Thiruppugal 1231 Kalavukondu
மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
– மயூரகிரிநாதனுக்கு அரோகரா –
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –
பாடல்
தனன தந்த தத்தான தனன தந்த தத்தான
தனன தந்த தத்தான – தனதான
களவு கொண்டு கைக்காசி னளவ றிந்து கர்ப்பூர
களப துங்க வித்தார – முலைமீதே
கலவி யின்பம் விற்பார்க ளவய வங்க ளைப்பாடு
கவிதெ ரிந்து கற்பார்கள் – சிலர்தாமே
உளநெ கிழ்ந்த சத்தான வுரைம றந்து சத்தான
உனையு ணர்ந்து கத்தூரி – மணநாறும்
உபய பங்க யத்தாளி லபய மென்று னைப்பாடி
யுருகி நெஞ்சு சற்றோதி – லிழிவாமோ
அளவில் வன்க விச்சேனை பரவ வந்த சுக்ரீவ
அரசு டன்க டற்றூளி – யெழவேபோய்
அடலி லங்கை சுட்டாடி நிசிச ரன்த சக்ரீவ
மறவொ ரம்பு தொட்டார்த – மருகோனே
வளரு மந்த ரச்சோலை மிசைசெ றிந்த முற்பாலை
வனசர் கொம்பி னைத்தேடி – யொருவேட
வடிவு கொண்டு பித்தாகி யுருகி வெந்த றக்கானில்
மறவர் குன்றி னிற்போன – பெருமாளே.
பதம் பிரித்தது
தனன தந்த தத்தான தனன தந்த தத்தான
தனன தந்த தத்தான – தனதான
களவு கொண்டு கைக் காசின் அளவு அறிந்து கர்ப்பூர
களப துங்க வித்தார – முலை மீதே
கலவி இன்பம் விற்பார்கள் அவயவங்களைப் பாடு
கவி தெரிந்து கற்பார்கள் – சிலர் தாமே
உள(ம்) நெகிழ்ந்து அசத்தான உரை மறந்து சத்தான
உனை உணர்ந்து கத்தூரி – மண(ம்) நாறும்
உபய பங்கயத் தாளில் அபயம் என்று உனைப் பாடி .
உருகி நெஞ்சு சற்று ஓதில் – இழிவாமோ
அளவு இல் வன் கவிச் சேனை பரவ வந்த சுக்ரீவ
அரசுடன் கடல் தூளி – எழவே போய்
அடல் இலங்கை சுட்டு ஆடி நிசிசரன் தச க்ரீவம்
அற ஒரம்பு தொட்டார்த(ம்) – மருகோனே
வளரும் மந்தரச் சோலை மிசை செறிந்த முன் பாலை
வனசர் கொம்பினைத் தேடி- ஒரு வேட
வடிவு கொண்டு பித்தாகி உருகி வெந்து அறக் கானில்
மறவர் குன்றினில் போன – பெருமாளே.
English
kaLavu koNdu kaikkAsi naLava Rinthu karppUra
kaLapa thunga viththAra – mulaimeethE
kalavi yinpam viRpArka Lavaya vanga LaippAdu
kavithe rinthu kaRpArkaL – silarthAmE
uLane kizhntha saththAna vuraima Ranthu saththAna
unaiyu Narnthu kaththUai – maNanARum
upaya panga yaththALi lapaya menRu naippAdi
yuruki nenju satROthi – lizhivAmO
aLavil vanka vicchEnai parava vantha sukreeva
arasu danka datRULi – yezhavEpOy
adali langai suttAdi nisisa rantha sakreeva
maRavo rampu thottArtha – marukOnE
vaLaru mantha racchOlai misaise Rintha muRpAlai
vanasar kompi naiththEdi – yoruvEda
vadivu koNdu piththAki yuruki ventha RakkAnil
maRavar kunRi niRpOna – perumALE.
English Easy Version
kaLavu koNdu kaik kAsin aLavu aRinthu karppUra
kaLapa thunga viththAra – mulai meethE
kalavi inpam viRpArkaL avayavangaLaip pAdu
kavi therinthu kaRpArkaL – silar thAmE
uLa(m) nekizhnthu asaththAna urai maRanthu saththAna
unai uNarnthu kaththUri – maNa(m) nARum
upaya pangayath thALil apayam enRu unaip pAdi
uruki nenju satRu Othil – izhivAmO
aLavu il van kavic chEnai parava vantha sukreeva
arasudan kadal thULi – ezhavE pOy
adal ilangai suttu Adi nisisaran thasa kreevam
aRa orampu thottArtha(m) – marukOnE
vaLarum mantharac chOlai misai seRintha mun pAlai
vanasar kompinaith thEdi – oru vEda
vadivu koNdu piththAki uruki venthu aRak kAnil
maRavar kunRinil pOna – perumALE,