Thiruppugal 1233 Kanniyarkaduvidam
மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
– மயூரகிரிநாதனுக்கு அரோகரா –
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –
பாடல்
தன்னன தனதன தன்னன தனதன
தன்னன தனதன – தனதான
கன்னியர் கடுவிட மன்னிய கயலன
கண்ணிலு மிருகன – தனமீதுங்
கன்மைகள் மருவிய மன்மத னுருவிலி
மென்மைகொ ளுருவிலு – மயலாகி
இன்னல்செய் குடிலுட னின்னமு முலகினி
லிந்நிலை பெறவிங – னுதியாதே
யெண்ணுமு னடியவர் நண்ணிய பதமிசை
யென்னையும் வழிபட – விடவேணும்
பொன்னவ மணிபயில் மன்னவ புனமற
மின்முலை தழுவிய – புயவீரா
புண்ணிய முளபல விண்ணவர் தொழுமுதல்
எண்மலை யொடுபொரு – கதிர்வேலா
தன்னிறை சடையிறை யென்முனி பரவரு
இன்னிசை யுறுதமிழ் – தெரிவோனே
தண்ணளி தருமொரு பன்னிரு விழிபயில்
சண்முக மழகிய – பெருமாளே.
பதம் பிரித்தது
தன்னன தனதன தன்னன தனதன
தன்னன தனதன – தனதான
கன்னியர் கடு விட(ம்) மன்னிய கயல் அன
கண்ணிலும் இரு கன – தனம் மீதும்
கன்மைகள் மருவிய மன்மதன் உருவு இலி
மென்மை கொள் உருவிலும் – மயலாகி
இன்னல் செய் குடிலுடன் இன்னமும் உலகினில்
இந்நிலை பெற இ(ங்)ஙன் – உதியாதே
எண்ணும் உன் அடியவர் நண்ணிய பதம் மிசை
என்னையும் வழி பட- விடவேணும்
பொன் நவ மணி பயில் மன்னவ புன மற
மின் முலை தழுவிய – புயவீரா
புண்ணியம் உள பல விண்ணவர் தொழும் முதல்
எண் மலையொடு பொரு – கதிர்வேலா
தன் இறை சடை இறை என் முனி பரவ அரு
இன்னிசை உறு தமிழ் – தெரிவோனே
தண் அளி தரும் ஒரு பன்னிரு விழிபயில்
சண்முகம் அழகிய – பெருமாளே.
English
kanniyar kaduvida manniya kayalana
kaNNilu mirukana – thanameethum
kanmaikaL maruviya manmatha nuruvili
menmaiko Luruvilu – mayalAki
innalsey kudiluda ninnamu mulakini
linnilai peRavinga – nuthiyAthE
yeNNumu nadiyavar naNNiya pathamisai
yennaiyum vazhipada – vidavENum
ponnava maNipayil mannava punamaRa
minmulai thazhuviya – puyaveerA
puNNiya muLapala viNNavar thozhumuthal
eNmalai yoduporu – kathirvElA
thanniRai sadaiyiRai yenmuni paravaru
innisai yuRuthamizh – therivOnE
thaNNaLi tharumoru panniru vizhipayil
saNmuka mazhakiya – perumALE.
English Easy Version
kanniyar kadu vida(m) manniya kayal ana
kaNNilum iru kana – thanam meethum
kanmaikaL maruviya manmathan uruvu ili
menmai koL uruvilum – mayalAki
innal sey kudiludan innamum ulakinil
innilai peRa i(ng)ngan – uthiyAthE
eNNum un adiyavar naNNiya patham misai
ennaiyum vazhi pada – vidavENum
pon nava maNi payil mannava puna maRa
min mulai thazhuviya – puyaveerA
puNNiyam uLa pala viNNavar thozhum muthal
eN malaiyodu poru – kathirvElA
than iRai sadai iRai en muni parava aru
innisai uRu thamizh – therivOnE
thaN aLi tharum oru panniru vizhipayil
saNmukam azhakiya – perumALE