திருப்புகழ் 1226 கடலினும் பெரிய (பொதுப்பாடல்கள்)

Thiruppugal 1226 Kadalinumperiya

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனதனந் தனதனன தனதனந் தனதனன
தனதனந் தனதனன – தனதான

கடலினும் பெரியவிழி மலையினும் பெரியமுலை
கவரினுந் துவரதர – மிருதோள்பைங்

கழையினுங் குழையுமென மொழிபழங் கிளவிபல
களவுகொண் டொருவர்மிசை – கவிபாடி

அடலசஞ் சலனதுல னநுபமன் குணதரன்மெய்
அருள்பரங் குரனபய – னெனஆசித்

தலமரும் பிறவியினி யலமலம் பிறவியற
அருணபங் கயசரண – மருள்வாயே

வடநெடுங் குலரசத கிரியினின் றிருகலுழி
மகிதலம் புகவழியு – மதுபோல

மதசலஞ் சலசலென முதுசலஞ் சலதிநதி
வழிவிடும் படிபெருகு – முதுபாகை

உடையசங் க்ரமகவள தவளசிந் துரதிலக
னுலகுமிந் திரனுநிலை – பெறவேல்கொண்

டுததிவெந் தபயமிட மலையொடுங் கொலையவுண
ருடனுடன் றமர்பொருத – பெருமாளே.

பதம் பிரித்தது

தனதனந் தனதனன தனதனந் தனதனன
தனதனந் தனதனன – தனதான

கடலினும் பெரிய விழி மலையினும் பெரிய முலை
கவர் இனும் துவர் அதரம் – இரு தோள் பை

கழையினும் குழையும் என மொழி பழங் கிளவி பல
களவு கொண்டு ஒருவர் மிசை – கவி பாடி

அடல் அசஞ்சலன் அதுலன் அநுபமன் குணதரன் மெய்
அருள் பர அங்குரன் அபயன் – என ஆசித்து

அலமரும் பிறவி இனி அலம் அலம் பிறவி அற
அருண பங்கய சரணம் – அருள்வாயே

வட நெடும் குல ரசத கிரியினின்று இரு கலுழி
மகிதலம் புக வழியும் – அது போல

மத சலம் சல சல என முது சலம் சலதி நதி
வழி விடும் படி பெருகு – முது பாகை

உடைய சங்க்ரம கவள தவள சிந்துரம் திலகன்
உலகும் இந்திரனும் நிலை – பெற வேல் கொண்டு

உததி வெந்து அபயம் இட மலையொடும் கொலை
அவுணருடன் உடன் அன்று அமர் பொருத – பெருமாளே.

English

kadalinum periyavizhi malaiyinum periyamulai
kavarinun thuvarathara – miruthOLpaing

kazhaiyinung kuzhaiyumena mozhipazhang kiLavipala
kaLavukoN doruvarmisai – kavipAdi

adalasan chalanathula nanupaman kuNatharanmey
aruLparam kuranapaya – nenaAsith

thalamarum piRaviyini yalamalam piRaviyaRa
aruNapan gayasaraNa – maruLvAyE

vadanedum kularasatha kiriyinin Rirukaluzhi
makithalam pukavazhiyu – mathupOla

mathasalan chalasalena muthusalam chalathinathi
vazhividum padiperuku – muthupAkai

udaiyasan kramakavaLa thavaLasin thurathilaka
nulakumin thiranunilai – peRavElkoN

duthathiven thapayamida malaiyodung kolaiyavuNa
rudanudan Ramarporutha – perumALE.

English Easy Version

kadalinum periya vizhi malaiyinum periya mulai
kavar inum thuvar atharam – iru thOL pai

kazhaiyinum kuzhaiyum ena mozhi pazhang kiLavi pala
kaLavu koNdu oruvar misai – kavi pAdi

adal asanchalan athulan anupaman kuNatharan mey
aruL para anguran apayan – ena Asiththu

alamarum piRavi ini alam alam piRavi aRa
aruNa pangaya saraNam – aruLvAyE

vada nedum kula rasatha kiriyininRu iru kaluzhi
makithalam puka vazhiyum – athu pOla

matha salam sala sala ena muthu salam salathi nathi
vazhi vidum padi peruku – muthu pAkai

udaiya sangrama kavaLa thavaLa sinthuram thilakan
ulakum inthiranum nilai peRa – vEl koNdu

uthathi venthu apayam ida malaiyodum kolai
avuNarudan udan anRu amar porutha – perumALE