திருப்புகழ் 1235 குடிமை மனையாட்டி (பொதுப்பாடல்கள்)

Thiruppugal 1235 Kudimaimanaiyatti

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனதனன தாத்தன தனதனன தாத்தன
தனதனன தாத்தன – தனதான

குடிமைமனை யாட்டியும் அடிமையொடு கூட்டமும்
குலமுமிறு மாப்புமி – குதியான

கொடியபெரு வாழ்க்கையி லினியபொரு ளீட்டியெ
குருடுபடு மோட்டென – வுடல்வீழில்

அடைவுடைவி டாச்சிறு பழையதுணி போர்த்தியெ
அரிடசுடு காட்டிடை – யிடுகாயம்

அழியுமள வாட்டிலுன் அமலமலர் மாப்பத
அருணசர ணாஸ்பதம் – அருள்வாயே

அடியினொடு மாத்தரு மொளமொளமொ ளாச்சென
அலறிவிழ வேர்க்குல – மொடுசாய

அவுணர்படை தோற்பெழ அருவரைக ளார்ப்பெழ
அயிலலகு சேப்பெழ – மறைநாலும்

உடையமுனி யாட்பட முடுகவுணர் கீழ்ப்பட
உயரமரர் மேற்பட – வடியாத

உததிகம ராப்பிள முதுகுலிச பார்த்திபன்
உலகுகுடி யேற்றிய – பெருமாளே.

பதம் பிரித்தது

தனதனன தாத்தன தனதனன தாத்தன
தனதனன தாத்தன – தனதான

குடிமை மனையாட்டியும் அடிமையொடு கூட்டமும்
குலமும் இறுமாப்பும் – மிகுதியான

கொடிய பெரு வாழ்க்கையில் இனிய பொருள் ஈட்டியே
குருடுபடு மோட்டு என – உடல் வீழில்

அடைவு உடை விடாச் சிறு பழைய துணி போர்த்தியெ
அரிட(ம்) சுடு காட்டு இடை – இடு காயம்

அழியும் அளவாட்டில் உன் அமல மலர் மாப்பாத
அருண சரண ஆஸ்பதம் – அருள்வாயே

அடியினொடு மாத் தரு மொள மொள மொள ஆச்சு என
அலறி விழ வேர்க் – குலமொடு சாய

அவுணர் படை தோற்பு எழ அருவரைகள் ஆர்ப்பு எழ
அயில் அலகு சேப்பு எழ – மறை நாலும்

உடைய முனி ஆள் பட முடுகு அவுணர் கீழ்ப் பட
உயர் அமரர் மேற் பட – வடியாத

உததி கமராப் பிள முது குலிச பார்த்திபன்
உலகு குடி ஏற்றிய – பெருமாளே.

English

kudimaimanai yAttiyum adimaiyodu kUttamum
kulamumiRu mAppumi – kuthiyAna

kodiyaperu vAzhkkaiyi liniyaporu Leettiye
kurudupadu mOttena – vudalveezhil

adaivudaivi dAcciRu pazhaiyathuNi pOrththiye
aridasudu kAttidai – yidukAyam

azhiyumaLa vAttilun amalamalar mAppatha
aruNasara NAspatham – aruLvAyE

adiyinodu mAththaru moLamoLamo LAccena
alaRivizha vErkkula – modusAya

avuNarpadai thORpezha aruvaraika LArppezha
ayilalaku sEppezha – maRainAlum

udaiyamuni yAtpada mudukavuNar keezhppada
uyaramarar mERpada – vadiyAtha

uthathikama rAppiLa muthukulisa pArththipan
ulakukudi yEtRiya – perumALE.

English Easy Version

kudimaimanai yAttiyum adimaiyodu kUttamum
kulamumiRu mAppumi – kuthiyAna

kodiyaperu vAzhkkaiyi liniyaporu Leettiye
kurudupadu mOttena – vudalveezhil

adaivudaivi dAcciRu pazhaiyathuNi pOrththiye
aridasudu kAttidai – yidukAyam

azhiyumaLa vAttil un amalamalar mAppatha
aruNasara NAspatham – aruLvAyE

adiyinodu mAththaru moLamoLamo LAccena
alaRivizha vErkkula – modusAya

avuNarpadai thORpezha aruvaraika LArppezha
ayilalaku sEppezha – maRainAlum

udaiyamuni yAtpada mudukavuNar keezhppada
uyaramarar mERpada – vadiyAtha

uthathikama rAppiLa muthukulisa pArththipan
ulakukudi yEtRiya – perumALE.