திருப்புகழ் 1218 இரு குழை மீது (பொதுப்பாடல்கள்)

Thiruppugal 1218 Irukuzhaimeedhu

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனதன தான தானன, தனதன தான தானன
தனதன தான தானன – தனதான

இருகுழை மீது தாவடி யிடுவன வோதி நீழலி
னிடமது லாவி மீள்வன – நுதல்தாவி

இழிவன காம வேதமு மொழிவன தாரை வேலென
எறிவன காள கூடமு – மமுதாகக்

கருகிய நீல லோசன அபிநய மாத ரார்தரு
கலவியில் மூழ்கி வாடிய – தமியேனுங்

கதிபெற ஈட றாதன பதிபசு பாச மானவை
கசடற வேறு வேறுசெய் – தருள்வாயே

ஒருபது பார மோலியு மிருபது வாகு மேருவு
முததியில் வீழ வானர – முடனேசென்

றொருகணை யேவு ராகவன் மருகவி பூதி பூஷணர்
உணருப தேச தேசிக – வரையேனற்

பரவிய கான வேடுவர் தருமபி ராம நாயகி
பரிபுர பாத சேகர – சுரராஜன்

பதிகுடி யேற வேல்தொடு முருகம யூர வாகன
பரவச ஞான யோகிகள் – பெருமாளே.

பதம் பிரித்தது

தனதன தான தானன, தனதன தான தானன
தனதன தான தானன – தனதான

இரு குழை மீது தாவடி இடுவன ஓதி நீழலின்
இடமது உலாவி மீள்வன – நுதல் தாவி

இழிவன காம வேதமும் மொழிவன தாரை
வேல் என எறிவன காள கூடமும் – அமுதாகக்

கருகிய நீல லோசன அபிநய மாதரார் தரு
கலவியில் மூழ்கி வாடிய – தமியேனும்

கதி பெற ஈடு அறாதன பதி பசு பாசம் ஆனவை
கசடு அற வேறு வேறு செய்து – அருள்வாயே

ஒரு பது பாரம் மோலியும் இருபது வாகு மேருவும்
உததியில் வீழ வானரம் – உடனே சென்று

ஒரு கணை ஏவு ராகவன் மருக விபூதி பூஷணர்
உணர உபதேச தேசிக – வரை ஏனல்

பரவிய கான வேடுவர் தரும் அபிராம நாயகி
பரிபுர பாத சேகர – சுர ராஜன்

பதி குடி ஏற வேல் தொடு முருக மயூர வாகன
பரவச ஞான யோகிகள் – பெருமாளே.

English

irukuzhai meethu thAvadi yiduvana vOthi neezhali
nidamathu lAvi meeLvana – nuthalthAvi

izhivana kAma vEthamu mozhivana thArai vElena
eRivana kALa kUdamu – mamuthAkak

karukiya neela lOsana apinaya mAtha rArtharu
kalaviyil mUzhki vAdiya – thamiyEnum

kathipeRa eeda RAthana pathipasu pAsa mAnavai
kasadaRa vERu vERusey – tharuLvAyE

orupathu pAra mOliyu mirupathu vAku mEruvu
muthathiyil veezha vAnara – mudanEsen

RorukaNai yEvu rAkavan marukavi pUthi pUshaNar
uNarupa thEsa thEsika – varaiyEnaR

paraviya kAna vEduvar tharumapi rAma nAyaki
paripura pAtha sEkara – surarAjan

pathikudi yERa vElthodu murukama yUra vAkana
paravasa njAna yOkikaL – perumALE.

English Easy Version

iru kuzhai meethu thAvadi iduvana Othi neezhalin
idamathu ulAvi meeLvana – nuthal thAvi

izhivana kAma vEthamum mozhivana thArai vEl ena
eRivana kALa kUdamum – amuthAkak

karukiya neela lOsana apinaya mAtharAr tharu
kalaviyil mUzhki vAdiya – thamiyEnum

kathi peRa eedu aRAthana pathi pasu pAsam Anavai
kasadu aRa vERu vERu seythu – aruLvAyE

oru pathu pAram mOliyum irupathu vAku mEruvum
uthathiyil veezha vAnaram – udanE senRu

oru kaNai Evu rAkavan maruka vipUthi pUshaNar
uNara upathEsa thEsika – varai Enal

paraviya kAna vEduvar tharum apirAma nAyaki
paripura pAtha sEkara – sura rAjan

pathi kudi ERa vEl thodu muruka mayUra vAkana
paravasa njAna yOkikaL – perumALE.