Thiruppugal 1220 Inamaraividhangkal+
மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
– மயூரகிரிநாதனுக்கு அரோகரா –
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –
பாடல்
தனதனன தந்தனம் தனதனன தந்தனம்
தனதனன தந்தனம் – தந்ததான
இனமறைவி தங்கள்கொஞ் சியசிறுச தங்கைகிண்
கிணியிலகு தண்டையம் – புண்டரீகம்
எனதுமன பங்கயங் குவளைகுர வம்புனைந்
திரவுபகல் சந்ததஞ் – சிந்தியாதோ
உனதருளை யன்றியிங் கொருதுணையு மின்றிநின்
றுளையுமொரு வஞ்சகன் – பஞ்சபூத
உடலதுசு மந்தலைந் துலகுதொறும் வந்துவந்
துழலுமது துன்புகண் – டன்புறாதோ
கனநிவத தந்தசங் க்ரமகவள துங்கவெங்
கடவிகட குஞ்சரந் – தங்கும்யானை
கடகசயி லம்பெறும் படியவுணர் துஞ்சமுன்
கனககிரி சம்பெழுந் – தம்புராசி
அனலெழமு னிந்தசங் க்ரமமதலை கந்தனென்
றரனுமுமை யும்புகழ்ந் – தன்புகூர
அகிலபுவ னங்களுஞ் சுரரொடுதி ரண்டுநின்
றரிபிரமர் கும்பிடுந் – தம்பிரானே.
பதம் பிரித்தது
தனதனன தந்தனம் தனதனன தந்தனம்
தனதனன தந்தனம் – தந்ததான
இன மறை விதங்கள் கொஞ்சிய சிறு சதங்கை கிண்கிணி
இலகு தண்டை அம் – புண்டரீகம்
எனது மன பங்கயம் குவளை குரவம் புனைந்து
இரவு பகல் சந்ததம் – சிந்தியாதோ
உனது அருளை அன்றி இங்கு ஒரு துணையும் இன்றி நின்று
உளையும் ஒரு வஞ்சகன் – பஞ்ச பூத
உடல் அது சுமந்து அலைந்து உலகு தொறும் வந்து வந்து
உழலும் அது துன்பு கண்டு – அன்பு உறாதோ
கனம் நிவத தந்த சங்க்ரம கவள துங்கம் வெம்
கடம் விகட குஞ்சரம் – தங்கும் யானை
கடகம் சயிலம் பெறும்படி அவுணர் துஞ்ச முன்
கனக கிரி சம்பெழுந்து – அம்பு ராசி
அனல் எழ முனிந்த சங்க்ரம மதலை கந்தன் என்று
அரனும் உமையும் புகழ்ந்து – அன்பு கூர
அகில புவனங்களும் சுரரொடு திரண்டு நின்று
அரி பிரமர் கும்பிடும் – தம்பிரானே.
English
inamaRai vidhangaL konjiya siRu sadhangai kiN
kiNi ilagu thaNadaiyam – puNdareekam
enadhu mana pangaiyan kuvaLai kuravam punaindhu
iravu pagal santhatham – chinthiyAdhO
unadharuLai andri ingoru thuNaiyum indri nindru
uLaiyumoru vanjakan – panchabUtha
udaladhu sumandh alaindh ulagu thoRum vandhu vandhu
uzhalumadhu thunbukaNd – anbuRAdhO
gana nivadha thandha sangrama kavaLa thunga ven
kada vikata kunjaran – thangumyAnai
kadaga sayilam peRumpadi avuNar thunja mun
kanaka giri sambezhundhu – amburAsi
analezha munindha sangrama madhalai kandhanen
draranum umaiyum pugazhndh – anbukUra
akila buvanangaLum surarodu thiraNdu nindru
ari biramar kumbidum – thambirAnE.
English Easy Version
inamaRai vidhangaL konjiya siRu sadhangai kiNkiNi
ilagu thaNadaiyam – puNdareekam
enadhu mana pangaiyan kuvaLai kuravam punaindhu
iravu pagal santhatham – chinthiyAdhO
unadharuLai andri ingoru thuNaiyum indri nindru
uLaiyumoru vanjakan – panchabUtha
udaladhu sumandhu alaindh ulagu thoRum vandhu vandhu
uzhalumadhu thunbukaNd – anbuRAdhO
gana nivadha thandha sangrama kavaLa thunga ven
kada vikata kunjaran – thangumyAnai
kadaga sayilam peRumpadi avuNar thunja mun
kanaka giri sambezhundhu – amburAsi
Analezha munindha sangrama madhalai kandhanendru
aranum umaiyum pugazhndh – anbukUra
akila buvanangaLum surarodu thiraNdu nindru
ari biramar kumbidum tham – thambirAnE