Thiruppugal 1215 Alametravizhiyinar
மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
– மயூரகிரிநாதனுக்கு அரோகரா –
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –
பாடல்
தான தாத்த தனதன தான தாத்த தனதன
தான தாத்த தனதன – தனதான
ஆல மேற்ற விழியினர் சால நீட்டி யழுதழு
தாக மாய்க்க முறைமுறை – பறைமோதி
ஆடல் பார்க்க நிலையெழு பாடை கூட்டி விரையம
யான மேற்றி யுறவின – ரயலாகக்
கால மாச்சு வருகென ஓலை காட்டி யமபடர்
காவ லாக்கி யுயிரது – கொடுபோமுன்
காம வாழ்க்கை பொடிபட ஞானம் வாய்த்த கழலிணை
காத லாற்க ருதுமுணர் – தருவாயே
வேல கீர்த்தி விதரண சீலர் வாழ்த்து சரவண
வியாழ கோத்ர மருவிய – முருகோனே
வேடர் நாட்டில் விளைபுன ஏனல் காத்த சிறுமியை
வேட மாற்றி வழிபடு – மிளையோனே
ஞால மேத்தி வழிபடு மாறு பேர்க்கு மகவென
நாணல் பூத்த படுகையில் – வருவோனே
நாத போற்றி யெனமுது தாதை கேட்க அநுபவ
ஞான வார்த்தை யருளிய – பெருமாளே.
பதம் பிரித்தது
தான தாத்த தனதன தான தாத்த தனதன
தான தாத்த தனதன – தனதான
ஆல மேற்ற விழியினர் சால நீட்டி அழுதழுது
ஆகம் மாய்க்க முறைமுறை – பறைமோதி
ஆடல் பார்க்க நிலை எழு பாடை கூட்டி விரைய
மயானம் ஏற்றி உறவினர் – அயலாக
காலமாச்சு வருக என ஓலை காட்டி யமபடர்
காவலாக்கி உயிரது – கொடு போ முன்
காம வாழ்க்கை பொடிபட ஞானம் வாய்த்த கழல் இணை
காதலால் கருதும் உணர் – தருவாயே
வேல கீர்த்தி விதரண சீலர் வாழ்த்து சரவண
வியாழ கோத்ரம் மருவிய – முருகோனே
வேடர் நாட்டில் விளை புன ஏனல் காத்த சிறுமியை
வேட மாற்றி வழி படும் – இளையோனே
ஞாலம் ஏத்தி வழிபடும் ஆறு பேர்க்கும் மகவு என
நாணல் பூத்த படுகையில் – வருவோனே
நாத போற்றி என முது தாதை கேட்க அநுபவ
ஞான வார்த்தை அருளிய – பெருமாளே
English
Aala mEtRa vizhiyinar sAla neetti yazhuthazhu
thAka mAykka muRaimuRai – paRaimOthi
Aadal pArkka nilaiyezhu pAdai kUtti viraiyama
yAna mEtRi yuRavina – rayalAkak
kAla mAcchu varukena Olai kAtti yamapadar
kAva lAkki yuyirathu – kodupOmun
kAma vAzhkkai podipada njAnam vAyththa kazhaliNai
kAtha lARka ruthumuNar – tharuvAyE
vEla keerththi vitharaNa seelar vAzhththu saravaNa
viyAzha kOthra maruviya – murukOnE
vEdar nAttil viLaipuna Enal kAththa siRumiyai
vEda mAtRi vazhipadu – miLaiyOnE
njAla mEththi vazhipadu mARu pErkku makavena
nANal pUththa padukaiyil – varuvOnE
nAtha pOtRi yenamuthu thAthai kEtka anupava
njAna vArththai yaruLiya – perumALE.
English Easy Version
Ala mEtRa vizhiyinar sAla neetti azhuthazhuthu
Akam mAykka muRaimuRai – paRaimOthi
Adal pArkka nilai ezhu pAdai kUtti viraiya
mayAnam EtRi uRavinar – ayalAka
kAlamAcchu varuka ena Olai kAtti yamapadar
kAvalAkki uyirathu – kodu pO mun
kAma vAzhkkai podipada njAnam vAyththa kazhal iNai
kAthalAl karuthum uNar – tharuvAyE
vEla keerththi vitharaNa seelar vAzhththu saravaNa
viyAzha kOthram maruviya – murukOnE
vEdar nAttil viLai puna Enal kAththa siRumiyai
vEda mAtRi vazhi padum – iLaiyOnE
njAlam Eththi vazhipadum ARu pErkkum makavu ena
nANal pUththa padukaiyil – varuvOnE
nAtha pOtRi ena muthu thAthai kEtka anupava
njAna vArththai aruLiya – perumALE