திருப்புகழ் 1212 ஆசைகூர் பத்தன் (பொதுப்பாடல்கள்)

Thiruppugal 1212 Asaikurbaththan

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தானனா தத்த தானனா தத்த
தானனா தத்த – தனதான

ஆசைகூர் பத்த னேன்மனோ பத்ம
மானபூ வைத்து – நடுவேயன்

பானநூ லிட்டு நாவிலே சித்ர
மாகவே கட்டி – யொருஞான

வாசம்வீ சிப்ர காசியா நிற்ப
மாசிலோர் புத்தி – யளிபாட

மாத்ருகா புஷ்ப மாலைகோ லப்ர
வாளபா தத்தி – லணிவேனோ

மூசுகா னத்து மீதுவாழ் முத்த
மூரல்வே டிச்சி – தனபார

மூழ்குநீ பப்ர தாபமார் பத்த
மூரிவே ழத்தின் – மயில்வாழ்வே

வீசுமீ னப்ப யோதிவாய் விட்டு
வேகவே தித்து – வருமாசூர்

வீழமோ திப்ப ராரைநா கத்து
வீரவேல் தொட்ட – பெருமாளே.

பதம் பிரித்தது

தானனா தத்த தானனா தத்த
தானனா தத்த – தனதான

ஆசைகூர் பத்தனேன் மனோ பத்மமான
பூ வைத்து நடுவேயன்பான

நூலிட்டு நாவிலே சித்ரமாகவே
கட்டி – ஒருஞான

வாசம்வீசி ப்ரகாசியா நிற்ப
மாசிலோர் புத்தி – யளிபாட

மாத்ருகா புஷ்ப மாலை கோல ப்ரவாள
பாதத்தில் – அணிவேனோ

மூசுகானத்து மீதுவாழ் முத்த
மூரல்வே டிச்சி – தனபார

மூழ்கு நீபப்ரதாப மார்பத்த
மூரிவே ழத்தின் – மயில்வாழ்வே

வீசுமீன் அப் பயோதிவாய் விட்டு
வேக வேதித்து – வருமாசூர்

வீழ மோதிப் பராரை நாகத்து
வீரவேல் தொட்ட – பெருமாளே

English

AsaikUr baththanEn manO padhma
mAna pU vaiththu – naduvE an

pAna nUlittu nAvilE chithra
mAgavE katti – orunyAna

vAsam veesi prakAsiyA niRpa
mAsilOr budhdhi – aLipAda

mAthrukA pushpa mAlai kOla pra
vALa pAdhaththil – aNivEnO

mUsu kAnaththu meedhu vAzh muththa
mUral vEdichchi – thanabAra

mUzhgu neepap prathApa mArbaththa
mUri vEzhaththin – mayilvAzhvE

veesu meenap payOdhi vAy vittu
vEga vEdhiththu – varumAsUr

veezha mOdhip parArai nAgaththu
veera vEl thotta – perumALE.

English Easy Version

AsaikUr baththanEn manO padhma mAna
pU vaiththu naduvE – anpAna

nUlittu nAvilE chithramAgavE
Katti – orunyAna

vAsam veesi prakAsiyA niRpa
mAsilOr budhdhi – aLipAda

mAthrukA pushpa mAlai kOla
pravALa pAdhaththil – aNivEnO

mUsu kAnaththu meedhu vAzh muththa
mUral vEdichchi – thanabAra

mUzhgu neepap prathApa mArbaththa
mUri vEzhaththin – mayilvAzhvE

veesu meenap payOdhi vAy vittu
vEga vEdhiththu – varumAsUr

Veezha mOdhip parArai nAgaththu
veera vEl thotta perumALE