Thiruppugal 1230 Kalaikottuvalli
மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
– மயூரகிரிநாதனுக்கு அரோகரா –
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –
பாடல்
தனதாத்த தய்ய தனதாத்த தய்ய
தனதாத்த தய்ய – தனதான
கலைகோட்டு வல்லி விலைகாட்டு வில்ல
ரிவைமார்க்கு மெய்யி – லவநூலின்
கலைகாட்டு பொய்ய மலைமாக்கள் சொல்ல
கடுகாட்டி வெய்ய – அதிபாரக்
கொலைகோட்டு கள்ளி டறிவோர்க்கு முள்ள
முகையாக்கை நையு – முயிர்வாழக்
கொடிகோட்டு மல்லி குரவார்க்கொள் தொல்லை
மறைவாழ்த்து செய்ய – கழல்தாராய்
சிலைகோட்டு மள்ளர் தினைகாத்த கிள்ளை
முலைவேட்ட பிள்ளை – முருகோனே
திணிகோட்டு வெள்ளி பவனாட்டி லுள்ள
சிறைமீட்ட தில்ல – மயில்வீரா
அலைகோட்டு வெள்ள மலைமாக்கள் விள்ள
மலைவீழ்த்த வல்ல – அயில்மோகா
அடிபோற்றி யல்லி முடிசூட்ட வல்ல
அடியார்க்கு நல்ல – பெருமாளே.
பதம் பிரித்தது
தனதாத்த தய்ய தனதாத்த தய்ய
தனதாத்த தய்ய – தனதான
கலை கோட்டு வல்லி விலை காட்டு வில்
அரிவைமார்க்கு மெய்யில் – அவ நூலின்
கலை காட்டு பொய்ய மலைமாக்கள் சொல்ல
கடு காட்டி வெய்ய – அதி பாரக்
கொலை கோட்டு கள் இடு அறிவோர்க்கும் உள்ள
முகை யாக்கை நையும் – உயிர் வாழ
கொடி கோட்டு மல்லி குரவார்க் கொள் தொல்லை
மறை வாழ்த்து செய்ய – கழல் தாராய்
சிலை கோட்டு மள்ளர் தினை காத்த கிள்ளை
முலை வேட்ட பிள்ளை – முருகோனே
திணி கோட்டு வெள் இபவன் நாட்டிலுள்ள
சிறை மீட்ட தில்ல(ம்) – மயில் வீரா
அலை கோட்டு வெள்ள(ம்) மலை மாக்கள் விள்ள
மலை வீழ்த்த வல்ல – அயில் மோகா
அடி போற்றி அல்லி முடி சூட்ட வல்ல
அடியார்க்கு நல்ல – பெருமாளே.
English
kalaikOttu valli vilaikAttu villa
rivaimArkku meyyi – lavanUlin
kalaikAttu poyya malaimAkkaL solla
kadukAtti veyya – athipArak
kolaikOttu kaLLi daRivOrkku muLLa
mukaiyAkkai naiyu – muyirvAzhak
kodikOttu malli kuravArkkoL thollai
maRaivAzhththu seyya – kazhalthArAy
silaikOttu maLLar thinaikAththa kiLLai
mulaivEtta piLLai – murukOnE
thiNikOttu veLLi pavanAtti luLLa
siRaimeetta thilla – mayilveerA
alaikOttu veLLa malaimAkkaL viLLa
malaiveezhththa valla – ayilmOkA
adipOtRi yalli mudicUtta valla
adiyArkku nalla – perumALE.
English Easy Version
kalai kOttu valli vilai kAttu vil
arivaimArkku meyyil – ava nUlin
kalai kAttu poyya malaimAkkaL solla
kadu kAtti veyya – athi pArak
kolai kOttu kaL idu aRivOrkkum uLLa
mukai yAkkai naiyum – uyir vAzha
kodi kOttu malli kuravArk koL thollai
maRai vAzhththu seyya – kazhal thArAy
silai kOttu maLLar thinai kAththa kiLLai
mulai vEtta piLLai – murukOnE
thiNi kOttu veL ipavan nAttiluLLa
siRai meetta thilla(m) – mayil veerA
alai kOttu veLLa(m) malai mAkkaL viLLa
malai veezhththa valla – ayil mOkA
adi pOtRi alli mudi cUtta valla
adiyArkku nalla – perumALE,