திருப்புகழ் 1213 ஆசைக் கொளுத்தி (பொதுப்பாடல்கள்)

Thiruppugal 1213 Asaikkoluththi

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தானத் தனத்ததன தானத் தனத்ததன
தானத் தனத்ததன – தனதான

ஆசைக் கொளுத்திவெகு வாகப் பசப்பிவரு
மாடைப் பணத்தையெடெ – னுறவாடி

ஆரக் கழுத்துமுலை மார்பைக் குலுக்கிவிழி
யாடக் குலத்துமயில் – கிளிபோலப்

பேசிச் சிரித்துமயிர் கோதிக் குலைத்துமுடி
பேதைப் படுத்திமய – லிடுமாதர்

பீறற் சலத்துவழி நாறப் படுத்தியெனை
பீடைப் படுத்துமய – லொழியாதோ

தேசத் தடைத்துபிர காசித் தொலித்துவரி
சேடற் பிடுத்துதறு – மயில்வீரா

தேடித் துதித்தஅடி யார்சித் தமுற்றருளு
சீர்பொற் பதத்தஅரி – மருகோனே

நேசப் படுத்தியிமை யோரைக் கெடுத்தமுழு
நீசற் கனத்தமுற – விடும்வேலா

நேசக் குறத்திமய லோடுற் பவித்தபொனி
நீர்பொற் புவிக்குள்மகிழ் – பெருமாளே.

பதம் பிரித்தது

தானத் தனத்ததன தானத் தனத்ததன
தானத் தனத்ததன – தனதான

ஆசைக் கொளுத்தி வெகுவாகப் பசப்பி வரும்
மாடைப் பணத்தை எடு என – உறவாடி

ஆரக் கழுத்து முலை மார்பைக் குலுக்கி விழி
ஆடக் குலத்து மயில் – கிளி போலப்

பேசிச் சிரித்து மயிர் கோதிக் குலைத்து முடி
பேதைப் படுத்தி மயல் – இடு மாதர்

பீறல் சலத்து வழி நாறப் படுத்தி எனை
பீடைப் படுத்து மயல் – ஒழியாதோ

தேசம் தடைத்து பிரகாசித்து ஒலித்து வரி
சேடன் பிடித்து உதறு – மயில் வீரா

தேடித் துதித்த அடியார் சித்தம் உற்று அருளு(ம்)
சீர் பொன் பதத்த அரி – மருகோனே

நேசப் படுத்தி இமையோரைக் கெடுத்த முழு
நீசற்கு அனத்தம் உற – விடும்வேலா

நேசக் குறத்தி மயலோடு உற்பவித்த பொ(ன்)னி
நீர் பொன் புவிக்குள் மகிழ் – பெருமாளே

English

Asaik koLuththiveku vAkap pasappivaru
mAdaip paNaththaiyede – nuRavAdi

Arak kazhuththumulai mArpaik kulukkivizhi
yAdak kulaththumayil – kiLipOlap

pEsic chiriththumayir kOthik kulaiththumudi
pEthaip paduththimaya – lidumAthar

peeRaR chalaththuvazhi nARap paduththiyenai
peedaip paduththumaya – lozhiyAthO

thEsath thadaiththupira kAsith tholiththuvari
sEdaR piduththuthaRu – mayilveerA

thEdith thuthiththAdi yArchith thamutRaruLu
seerpoR pathaththAri – marukOnE

nEsap paduththiyimai yOraik keduththamuzhu
neesaR kanaththamuRa – vidumvElA

nEsak kuRaththimaya lOduR paviththaponi
neerpoR puvikkuLmakizh – perumALE.

English Easy Version

Asaik koLuththi vekuvAkap pasappi varum
mAdaip paNaththai edu ena – uRavAdi

Arak kazhuththu mulai mArpaik kulukki vizhi
Adak kulaththu mayil – kiLi pOlap

pEsic chiriththu mayir kOthik kulaiththu mudi
pEthaip paduththi mayal – idu mAthar

peeRal salaththu vazhi nARap paduththi enai
peedaip paduththu mayal – ozhiyAthO

thEsam thadaiththu pirakAsiththu oliththu vari
sEdan pidiththu uthaRu – mayil veerA

thEdith thuthiththa adiyAr chiththam utRu aruLu(m)
seer pon pathaththa ari – marukOnE

nEsap paduththi imaiyOraik keduththa muzhu
neesaRku anaththam uRa – vidumvElA

nEsak kuRaththi mayalOdu uRpaviththa po(n)ni
neer pon puvikkuL makizh – perumALE