Thiruppugal 1216 Alumayilpol
மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
– மயூரகிரிநாதனுக்கு அரோகரா –
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –
பாடல்
தானதன தானத்த தானதன தானத்த
தானதன தானத்த – தனதான
ஆலுமயில் போலுற்ற தோகையர்க ளேமெத்த
ஆரவட மேலிட்ட – முலைமீதே
ஆனதுகி லேயிட்டு வீதிதனி லேநிற்க
ஆமவரை யேசற்று – முரையாதே
வேலுமழ கார்கொற்ற நீலமயில் மேலுற்று
வீறுமுன தார்பத்ம – முகமாறு
மேவியிரு பாகத்தும் வாழுமனை மார்தக்க
மேதகவு நானித்த – முரையேனோ
நாலுமுக வேதற்கு மாலிலையில் மாலுக்கு
நாடவரி யார்பெற்ற – வொருபாலா
நாணமுடை யாள்வெற்றி வேடர்குல மீதொக்க
நாடுகுயில் பார்மிக்க – எழில்மாது
வேலைவிழி வேடச்சி யார்கணவ னேமத்த
வேழமுக வோனுக்கு – மிளையோனே
வீரமுட னேயுற்ற சூரனணி மார்பத்து
வேலைமிக வேவிட்ட – பெருமாளே.
பதம் பிரித்தது
தானதன தானத்த தானதன தானத்த
தானதன தானத்த – தனதான
ஆலும் மயில் போல் உற்ற தோகையர்களே மெத்த
ஆர வடம் மேலிட்ட – முலை மீதே
ஆன துகிலே இட்டு வீதி தனிலே நிற்க
ஆம் அவரையே சற்றும் – உரையாதே
வேலும் அழகு ஆர் கொற்ற நீல மயில் மேல் உற்று
வீறும் உனது ஆர் பத்மம் ஆர் – முகம் ஆறு
மேவி இரு பாகத்தும் வாழும் அ(ன்)னைமார் தக்க
மேதகவும் நான் நித்தம் – உரையேனோ
நாலு முக வேதற்கும் ஆலிலையில் மாலுக்கும்
நாட அரியார் பெற்ற – ஒரு பாலா
நாணம் உடையாள் வெற்றி வேடர் குல மீது ஒக்க
நாடு குயில் பார் மிக்க – எழில் மாது
வேலை விழி வேடச்சியார் கணவனே மத்த
வேழ முகவோனுக்கும் – இளையோனே
வீரமுடனே உற்ற சூரன் அணி மார்பத்து
வேலை மிகவே விட்ட – பெருமாளே.
English
Aalumayil pOlutRa thOkaiyarka LEmeththa
Aravada mElitta – mulaimeethE
Aanathuki lEyittu veethithani lEniRka
Amavarai yEsatRu – muraiyAthE
vElumazha kArkotRa neelamayil mElutRu
veeRumuna thArpathma – mukamARu
mEviyiru pAkaththum vAzhumanai mArthakka
mEthakavu nAniththa – muraiyEnO
nAlumuka vEthaRku mAlilaiyil mAlukku
nAdavari yArpetRa – vorupAlA
nANamudai yALvetRi vEdarkula meethokka
nAdukuyil pArmikka – ezhilmAthu
vElaivizhi vEdacchi yArkaNava nEmaththa
vEzhamuka vOnukku – miLaiyOnE
veeramuda nEyutRa cUranaNi mArpaththu
vElaimika vEvitta – perumALE.
English Easy Version
Aalum mayil pOl utRa thOkaiyarkaLE meththa
Ara vadam mElitta – mulai meethE
Aana thukilE ittu veethi thanilE niRka
Am avaraiyE satRum – uraiyAthE
vElum azhaku Ar kotRa neela mayil mEl utRu
veeRum unathu Ar pathmam Ar – mukam ARu
mEvi iru pAkaththum vAzhum a(n)naimAr thakka
mEthakavum nAn niththam – uraiyEnO
nAlu muka vEthaRkum Alilaiyil mAlukkum
nAda ariyAr petRa – oru pAlA
nANam udaiyAL vetRi vEdar kula meethu okka
nAdu kuyil pAr mikka – ezhil mAthu
vElai vizhi vEdacchiyAr kaNavanE maththa
vEzha mukavOnukkum – iLaiyOnE
veeramudanE utRa cUran aNi mArpaththu
vElai mikavE vitta – perumALE.