Thiruppugal 1234 Kinjugamena
மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
– மயூரகிரிநாதனுக்கு அரோகரா –
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –
பாடல்
தந்ததன தத்த தத்த தந்ததன தத்த தத்த
தந்ததன தத்த தத்த – தனதான
கிஞ்சுகமெ னச்சி வத்த தொண்டையள்மி கக்க றுத்த
கெண்டையள்பு னக்கொ டிச்சி – யதிபாரக்
கிம்புரிம ருப்பை யொத்த குங்குமமு லைக்கு றத்தி
கிங்கரனெ னப்ப டைத்த – பெயர்பேசா
நெஞ்சுருகி நெக்கு நெக்கு நின்றுதொழு நிர்க்கு ணத்தர்
நிந்தனையில் பத்தர் வெட்சி – மலர்தூவும்
நின்பதயு கப்ர சித்தி யென்பனவ குத்து ரைக்க
நின்பணித மிழ்த்ர யத்தை – யருள்வாயே
கஞ்சன்வர விட்ட துட்ட குஞ்சரம ருப்பொ சித்த
கங்கனும தித்தி கைக்க – மதம்வீசுங்
கந்தெறிக ளிற்று ரித்து வென்றுதிரு நட்ட மிட்ட
கம்பனும திக்க வுக்ர – வடிவேல்கொண்
டஞ்சியஜ கத்ர யத்தை யஞ்சலென விக்ர மித்து
அன்பர்புக ழப்பொ ருப்பொ – டமராடி
அன்றவுண ரைக்க ளத்தில் வென்றுததி யைக்க லக்கி
அண்டர்சிறை வெட்டி விட்ட – பெருமாளே.
பதம் பிரித்தது
தந்ததன தத்த தத்த தந்ததன தத்த தத்த
தந்ததன தத்த தத்த – தனதான
கிஞ்சுகம் எனச் சிவத்த தொண்டையள் மிகக் கறுத்த
கெண்டையள் புனக் கொடிச்சி – அதி பாரக்
கிம்புரி மருப்பை ஒத்த குங்கும முலைக் குறத்தி
கிங்கரன் எனப் படைத்த – பெயர் பேசா
நெஞ்சு உருகி நெக்கு நெக்கு நின்று தொழு நிர்க் குணத்தர்
நிந்தனை இல் பத்தர் வெட்சி – மலர் தூவும்
நின் பதயுக(ம்) ப்ரசித்தி என்பன வகுத்து உரைக்க
நின் பணி தமிழ் த்ரயத்தை – அருள்வாயே
கஞ்சன் வரவிட்ட துட்ட குஞ்சர மருப்பு ஒசித்த
கங்கனு(ம்) மதித் திகைக்க – மதம் வீசும்
கந்து எறி களிற்று உரித்து வென்று திரு நட்டம் இட்ட
கம்பனும் மதிக்க உக்ர – வடி வேல் கொண்டு
அஞ்சிய ஜக த்ரயத்தை அஞ்சல் என விக்ரமித்து
அன்பர் புகழப் பொருப்பொடு – அமர் ஆடி
அன்று அவுணரைக் களத்தில் வென்று உததியைக் கலக்கி
அண்டர் சிறை வெட்டி விட்ட – பெருமாளே.
English
kinjukame nacchi vaththa thoNdaiyaLmi kakka Ruththa
keNdaiyaLpu nakko dicchi – yathipArak
kimpurima ruppai yoththa kungumamu laikku Raththi
kingarane nappa daiththa – peyarpEsA
nenjuruki nekku nekku ninRuthozhu nirkku Naththar
ninthanaiyil paththar vetchi – malarthUvum
ninpathayu kapra siththi yenpanava kuththu raikka
ninpaNitha mizhthra yaththai – yaruLvAyE
kanjanvara vitta thutta kunjarama ruppo siththa
kanganuma thiththi kaikka – mathamveesum
kantheRika LitRu riththu venRuthiru natta mitta
kampanuma thikka vukra – vadivElkoN
danjiyaja kathra yaththai yanjalena vikra miththu
anparpuka zhappo ruppo – damarAdi
anRavuNa raikka Laththil venRuthathi yaikka lakki
aNdarsiRai vetti vitta – perumALE.
English Easy Version
kinjukam enas sivaththa thoNdaiyaL mikak kaRuththa keNdaiyaL punak kodicchi – athi pArak
kimpuri maruppai oththa kunguma mulaik kuRaththi
kingaran enap padaiththa – peyar pEsA
nenju uruki nekku nekku ninRu thozhu nirk kuNaththar
ninthanai il paththar vetchi – malar thUvum
nin pathayuka(m) prasiththi enpana vakuththu uraikka
nin paNi thamizh thrayaththai – aruLvAyE
kanjan varavitta thutta kunjara maruppu osiththa
kanganu(m) mathith thikaikka – matham veesum
kanthu eRi kaLitRu uriththu venRu thiru nattam itta
kampanum mathikka ukra – vadi vEl koNdu
anjiya jaka thrayaththai anjal ena vikramiththu
anpar pukazhap poruppodu – amar Adi
anRu avuNaraik kaLaththil venRu uthathiyaik kalakki
aNdar siRai vetti vitta – perumALE,