திருப்புகழ் 1225 கச்சுப் பூட்டு (பொதுப்பாடல்கள்)

Thiruppugal 1225 Kachchupputtu

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தத்தத் தாத்த தத்தத் தாத்த
தத்தத் தாத்த – தனதான

கச்சுப் பூட்டு கைச்சக் கோட்ட
கத்திற் கோட்டு – கிரியாலங்

கக்கித் தேக்கு செக்கர்ப் போர்க்க
யற்கட் கூற்றில் – மயலாகி

அச்சக் கூச்ச மற்றுக் கேட்ட
வர்க்குத் தூர்த்த – னெனநாளும்

அத்தப் பேற்றி லிச்சிப் பார்க்க
றப்பித் தாய்த்தி – ரியலாமோ

பச்சைக் கூத்தர் மெச்சிச் சேத்த
பத்மக் கூட்டி – லுறைவோரி

பத்திற் சேர்ப்பல் சக்கிற் கூட்டர்
பத்தக் கூட்ட – ரியல்வானம்

மெச்சிப் போற்ற வெற்புத் தோற்று
வெட்கக் கோத்த – கடல்மீதே

மெத்தக் காய்த்த கொக்குக் கோட்டை
வெட்டிச் சாய்த்த – பெருமாளே.

பதம் பிரித்தது

தத்தத் தாத்த தத்தத் தாத்த
தத்தத் தாத்த – தனதான

கச்சுப் பூட்டுகைச் சக்கு ஓடு
அகத்தில் கோட்டு – கிரி ஆலம்

கக்கித் தேக்கு செக்கர்ப் போர்க்
கயல் கண் கூற்றில் – மயலாகி

அச்சக் கூச்சம் அற்றுக் கேட்டவர்க்குத்
தூர்த்தன் – என நாளும்

அத்தப் பேற்றில் இச்சிப்பார்க்கு
அறப் பித்தாய்த் – திரியலாமோ

பச்சைக் கூத்தர் மெச்சிச் சேத்த
பத்மக் கூட்டில் – உறைவோர்

இபத்தில் சேர்ப் பல் சக்கில் கூட்டர்
பத்தக் கூட்டர் – இயல் வானம்

மெச்சிப் போற்ற வெற்புத் தோற்று
வெட்க கோத்த – கடல் மீதே

மெத்தக் காய்த்த கொக்குக் கோட்டை
வெட்டிச் சாய்த்த – பெருமாளே.

English

kacchup pUttu kaicchak kOtta
kaththiR kOttu – kiriyAlang

kakkith thEkku sekkarp pOrkka
yaRkat kUtRil – mayalAki

acchak kUccha matRuk kEtta
varkkuth thUrththa – nenanALum

aththap pEtRi licchip pArkka
Rappith thAyththi – riyalAmO

pacchaik kUththar mecchic chEththa
pathmak kUtti – luRaivOri

paththiR sErppal sakkiR kUttar
paththak kUtta – riyalvAnam

mecchip pOtRa veRputh thOtRu
vetkak kOththa – kadalmeethE

meththak kAyththa kokkuk kOttai
vettic chAyththa – perumALE.

English Easy Version

kacchup pUttukaic chakku Odu
akaththil kOttu – kiri Alam

kakkith thEkku sekkarp pOrk
kayal kaN kUtRil – mayalAki

acchak kUccham atRuk kEttavarkkuth
thUrththan – ena nALum

aththap pEtRil icchippArkku
aRap piththAyth – thiriyalAmO

pacchaik kUththar mecchic chEththa
pathmak kUttil – uRaivOr

ipaththil sErp pal sakkil kUttar
paththak kUttar – iyal vAnam

mecchip pOtRa veRputh thOtRu
Vetka kOththa – kadal meethE

meththak kAyththa kokkuk kOttai
vettic chAyththa – perumALE.