திருப்புகழ் 1228 கண்டு போல்மொழி (பொதுப்பாடல்கள்)

Thiruppugal 1228 Kandupolmozhi

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தந்த தானன தந்த தானன
தந்த தானன – தனதான

கண்டு போல்மொழி வண்டு சேர்குழல்
கண்கள் சேல்மதி – முகம்வேய்தோள்

கண்டு பாவனை கொண்டு தோள்களி
லொண்டு காதலி – லிருகோடு

மண்டி மார்பினில் விண்ட தாமென
வந்த கூர்முலை – மடவார்தம்

வஞ்ச மாலதில் நெஞ்சு போய்மடி
கின்ற மாயம – தொழியாதோ

கொண்ட லார்குழல் கெண்டை போல்விழி
கொண்டு கோகில – மொழிகூறுங்

கொங்கை யாள்குற மங்கை வாழ்தரு
குன்றில் மால்கொடு – செலும்வேலா

வெண்டி மாமன மண்டு சூர்கடல்
வெம்ப மேதினி – தனில்மீளா

வென்று யாவையு மன்றி வேளையும்
வென்று மேவிய – பெருமாளே.

பதம் பிரித்தது

தந்த தானன தந்த தானன
தந்த தானன – தனதான

கண்டு போல் மொழி வண்டு சேர் குழல்
கண்கள் சேல் மதி – முகம் வேய் தோள்

கண்டு பாவனை கொண்டு தோள்களில்
ஒண்டு காதலில் – இரு கோடு

மண்டி மார்பினில் விண்டதாம் என
வந்த கூர் முலை – மடவார் தம்

வஞ்ச மால் அதில் நெஞ்சு போய் மடிகின்ற
மாயம் அது – ஒழியாதோ

கொண்டல் ஆர் குழல் கெண்டை போல் விழி
கொண்டு கோகில – மொழி கூறும்

கொங்கையாள் குற மங்கை வாழ் தரு
குன்றில் மால் கொடு – செலும் வேலா

வெண்டி மா மனம் மண்டு சூர் கடல்
வெம்ப மேதினி – தனில் மீளா

வென்று யாவையும் அன்றி வேளையும்
வென்று மேவிய – பெருமாளே.

English

kaNdu pOlmozhi vaNdu sErkuzhal
kaNkaL sElmathi – mukamvEythOL

kaNdu pAvanai koNdu thOLkaLi
loNdu kAthali – lirukOdu

maNdi mArpinil viNda thAmena
vantha kUrmulai – madavArtham

vanja mAlathil nenju pOymadi
kinRa mAyama – thozhiyAthO

koNda lArkuzhal keNdai pOlvizhi
koNdu kOkila – mozhikURung

kongai yALkuRa mangai vAzhtharu
kunRil mAlkodu – selumvElA

veNdi mAmana maNdu cUrkadal
vempa mEthini – thanilmeeLA

venRu yAvaiyu manRi vELaiyum
venRu mEviya – perumALE.

English Easy Version

kaNdu pOl mozhi vaNdu sEr kuzhal
kaNkaL sEl mathi – mukam vEy thOL

kaNdu pAvanai koNdu thOLkaLil
oNdu kAthalil – iru kOdu

maNdi mArpinil viNdathAm ena
vantha kUr mulai – madavAr tham

vanja mAl athil nenju pOy madikinRa
mAyam athu – ozhiyAthO

koNdal Ar kuzhal keNdai pOl vizhi
koNdu kOkila – mozhi kURum

kongaiyAL kuRa mangai vAzh tharu
kunRil mAl kodu – selum vElA

veNdi mA manam maNdu cUr kadal
vempa mEthini – thanil meeLA

venRu yAvaiyum anRi vELaiyum
venRu mEviya – perumALE