலபல புத்தியாயக் கலவியில் எய்த்திடாப்
பரிவொடு தத்தைமார்க்கு – இதமாடும்

பகடி துடுக்கன் வாய்க் கறையன் எனத் தராப்
படியில் மனித்தர் – தூற்றிடலாமோ

குல கிரி பொற்றலாய்க் குரை கடல் வற்றலாய்க்
கொடிய அரக்கரார் ஆர்ப்பு – எழ வேதக்

குயவனை நெற்றி ஏற்று அவன் எதிர் குட்டினால்
குடுமியை நெட்டை – போக்கிய வீரா

கலை தலை கெட்ட பாயச் சமணரை நட்ட கூர்க்
கழு நிரை முட்ட – ஏற்றிய தாளக்

கவிதையும் வெற்றி வேல் கரமுடன் வற்றிடாக்
கருணையும் ஒப்பிலாப் – பெருமாளே

English

alamala mippulAR pulaiyudal kattanER
kaRumuka niththarpOt – RiyanAthA

aRivili yittuNAp poRiyili siththamAyth
thaNitharu muththiveet – taNukAthE

palapala puththiyAyk kalaviyi leyththidAp
parivodu thaththaimArk – kithamAdum

pakadithu dukkanvAyk kaRaiyane naththarAp
padiyilma niththarthUt – RidalAmO

kulakiri potRalAyk kuraikadal vatRalAyk
kodiya arakkarArp – pezhavEthak

kuyavanai netRiyEt Ravanethir kuttinAR
kudumiyai nettaipOk – kiyaveerA

kalaithalai kettapAyc camaNarai nattakUrk
kazhunirai muttaEt – RiyathALak

kavithaiyum vetRivER karamudan vatRidAk
karuNaiyu moppilAp – perumALE.

English Easy Version

alam alam ip pulAl pulai udal kattanERku
aRumuka niththar pOtRiya – nAthA

aRivili ittu uNAp poRiyili siththam mAyththu
aNi tharu muththi veettu – aNukAthE

palapala puththiyAyak kalaviyil eyththidAp
parivodu thaththaimArkku – ithamAdum

pakadi thudukkan vAyk kaRaiyan enath tharAp
padiyil maniththar – thUtRidalAmO

kula kiri potRalAyk kurai kadal vatRalAyk
kodiya arakkarAr Arppu – ezha vEthak

kuyavanai netRi EtRu avan ethir kuttinAl
kudumiyai nettai – pOkkiya veerA

kalai thalai ketta pAyac camaNarai natta kUrk
kazhu nirai mutta EtRiya – thALak

kavithaiyum vetRi vEl karamudan vatRidAk
karuNaiyum oppilAp – perumALE,