Thiruppugal 1236 Kuraivadhuindri
மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
– மயூரகிரிநாதனுக்கு அரோகரா –
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –
பாடல்
தனன தந்த தத்த தனன தந்த தத்த
தனன தந்த தத்த – தனதான
குறைவ தின்றி மிக்க சலமெ லும்பு துற்ற
குடிலி லொன்றி நிற்கு – முயிர்மாயம்
குலைகு லைந்து தெர்ப்பை யிடைநி னைந்து நிற்ப
கொடிய கொண்ட லொத்த – வுருவாகி
மறலி வந்து துட்ட வினைகள் கொண்ட லைத்து
மரண மென்ற துக்க – மணுகாமுன்
மனமி டைஞ்ச லற்று னடிநி னைந்து நிற்க
மயிலில் வந்து முத்தி – தரவேணும்
அறுகு மிந்து மத்த மலையெ றிந்த அப்பு
மளிசி றந்த புட்ப – மதுசூடி
அருந டஞ்செ யப்ப ரருளி ரங்கு கைக்கு
அரிய இன்சொல் செப்பு – முருகோனே
சிறுகு லந்த னக்கு ளறிவு வந்து தித்த
சிறுமி தன்த னத்தை – யணைமார்பா
திசைமு கன்தி கைக்க அசுர ரன்ற டைத்த
சிறைதி றந்து விட்ட – பெருமாளே.
பதம் பிரித்தது
தனன தந்த தத்த தனன தந்த தத்த
தனன தந்த தத்த – தனதான
குறைவது இன்றி மிக்க சலம் எலும்பு (அ)து உற்ற
குடிலில் ஒன்றி நிற்கும் – உயிர் மாயம்
குலை குலைந்து தெர்ப்பை இடை நினைந்து நிற்ப
கொடிய கொண்டல் ஒத்த – உருவாகி
மறலி வந்து துட்ட வினைகள் கொண்டு அலைத்து
மரணம் என்ற துக்கம் – அணுகா முன்
மனம் இடைஞ்சல் அற்று உன் அடி நினைந்து நிற்க
மயிலில் வந்து முத்தி – தர வேணும்
அறுகும் இந்து மத்தம் அலை எறிந்த அப்பும்
அளி சிறந்த புட்பம் – அது சூடி
அரு நடம் செய் அப்பர் அருள் இரங்குகைக்கு
அரிய இன் சொல் செப்பு – முருகோனே
சிறு குலம் தனக்குள் அறிவு வந்து உதித்த
சிறுமி தன் தனத்தை – அணை மார்பா
திசை முகன் திகைக்க அசுரர் அன்று அடைத்த
சிறை திறந்து விட்ட – பெருமாளே.
English
kuRaiva thinRi mikka salame lumpu thutRa
kudili lonRi niRku – muyirmAyam
kulaiku lainthu therppai yidaini nainthu niRpa
kodiya koNda loththa – vuruvAki
maRali vanthu thutta vinaikaL koNda laiththu
maraNa menRa thukka – maNukAmun
manami dainja latRu nadini nainthu niRka
mayilil vanthu muththi – tharavENum
aRuku minthu maththa malaiye Rintha appu
maLisi Rantha putpa – mathucUdi
aruna damce yappa raruLi rangu kaikku
ariya insol seppu – murukOnE
siRuku lantha nakku LaRivu vanthu thiththa
siRumi thantha naththai – yaNaimArpA
thisaimu kanthi kaikka asura ranRa daiththa
siRaithi Ranthu vitta – perumALE.
English Easy Version
kuRaivathu inRi mikka salam elumpu (a)thu utRa
kudilil onRi niRkum – uyir mAyam
kulai kulainthu therppai idai ninainthu niRpa
kodiya koNdal oththa – uruvAki
maRali vanthu thutta vinaikaL koNdu alaiththu
maraNam enRa thukkam – aNukA mun
manam idainjal atRu un adi ninainthu niRka
mayilil vanthu muththi – thara vENum
aRukum inthu maththam alai eRintha appum
aLi siRantha putpam – athu cUdi
aru nadam sey appar aruL irangukaikku
ariya in sol seppu – murukOnE
siRu kulam thanakkuL aRivu vanthu uthiththa
siRumi than thanaththai – aNai mArpA
thisai mukan thikaikka asurar anRu adaiththa
siRai thiRanthu vitta – perumALE.