திருப்புகழ் 1211 ஆசார வீனன் (பொதுப்பாடல்கள்)

Thiruppugal 1211 Acharaveenan

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தானான தான தனதன தானான தான தனதன
தானான தான தனதன – தனதான

ஆசார வீன னறிவிலி கோபாப ராதி யவகுண
னாகாத நீச னநுசிதன் – விபரீதன்

ஆசாவி சார வெகுவித மோகாச ரீத பரவச
னாகாச நீர்ம ணனல்வளி – யுருமாறி

மாசான நாலெண் வகைதனை நீநானெ னாத அறிவுளம்
வாயாத பாவி யிவனென – நினையாமல்

மாதாபி தாவி னருணல மாறாம காரி லெனையினி
மாஞான போத மருள்செய – நினைவாயே

வீசால வேலை சுவறிட மாசூரர் மார்பு தொளைபட
வேதாள ராசி பசிகெட – அறைகூறி

மேகார வார மெனஅதிர் போர்யாது தான ரெமபுர
மீதேற வேல்கொ டமர்செயு – மிளையோனே

கூசாது வேட னுமிழ்தரு நீராடி யூனு ணெனுமுரை
கூறாம னீய அவனுகர் – தருசேடங்

கோதாமெ னாம லமுதுசெய் வேதாக மாதி முதல்தரு
கோலோக நாத குறமகள் – பெருமாளே.

பதம் பிரித்தது

தானான தான தனதன தானான தான தனதன
தானான தான தனதன – தனதான

ஆசார வீனன் அறிவிலி கோப அபராதி யவகுணன்
ஆகாத நீசன் அநுசிதன் – விபரீதன்

ஆசாவிசார வெகுவித மோக ஆசரீத பரவசன்
ஆகாச நீர்மண் அனல்வளி – யுருமாறி

மாசான நாலெண் வகைதனை நீநானெனாத அறிவுளம்
வாயாத பாவி இவனென – நினையாமல்

மாதாபிதாவின் அருள் நல மாறா மகாரிலெனையினி
மாஞான போதம் அருள்செய – நினைவாயே

வீசால வேலை சுவறிட மாசூரர் மார்பு தொளைபட
வேதாள ராசி பசிகெட – அறைகூறி

மேக ஆரவார மெனஅதிர் போர் யாது தானர் எமபுர
மீதேற வேல்கொடு அமர்செயும் – இளையோனே

கூசாது வேடன் உமிழ்தரு நீராடி ஊனு ணெனுமுரை
கூறா மன் ஈய அவனுகர் – தருசேடம்

கோதாம் எனாமல் அமுதுசெய் வேத ஆகமாதி முதல்தரு
கோ லோக நாத குறமகள் – பெருமாளே

English

AachAra veena naRivili kOpApa rAthi yavakuNa
nAkAtha neesa nanusithan – vipareethan

AachAvi chAra vekuvitha mOkAsa reetha paravasa
nAkAsa neerma NanalvaLi – yurumARi

mAsAna nAleN vakaithanai neenAne nAtha aRivuLam
vAyAtha pAvi yivanena – ninaiyAmal

mAthApi thAvi naruNala mARAma kAri lenaiyini
mAnjAna pOtha maruLseya – ninaivAyE

veesAla vElai suvaRida mAchUrar mArpu thoLaipada
vEthALa rAsi pasikeda – aRaikURi

mEkAra vAra mena athir pOryAthu thAna remapura
meethERa vElko damarseyu – miLaiyOnE

kUsAthu vEda numizhtharu neerAdi yUnu Nenumurai
kURAma neeya avanukar – tharusEdang

kOthAme nAma lamuthusey vEthAka mAthi muthaltharu
kOlOka nAtha kuRamakaL – perumALE.

English Easy Version

AchAra veenan aRivili kOpAparAthi yavakuNan
AakAtha neesa nanusithan – vipareethan

AachAvi cAra vekuvitha mOka Aasareetha paravasan
AakAsa neerma NanalvaLi – yurumARi

mAsAna nAleN vakaithanai neenAne nAtha aRivuLam
vAyAtha pAvi yivanena – ninaiyAmal

mAthApi thAvi naruNala mARAma kAril enaiyini
mAnjAna pOtha maruLseya – ninaivAyE

veesAla vElai suvaRida mAchUrar mArpu thoLaipada
vEthALa rAsi pasikeda – aRaikURi

mEkAra vAra mena athir pOr yAthu thAna remapura
meethERa vElko damarseyu – miLaiyOnE

kUsAthu vEda numizhtharu neerAdi yUnu Nenumurai
kURAma neeya avanukar – tharusEdang

kOthAme nAmal amuthusey vEthAka mAthi muthaltharu
kO lOka nAtha kuRamakaL – perumALE.,