Thiruppugal 1229 Kapparaikaikkola
மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
– மயூரகிரிநாதனுக்கு அரோகரா –
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –
பாடல்
தத்தன தத்தன தத்தன தத்தன
தத்தன தத்தன – தனதான
கப்பரை கைக்கொள வைப்பவர் மைப்பயில்
கட்பயி லிட்டிள – வளவோரைக்
கைக்குள்வ சப்பட பற்கறை யிட்டுமு
கத்தைமி னுக்கிவ – ருமுபாயப்
பப்பர மட்டைகள் பொட்டிடு நெற்றியர்
பற்றென வுற்றவொர் – தமியேனைப்
பத்மப தத்தினில் வைத்தருள் துய்த்திரை
பட்டதெ னக்கினி – யமையாதோ
குப்பர வப்படு பட்சமி குத்துள
முத்தரை யர்க்கொரு – மகவாகிக்
குத்திர மற்றுரை பற்றுணர் வற்றவொர்
குற்றம றுத்திடு – முதல்வோனே
விப்ரமு னிக்குழை பெற்றகொ டிச்சிவி
சித்ரத னக்கிரி – மிசைதோயும்
விக்ரம மற்புய வெற்பினை யிட்டெழு
வெற்பைநெ ருக்கிய – பெருமாளே.
பதம் பிரித்தது
தத்தன தத்தன தத்தன தத்தன
தத்தன தத்தன – தனதான
கப்பரை கைக் கொள வைப்பவர் மைப் பயில்
கண் பயிலிட்டு இள – வளவோரைக்
கைக்குள் வசப் பட பல் கறை இட்டு
முகத்தை மினுக்கி வரும் – உபாயப்
பப்பர மட்டைகள் பொட்டு இடு நெற்றியர்
பற்று என உற்ற ஒர் – தமியேனை
பத்ம பதத்தினில் வைத்து அருள் துய்த்து இரை
பட்டது எனக்கு இனி – அமையாதோ
குப் பரவப் படு பட்ச மிகுத்துள
முத்தரையர்க்கு ஒரு – மகவு ஆகி
குத்திரம் அற்று உரை பற்று உணர்வு அற்ற ஒர்
குற்றம் அறுத்திடு – முதல்வோனே
விப்ர முனிக்கு உழை பெற்ற கொடிச்சி விசித்ர
தனக் கிரி – மிசை தோயும்
விக்ரம மல் புய வெற்பினை இட்டு எழு
வெற்பை நெருக்கிய – பெருமாளே.
English
kapparai kaikkoLa vaippavar maippayil
katpayi littiLa – vaLavOraik
kaikkuLva sappada paRkaRai yittumu
kaththaimi nukkiva – rumupAyap
pappara mattaikaL pottidu netRiyar
patRena vutRavor – thamiyEnaip
pathmapa thaththinil vaiththaruL thuyththirai
pattathe nakkini – yamaiyAthO
kuppara vappadu patchami kuththuLa
muththarai yarkkoru – makavAkik
kuththira matRurai patRuNar vatRavor
kutRama Ruththidu – muthalvOnE
vipramu nikkuzhai petRako dicchivi
sithratha nakkiri – misaithOyum
vikrama maRpuya veRpinai yittezhu
veRpaine rukkiya – perumALE.
English Easy Version
kapparai kaik koLa vaippavar maip payil
kaN payilittu iLa – vaLavOraik
kaikkuL vasap pada pal kaRai ittu
mukaththai minukki varum – upAyap
pappara mattaikaL pottu idu netRiyar
patRu ena utRa or – thamiyEnai
pathma pathaththinil vaiththu aruL thuyththu irai
pattathu enakku ini – amaiyAthO
kup paravap padu patcha mikuththuLa
muththaraiyarkku oru – makavu Aki
kuththiram atRu urai patRu uNarvu atRa or
kutRam aRuththidu – muthalvOnE
vipra munikku uzhai petRa kodicchi visithra
thanak kiri – misai thOyum
vikrama mal puya veRpinai ittu ezhu
veRpai nerukkiya – perumALE.