திருப்புகழ் 1232 கள்ள மீனச் சுறவு (பொதுப்பாடல்கள்)

Thiruppugal 1232 Kallameenachchuravu

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தய்யனா தத்ததன தய்யனா தத்ததன
தய்யனா தத்ததன – தனதான

கள்ளமீ னச்சுறவு கொள்ளுமீ னற்பெரிய
கல்விவீ றக்கரிய – மனமாகுங்

கல்விடா துற்றதிசை சொல்விசா ரத்திசைய
மெய்கள்தோ ணிப்பிறவி – யலைவேலை

மெள்ளஏ றிக்குரவு வெள்ளிலார் வெட்சிதண
முல்லைவே ருற்பலமு – ளரிநீபம்

வில்லநீள் பொற்கனக வல்லிமே லிட்டுனது
சொல்லையோ திப்பணிவ – தொருநாளே

துள்ளுமா னித்தமுனி புள்ளிமான் வெற்புதவு
வள்ளிமா னுக்குமயல் – மொழிவோனே

தொல்வியா ளத்துவளர் செல்வர்யா கத்தரையன்
எல்லைகா ணற்கரியர் – குருநாதா

தெள்ளுநா தச்சுருதி வள்ளல்மோ லிப்புடைகொள்
செல்வனே முத்தமிணர் – பெருவாழ்வே

தெய்வயா னைக்கிளைய வெள்ளையா னைத்தலைவ
தெய்வயா னைக்கினிய – பெருமாளே.

பதம் பிரித்தது

தய்யனா தத்ததன தய்யனா தத்ததன
தய்யனா தத்ததன – தனதான

கள்ள மீனச் சுறவு கொள்ளும் மீனம் பெரிய
கல்வி வீற கரிய – மனமாகும்

கல் விடாது உற்ற திசை சொல் விசாரத்து இசைய
மெய்கள் தோணிப் பிறவி – அலை வேலை

மெள்ள ஏறி குரவு வெள்ளில் ஆர் வெட்சி தண் அ(ம்)
முல்லை வேர் உற்பலம் – முளரி நீபம்

வில்ல(ம்) நீள் பொன் கனகம் அல்லி மேல் இட்டு உனது
சொல்லை ஓதிப் பணிவது – ஒரு நாளே

துள்ளும் மால் நித்த முனி புள்ளி மான் வெற்பு உதவு
வள்ளி மானுக்கு மயல் – மொழிவோனே

தொல் வியாளத்து வளர் செல்வர் யாகத்து அரையன்
எல்லை காணற்கு அரியர் – குருநாதா

தெள்ளு நாதச் சுருதி வள்ளல் மோலிப் புடை கொள்
செல்வனே முத்தமி(ழ்)ணர் – பெரு வாழ்வே

தெய்வ யானைக்கு இளைய வெள்ளை யானைத் தலைவ
தெய்வ யானைக்கு இனிய – பெருமாளே.

English

kaLLamee nacchuRavu koLLumee naRperiya
kalvivee Rakkariya – manamAkum

kalvidA thutRathisai solvisA raththisaiya
meykaLthO NippiRavi – yalaivElai

meLLaE Rikkuravu veLLilAr vetchithaNa
mullaivE ruRpalamu – Larineepam

villaneeL poRkanaka vallimE littunathu
sollaiyO thippaNiva – thorunALE

thuLLumA niththamuni puLLimAn veRputhavu
vaLLimA nukkumayal – mozhivOnE

tholviyA LaththuvaLar selvaryA kaththaraiyan
ellaikA NaRkariyar – gurunAthA

theLLunA thacchuruthi vaLLalmO lippudaikoL
selvanE muththamiNar – peruvAzhvE

theyvayA naikkiLaiya veLLaiyA naiththalaiva
theyvayA naikkiniya – perumALE.

English Easy Version

kaLLa meenac chuRavu koLLum meenam periya
kalvi veeRa kariya – manamAkum

kal vidAthu utRa thisai sol visAraththu isaiya
meykaL thONip piRavi – alai vElai

meLLa ERi kuravu veLLil Ar vetchi thaN a(m)
mullai vEr uRpalam – muLari neepam

villa(m) neeL pon kanakam alli mEl ittu unathu
sollai Othip paNivathu – oru nALE

thuLLum mAl niththa muni puLLi mAn veRpu uthavu
vaLLi mAnukku mayal – mozhivOnE

thol viyALaththu vaLar selvar yAkaththu araiyan
ellai kANaRku ariyar – gurunAthA

theLLu nAthac churuthi vaLLal mOlip pudai koL
selvanE muththami(zh)Nar – peru vAzhvE

theyva yAnaikku iLaiya veLLai yAnaith thalaiva
theyva yAnaikku iniya – perumALE