திருப்புகழ் 1227 கட்டக் கணப்பறை (பொதுப்பாடல்கள்)

Thiruppugal 1227 Kattakkanapparai

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தத்தத் தனத்ததன தத்தத் தனத்ததன
தத்தத் தனத்த – தனதான

கட்டக் கணப்பறைகள் கொட்டக் குலத்திளைஞர்
கட்டிப் புறத்தி – லணைமீதே

கச்சுக் கிழித்ததுணி சுற்றிக் கிடத்தியெரி
கத்திக் கொளுத்தி – யனைவோரும்

சுட்டுக் குளித்துமனை புக்கிட் டிருப்பரிது
சுத்தப் பொயொப்ப – துயிர்வாழ்வு

துக்கப் பிறப்பகல மிக்கச் சிவத்ததொரு
சொர்க்கப் பதத்தை – யருள்வாயே

எட்டுக் குலச்சயில முட்டத் தொளைத்தமரர்
எய்ப்புத் தணித்த – கதிர்வேலா

எத்திக் குறத்தியிரு முத்தத் தனக்கிரியை
யெற்பொற் புயத்தி – லணைவோனே

வட்டக் கடப்பமலர் மட்டுற்ற செச்சைமலர்
வைத்துப் பணைத்த – மணிமார்பா

வட்டத் திரைக்கடலில் மட்டித் தெதிர்த்தவரை
வெட்டித் துணித்த – பெருமாளே.

பதம் பிரித்தது

தத்தத் தனத்ததன தத்தத் தனத்ததன
தத்தத் தனத்த – தனதான

கட்டக் கணப் பறைகள் கொட்டக் குலத்து இளைஞர்
கட்டிப் புறத்தில் – அணை மீதே

கச்சுக் கிழித்த துணி சுற்றிக் கிடத்தி எரி
கத்திக் கொளுத்தி – அனைவோரும்

சுட்டுக் குளித்து மனை புக்கிட்டு இருப்பர் இது
சுத்தப் பொய் ஒப்பது – உயிர் வாழ்வு

துக்கப் பிறப்பு அகல மிக்கச் சிவத்தது ஒரு
சொர்க்கப் பதத்தை – அருள்வாயே

எட்டுக் குலசயிலம் முட்டத் தொளைத்து அமரர்
எய்ப்புத் தணித்த – கதிர் வேலா

எத்திக் குறத்தி இரு முத்தத் தனக் கிரியை
எல் பொன் புயத்தில் – அணைவோனே

வட்டக் கடப்ப மலர் மட்டு உற்ற செச்சை மலர்
வைத்துப் பணைத்த – மணி மார்பா

வட்டத் திரைக் கடலில் மட்டித்து எதிர்த்தவரை
வெட்டித் துணித்த – பெருமாளே

English

kattak kaNappaRaikaL kottak kulaththiLainjar
kattip puRaththi – laNaimeethE

kacchuk kizhiththathuNi sutRik kidaththiyeri
kaththik koLuththi – yanaivOrum

suttuk kuLiththumanai pukkit tirupparithu
suththap poyoppa – thuyirvAzhvu

thukkap piRappakala mikkac chivaththathoru
sorkkap pathaththai – yaruLvAyE

ettuk kulacchayila muttath thoLaiththamarar
eypputh thaNiththa – kathirvElA

eththik kuRaththiyiru muththath thanakkiriyai
yeRpoR puyaththi – laNaivOnE

vattak kadappamalar mattut Rasecchaimalar
vaiththup paNaiththa – maNimArpA

vattath thiraikkadalil mattith thethirththavarai
vettith thuNiththa – perumALE.

English Easy Version

kattak kaNap paRaikaL kottak kulaththu iLainjar
kattip puRaththil – aNai meethE

kacchuk kizhiththa thuNi sutRik kidaththi eri
kaththik koLuththi – anaivOrum

suttuk kuLiththu manai pukkittu iruppar ithu
suththap poy oppathu – uyir vAzhvu

thukkap piRappu akala mikkac chivaththathu oru
sorkkap pathaththai – aruLvAyE

ettuk kulasayilam muttath thoLaiththu amarar
eypputh thaNiththa – kathir vElA

eththik kuRaththi iru muththath thanak kiriyai
el pon puyaththil – aNaivOnE

vattak kadappa malar mattu utRa secchai malar
vaiththup paNaiththa – maNi mArpA

vattath thiraik kadalil mattiththu ethirththavarai
vettith thuNiththa – perumALE.